Skip to content

ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் - Page: 4

Al-Ahqaf

(al-ʾAḥq̈āf)

௩௧

يٰقَوْمَنَآ اَجِيْبُوْا دَاعِيَ اللّٰهِ وَاٰمِنُوْا بِهٖ يَغْفِرْ لَكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَيُجِرْكُمْ مِّنْ عَذَابٍ اَلِيْمٍ ٣١

yāqawmanā
يَٰقَوْمَنَآ
எங்கள் சமுதாயமே!
ajībū
أَجِيبُوا۟
பதில் தாருங்கள்!
dāʿiya
دَاعِىَ
அழைப்பாளருக்கு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
waāminū
وَءَامِنُوا۟
இன்னும் நம்பிக்கை கொள்ளுங்கள்
bihi
بِهِۦ
அவரை
yaghfir
يَغْفِرْ
அவன் மன்னிப்பான்
lakum
لَكُم
உங்களுக்கு
min dhunūbikum
مِّن ذُنُوبِكُمْ
உங்கள் பாவங்களை
wayujir'kum
وَيُجِرْكُم
இன்னும் உங்களை பாதுகாப்பான்
min ʿadhābin
مِّنْ عَذَابٍ
தண்டனையிலிருந்து
alīmin
أَلِيمٍ
வலி தரக்கூடிய(து)
எங்களுடைய இனத்தார்களே! அல்லாஹ்வின் அளவில் அழைப்பவர்களுக்குப் பதில் கூறி, அவரை நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுடைய பாவங்களை (அல்லாஹ்) மன்னித்தும் விடுவான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களை காப்பாற்றுவான். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௩௧)
Tafseer
௩௨

وَمَنْ لَّا يُجِبْ دَاعِيَ اللّٰهِ فَلَيْسَ بِمُعْجِزٍ فِى الْاَرْضِ وَلَيْسَ لَهٗ مِنْ دُوْنِهٖٓ اَوْلِيَاۤءُ ۗ اُولٰۤىِٕكَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ٣٢

waman
وَمَن
எவர்
lā yujib
لَّا يُجِبْ
பதில் தரவில்லையோ
dāʿiya
دَاعِىَ
அழைப்பாளருக்கு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
falaysa bimuʿ'jizin
فَلَيْسَ بِمُعْجِزٍ
அவர் தப்பித்துவிட மாட்டார்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
walaysa
وَلَيْسَ
இல்லை
lahu
لَهُۥ
அவருக்கு
min dūnihi
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
awliyāu
أَوْلِيَآءُۚ
பாதுகாவலர்கள்
ulāika
أُو۟لَٰٓئِكَ
இப்படிப்பட்டவர்கள்
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில் இருக்கின்றனர்
mubīnin
مُّبِينٍ
மிகத் தெளிவான
எவன் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறவில்லையோ (அவனை நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பான். தண்டனையில் இருந்து தப்ப) அவன் பூமியில் எங்கு ஓடிய போதிலும் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது. அல்லாஹ்வை யன்றி, அவனுக்கு பாதுகாப்பவர் ஒருவருமில்லை. (அவனைப் புறக்கணிக்கும்) இத்தகையவர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருப்பர்" என்றார்கள். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௩௨)
Tafseer
௩௩

اَوَلَمْ يَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَلَمْ يَعْيَ بِخَلْقِهِنَّ بِقٰدِرٍ عَلٰٓى اَنْ يُّحْيِ َۧ الْمَوْتٰى ۗبَلٰٓى اِنَّهٗ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ٣٣

awalam yaraw
أَوَلَمْ يَرَوْا۟
அவர்கள் கவனிக்கவில்லையா?
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
alladhī khalaqa
ٱلَّذِى خَلَقَ
படைத்தவன்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை(யும்)
wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமியையும்
walam yaʿya
وَلَمْ يَعْىَ
கலைத்து விடாதவனுமாகிய
bikhalqihinna
بِخَلْقِهِنَّ
அவற்றைபடைத்ததால்
biqādirin
بِقَٰدِرٍ
ஆற்றலுடையவன் (என்பதை)
ʿalā an
عَلَىٰٓ أَن
உயிர்ப்பிப்பதற்கு
yuḥ'yiya
يُحْۦِىَ
இறந்தவர்களை
l-mawtā
ٱلْمَوْتَىٰۚ
ஏன் இல்லை
balā
بَلَىٰٓ
நிச்சயமாக அவன்
innahu ʿalā
إِنَّهُۥ عَلَىٰ
எல்லாவற்றின் மீதும்
kulli shayin
كُلِّ شَىْءٍ
பேராற்றலுடையவன்
qadīrun
قَدِيرٌ
Err
வானங்களையும், பூமியையும் எவ்வித சிரமமின்றி படைத்த அல்லாஹ், மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நிச்சயமாக ஆற்றல் உடையவன்தான் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? நிச்சயமாக அவன் சகலவற்றிற்கும் ஆற்றலுடையவன். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௩௩)
Tafseer
௩௪

وَيَوْمَ يُعْرَضُ الَّذِيْنَ كَفَرُوْا عَلَى النَّارِۗ اَلَيْسَ هٰذَا بِالْحَقِّ ۗ قَالُوْا بَلٰى وَرَبِّنَا ۗقَالَ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ٣٤

wayawma
وَيَوْمَ
நாளில்
yuʿ'raḍu
يُعْرَضُ
கொண்டுவரப்படும்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
ʿalā l-nāri
عَلَى ٱلنَّارِ
நரகத்தின் முன்
alaysa
أَلَيْسَ
இல்லையா?
hādhā
هَٰذَا
இது
bil-ḥaqi
بِٱلْحَقِّۖ
உண்மையாக
qālū
قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
balā
بَلَىٰ
ஏன் இல்லை?
warabbinā
وَرَبِّنَاۚ
எங்கள் இறைவன் மீது சத்தியமாக
qāla
قَالَ
கூறுவான்
fadhūqū
فَذُوقُوا۟
நீங்கள் சுவையுங்கள்!
l-ʿadhāba
ٱلْعَذَابَ
இந்த வேதனையை
bimā kuntum
بِمَا كُنتُمْ
நீங்கள் இருந்த காரணத்தால்
takfurūna
تَكْفُرُونَ
நிராகரிப்பவர்களாக
நிராகரிப்பவர்களை நரகத்தின் முன் கொண்டு வரப்படும் நாளில் (அவர்களை நோக்கி,) "இது உண்மையல்லவா? (என்று கேட்கப்படும்.) அதற்கு அவர்கள் "எங்கள் இறைவன் மீது சத்தியமாக! உண்மைதான்" என்று கூறுவார்கள். (அதற்கவர்களை நோக்கி) "நீங்கள் இதனை நிராகரித்ததன் காரணமாக இதன் வேதனையை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருங்கள்" என்று கூறுவான். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௩௪)
Tafseer
௩௫

فَاصْبِرْ كَمَا صَبَرَ اُولُوا الْعَزْمِ مِنَ الرُّسُلِ وَلَا تَسْتَعْجِلْ لَّهُمْ ۗ كَاَنَّهُمْ يَوْمَ يَرَوْنَ مَا يُوْعَدُوْنَۙ لَمْ يَلْبَثُوْٓا اِلَّا سَاعَةً مِّنْ نَّهَارٍ ۗ بَلٰغٌ ۚفَهَلْ يُهْلَكُ اِلَّا الْقَوْمُ الْفٰسِقُوْنَ ࣖ ٣٥

fa-iṣ'bir
فَٱصْبِرْ
பொறுமை காப்பீராக!
kamā ṣabara
كَمَا صَبَرَ
பொறுத்தது போன்று
ulū l-ʿazmi
أُو۟لُوا۟ ٱلْعَزْمِ
மிகவும் வீரமிக்கவர்கள்
mina l-rusuli
مِنَ ٱلرُّسُلِ
தூதர்களில்
walā tastaʿjil lahum
وَلَا تَسْتَعْجِل لَّهُمْۚ
அவர்களுக்காக அவசரமாகக் கேட்காதீர்!
ka-annahum
كَأَنَّهُمْ
அவர்களுக்குத் தோன்றும்
yawma
يَوْمَ
நாளில்
yarawna
يَرَوْنَ
அவர்கள் பார்க்கின்ற(னர்)
mā yūʿadūna
مَا يُوعَدُونَ
அவர்கள் எச்சரிக்கப்பட்டதை
lam yalbathū
لَمْ يَلْبَثُوٓا۟
அவர்கள் தங்கவில்லை
illā sāʿatan
إِلَّا سَاعَةً
சில மணிநேரம் தவிர
min nahārin
مِّن نَّهَارٍۭۚ
பகலின்
balāghun
بَلَٰغٌۚ
இது எடுத்து சொல்லப்படும் செய்தியாகும்
fahal yuh'laku
فَهَلْ يُهْلَكُ
அழிக்கப்படுவார்களா?
illā l-qawmu
إِلَّا ٱلْقَوْمُ
மக்களைத் தவிர
l-fāsiqūna
ٱلْفَٰسِقُونَ
பாவிகளான
(நபியே!) நம்முடைய தூதர்களிலுள்ள வீரர்கள் (கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருந்தபடியே நீங்களும் சகித்துக் கொண்டு பொறுமையாக இருங்கள். அவர்களுக்கு (வேதனையை) நீங்கள் அவசரப்பட வேண்டாம். அவர்களுக்கு வாக்களிக்கப் பட்டதை அவர்கள் காணும் நாளில் (இப்புவியில்) ஒரு பகலில் ஒரு நாழிகையே தவிர (அதிகமாக)த் தங்கியிருக்கவில்லை என்று அவர்கள் எண்ணுவார்கள். (இதனை) அவர்களுக்கு (நீங்கள்) அறிவிக்க வேண்டும். ஆகவே, பாவம் செய்த மக்களைத் தவிர (மற்றெவரும்) அழிக்கப்படுவார்களா? (இல்லவே இல்லை.) ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௩௫)
Tafseer