Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௧௦

Qur'an Surah Al-Ahqaf Verse 10

ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اَرَءَيْتُمْ اِنْ كَانَ مِنْ عِنْدِ اللّٰهِ وَكَفَرْتُمْ بِهٖ وَشَهِدَ شَاهِدٌ مِّنْۢ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ عَلٰى مِثْلِهٖ فَاٰمَنَ وَاسْتَكْبَرْتُمْۗ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ ࣖ (الأحقاف : ٤٦)

qul
قُلْ
Say
கூறுவீராக!
ara-aytum
أَرَءَيْتُمْ
"Do you see
அறிவியுங்கள்
in kāna
إِن كَانَ
if it is
இது இருந்தால்
min ʿindi l-lahi
مِنْ عِندِ ٱللَّهِ
from Allah from Allah from Allah
அல்லாஹ்விடமிருந்து
wakafartum bihi
وَكَفَرْتُم بِهِۦ
and you disbelieve in it
இன்னும் நீங்கள் நிராகரித்து விட்டால்/இதை
washahida
وَشَهِدَ
and testifies
இன்னும் சாட்சியும் கூறினார்
shāhidun
شَاهِدٌ
a witness
ஒரு சாட்சியாளர்
min banī is'rāīla
مِّنۢ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
from (the) Children of Israel (the) Children of Israel
இஸ்ரவேலர்களில் உள்ள
ʿalā mith'lihi
عَلَىٰ مِثْلِهِۦ
to (the) like thereof
இதுபோன்ற ஒன்றுக்கு
faāmana
فَـَٔامَنَ
then he believed
அவர் நம்பிக்கை கொண்டிருக்க
wa-is'takbartum
وَٱسْتَكْبَرْتُمْۖ
while you are arrogant?"
நீங்களோ பெருமை அடித்தீர்கள்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
(does) not guide
நேர்வழி காட்ட மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
the people
மக்களுக்கு
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
the wrongdoers
அநியாயக்கார(ர்கள்)

Transliteration:

Qul ara'aytum in kaana min 'indil laahi wa kafartum bihee wa shahida shaahidum mim Banee Israaa'eela 'alaa mislihee fa aamana wastak bartum innal laaha laa yahdil qawmaz zaalimeen (QS. al-ʾAḥq̈āf:10)

English Sahih International:

Say, "Have you considered: if it [i.e., the Quran] was from Allah, and you disbelieved in it while a witness from the Children of Israel has testified to something similar and believed while you were arrogant...?" Indeed, Allah does not guide the wrongdoing people. (QS. Al-Ahqaf, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(யூதர்களே! இவ்வேதம்) அல்லாஹ்விடம் இருந்தே வந்திருக்க, அதனை நீங்கள் நிராகரித்து விட்டீர்களே! (உங்கள் இனத்தைச் சார்ந்த) இஸ்ராயீலின் சந்ததிகளிலுள்ள ஒருவர், இதைப்போன்ற ஒரு வேதம் வர வேண்டியதிருக்கின்றது என்று சாட்சியம் கூறி, அதனை அவர் நம்பிக்கை கொண்டுமிருக்க, நீங்கள் பெருமைகொண்டு (இதனை நிராகரித்து) விட்டால், (உங்களுடைய கதி) என்னவாகும் என்பதை கவனித்தீர்களா? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்தமாட்டான்." (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௧௦)

Jan Trust Foundation

“இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியானவர் இது போன்றது (வர வேண்டியிருந்தது) என்பதில் சாட்சியங்கூறி ஈமான் கொண்டிருக்கும் போது இதனை நீங்கள் நிராகரித்து பெருமை அடித்துக் கொண்டால் (உங்கள் நிலை என்னவாகும் என்பதை) நீங்கள் கவனித்தீர்களா?” என்று நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார சமூகத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! இது (-இந்த வேதம்) அல்லாஹ்விடமிருந்து (வந்ததாக) இருந்தால், இஸ்ரவேலர்களில் உள்ள ஒரு சாட்சியாளர் இது போன்ற ஒன்றுக்கு சாட்சியும் கூறி, (அவர் இதை) நம்பிக்கை கொண்டிருக்க, (ஆனால்,) நீங்களோ பெருமை அடித்து, இதை நீங்கள் நிராகரித்து விட்டால்... (இதை விட பெரிய அநியாயம் வேறென்ன இருக்க முடியும்?) நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.