Skip to content

ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் - Page: 3

Al-Ahqaf

(al-ʾAḥq̈āf)

௨௧

۞ وَاذْكُرْ اَخَا عَادٍۗ اِذْ اَنْذَرَ قَوْمَهٗ بِالْاَحْقَافِ وَقَدْ خَلَتِ النُّذُرُ مِنْۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖٓ اَلَّا تَعْبُدُوْٓا اِلَّا اللّٰهَ ۗاِنِّيْٓ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ ٢١

wa-udh'kur
وَٱذْكُرْ
நினைவு கூர்வீராக
akhā
أَخَا
சகோதரரை
ʿādin
عَادٍ
ஆது சமுதாயத்தின்
idh andhara
إِذْ أَنذَرَ
அவர் எச்சரித்த சமயத்தை
qawmahu
قَوْمَهُۥ
தனது மக்களை
bil-aḥqāfi
بِٱلْأَحْقَافِ
மணல் பாங்கான இடத்தில்
waqad
وَقَدْ
திட்டமாக
khalati
خَلَتِ
சென்றுள்ளனர்
l-nudhuru
ٱلنُّذُرُ
எச்சரிப்பாளர்கள்
min bayni yadayhi
مِنۢ بَيْنِ يَدَيْهِ
இவருக்கு முன்னரும்
wamin khalfihi
وَمِنْ خَلْفِهِۦٓ
இவருக்கு பின்னரும்
allā taʿbudū
أَلَّا تَعْبُدُوٓا۟
நீங்கள் வணங்காதீர்கள்
illā l-laha
إِلَّا ٱللَّهَ
அல்லாஹ்வை அன்றி
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
பயப்படுகிறேன்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
ʿadhāba
عَذَابَ
தண்டனையை
yawmin
يَوْمٍ
நாளின்
ʿaẓīmin
عَظِيمٍ
பெரிய(து)
(நபியே!) நீங்கள் (ஹூத் நபியாகிய) "ஆது" உடைய சகோதரரை நினைத்துப் பாருங்கள். அவருக்கு முன்னும், பின்னும் தூதர்கள் பலர் (அவர்களிடம்) வந்திருக்கின்றனர். தன்னுடைய மக்களை (அவர்) "அஹ்காஃப்" என்ற (மணற்பாங்கான) இடத்தில் (சந்தித்து அவர்களை நோக்கி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்து "அல்லாஹ்வையன்றி (மற்றெவரையும்) நீங்கள் வணங்காதீர்கள். (வணங்கினால்,) நிச்சயமாக மகத்தான நாளின் வேதனை உங்கள் மீது இறங்கி விடுமென்று நான் பயப்படுகின்றேன்" (என்றார்). ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௨௧)
Tafseer
௨௨

قَالُوْٓا اَجِئْتَنَا لِتَأْفِكَنَا عَنْ اٰلِهَتِنَاۚ فَأْتِنَا بِمَا تَعِدُنَآ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ ٢٢

qālū
قَالُوٓا۟
அவர்கள் கூறினர்
aji'tanā
أَجِئْتَنَا
நீர் எங்களிடம் வந்தீரா?
litafikanā
لِتَأْفِكَنَا
எங்களை திருப்புவதற்காக
ʿan ālihatinā
عَنْ ءَالِهَتِنَا
எங்கள் தெய்வங்களை விட்டு
fatinā bimā taʿidunā
فَأْتِنَا بِمَا تَعِدُنَآ
எங்களுக்கு நீர் எச்சரிக்கை செய்வதை எங்களிடம் கொண்டு வருவீராக!
in kunta
إِن كُنتَ
நீர் இருந்தால்
mina l-ṣādiqīna
مِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களில்
அதற்கவர்கள், "எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பி விடவா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? நீங்கள் மெய்யாகவே உண்மை சொல்பவராக இருந்தால், நீங்கள் எங்களைப் பயமுறுத்தும் வேதனையை நம்மிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௨௨)
Tafseer
௨௩

قَالَ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ ۖوَاُبَلِّغُكُمْ مَّآ اُرْسِلْتُ بِهٖ وَلٰكِنِّيْٓ اَرٰىكُمْ قَوْمًا تَجْهَلُوْنَ ٢٣

qāla
قَالَ
அவர் கூறினார்
innamā l-ʿil'mu
إِنَّمَا ٱلْعِلْمُ
அறிவெல்லாம்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்தான் இருக்கிறது.
wa-uballighukum
وَأُبَلِّغُكُم
உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன்
mā ur'sil'tu
مَّآ أُرْسِلْتُ
எதை/அனுப்பப்பட்டேன்
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
walākinnī
وَلَٰكِنِّىٓ
என்றாலும் நான்
arākum
أَرَىٰكُمْ
உங்களை கருதுகிறேன்
qawman
قَوْمًا
மக்களாக
tajhalūna
تَجْهَلُونَ
நீங்கள் அறியாத(வர்கள்)
அதற்கவர், (அவர்களை நோக்கி "உங்களுக்கு வேதனை எப்பொழுது அனுப்பப்படும் என்ற ஞான விஷயம்) எல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கின்றன. எவ்விஷயத்தை உங்களுக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேனோ, அதனையே நான் உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். ஆயினும், நீங்கள் அறிவில்லாத மக்கள் என்று நான் எண்ணுகின்றேன்" என்று கூறினார். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௨௩)
Tafseer
௨௪

فَلَمَّا رَاَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ اَوْدِيَتِهِمْ قَالُوْا هٰذَا عَارِضٌ مُّمْطِرُنَا ۗبَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُمْ بِهٖ ۗرِيْحٌ فِيْهَا عَذَابٌ اَلِيْمٌۙ ٢٤

falammā ra-awhu
فَلَمَّا رَأَوْهُ
அவர்கள் அதை பார்த்த போது
ʿāriḍan
عَارِضًا
அடர்த்தியான கார் மேகமாக
mus'taqbila
مُّسْتَقْبِلَ
முன்னோக்கி வரக்கூடிய(து)
awdiyatihim
أَوْدِيَتِهِمْ
தங்களது பள்ளத்தாக்கை
qālū
قَالُوا۟
கூறினார்கள்
hādhā
هَٰذَا
இது
ʿāriḍun
عَارِضٌ
அடர்த்தியான கார்மேகமாகும்
mum'ṭirunā
مُّمْطِرُنَاۚ
நமக்கு மழை பொழிவிக்கும்
bal huwa
بَلْ هُوَ
மாறாக இது
mā is'taʿjaltum
مَا ٱسْتَعْجَلْتُم
எதை/நீங்கள் அவசரமாகத் தேடினீர்கள்
bihi
بِهِۦۖ
அதை
rīḥun
رِيحٌ
(இது) ஒரு காற்றாகும்
fīhā
فِيهَا
இதில் உள்ளது
ʿadhābun
عَذَابٌ
தண்டனை
alīmun
أَلِيمٌ
வலி தரக்கூடிய(து)
பின்னர், (வேதனைக்கு அறிகுறியாக வந்த) மேகம் அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி வருவதை அவர்கள் காணவே, "இது எங்களுக்கு மழை பெய்ய வரும் மேகம்தான்" என்று கூறினார்கள். (அதற்கு அவர்களை நோக்கி) "அல்ல! இது நீங்கள் அவசரப்பட்ட வேதனைதான் என்றும், இது ஒரு காற்று; இதில் துன்புறுத்தும் வேதனை இருக்கின்றது" (என்றும் கூறப்பட்டது). ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௨௪)
Tafseer
௨௫

تُدَمِّرُ كُلَّ شَيْءٍۢ بِاَمْرِ رَبِّهَا فَاَصْبَحُوْا لَا يُرٰىٓ اِلَّا مَسٰكِنُهُمْۗ كَذٰلِكَ نَجْزِى الْقَوْمَ الْمُجْرِمِيْنَ ٢٥

tudammiru
تُدَمِّرُ
இது சின்னா பின்னமாக்கிவிடும்
kulla shayin
كُلَّ شَىْءٍۭ
எல்லாவற்றையும்
bi-amri
بِأَمْرِ
கட்டளைப்படி
rabbihā
رَبِّهَا
தனது இறைவனின்
fa-aṣbaḥū
فَأَصْبَحُوا۟
ஆகிவிட்டனர்
lā yurā
لَا يُرَىٰٓ
பார்க்க முடியாதபடி
illā
إِلَّا
தவிர
masākinuhum
مَسَٰكِنُهُمْۚ
அவர்களின் வசிப்பிடங்களை
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
najzī
نَجْزِى
கூலி கொடுப்போம்
l-qawma
ٱلْقَوْمَ
மக்களுக்கு
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளான
ஆகவே, அது தன் இறைவனின் கட்டளைப்படி எல்லாவற்றையும் அழித்து விட்டது. அவர்கள் இருந்த வீடுகளைத் தவிர, (அனைவரும் அழிந்து ஒருவருமே) காணப்படாமல் ஆகிவிட்டார்கள். இவ்வாறே குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் கூலி கொடுக்கின்றோம். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௨௫)
Tafseer
௨௬

وَلَقَدْ مَكَّنّٰهُمْ فِيْمَآ اِنْ مَّكَّنّٰكُمْ فِيْهِ وَجَعَلْنَا لَهُمْ سَمْعًا وَّاَبْصَارًا وَّاَفْـِٕدَةًۖ فَمَآ اَغْنٰى عَنْهُمْ سَمْعُهُمْ وَلَآ اَبْصَارُهُمْ وَلَآ اَفْـِٕدَتُهُمْ مِّنْ شَيْءٍ اِذْ كَانُوْا يَجْحَدُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ ࣖ ٢٦

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
makkannāhum
مَكَّنَّٰهُمْ
அவர்களுக்கு நாம் வசதியளித்தோம்
fīmā
فِيمَآ
எதில்
in makkannākum
إِن مَّكَّنَّٰكُمْ
உங்களுக்கு நாம் வசதியளிக்கவில்லை(யோ)
fīhi
فِيهِ
அதில்
wajaʿalnā
وَجَعَلْنَا
இன்னும் ஏற்படுத்தினோம்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
samʿan
سَمْعًا
செவியை(யும்)
wa-abṣāran
وَأَبْصَٰرًا
பார்வைகளையும்
wa-afidatan
وَأَفْـِٔدَةً
உள்ளங்களையும்
famā aghnā
فَمَآ أَغْنَىٰ
தடுக்கவில்லை
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டும்
samʿuhum
سَمْعُهُمْ
அவர்களின் செவி(யும்)
walā
وَلَآ
பார்வைகளும்
abṣāruhum
أَبْصَٰرُهُمْ
பார்வைகளும் அவர்களின்
walā afidatuhum
وَلَآ أَفْـِٔدَتُهُم
அவர்களின் உள்ளங்களும்
min shayin
مِّن شَىْءٍ
எதையும்
idh kānū
إِذْ كَانُوا۟
அவர்கள் இருந்தபோது
yajḥadūna
يَجْحَدُونَ
மறுப்பவர்களாக
biāyāti
بِـَٔايَٰتِ
அத்தாட்சிகளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
waḥāqa
وَحَاقَ
இன்னும் சூழ்ந்து கொண்டது
bihim
بِهِم
அவர்களை
mā kānū
مَّا كَانُوا۟
எது/இருந்தார்கள்
bihi
بِهِۦ
அதை
yastahziūna
يَسْتَهْزِءُونَ
பரிகாசம் செய்பவர்களாக
உங்களுக்குச் செய்து கொடுக்காத வசதிகளையெல்லாம் நிச்சயமாக நாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம். அன்றி, நாம் அவர்களுக்குச் செவியையும் (கொடுத்தோம்.) கண்களையும் (கொடுத்தோம். சிந்திக்கக்கூடிய) உள்ளத்தையும் கொடுத்தோம். ஆயினும், அவர்கள் அல்லாஹ்வினுடைய வசனங்களை நிராகரித்ததன் காரணமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய உள்ளங்களும் அவர்களுக்கு யாதொரு பயனுமளிக்கவில்லை. அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த தண்டனை அவர்களைச் சூழ்ந்துகொண்டது. ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௨௬)
Tafseer
௨௭

وَلَقَدْ اَهْلَكْنَا مَا حَوْلَكُمْ مِّنَ الْقُرٰى وَصَرَّفْنَا الْاٰيٰتِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ ٢٧

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ahlaknā
أَهْلَكْنَا
நாம் அழித்தோம்
mā ḥawlakum
مَا حَوْلَكُم
உங்களை சுற்றி உள்ளவற்றை
mina l-qurā
مِّنَ ٱلْقُرَىٰ
ஊர்களில்
waṣarrafnā
وَصَرَّفْنَا
இன்னும் நாம் விவரித்தோம்
l-āyāti
ٱلْءَايَٰتِ
அத்தாட்சிகளை
laʿallahum yarjiʿūna
لَعَلَّهُمْ يَرْجِعُونَ
அவர்கள் திரும்புவதற்காக
உங்களைச் சூழ்ந்து (வசித்து) இருந்த ஊரார்களையும் நிச்சயமாக நாம் அழித்துவிட்டோம். அவர்கள் (பாவத்திலிருந்து விலகி நம்மிடம்) திரும்பி வரும் பொருட்டுப் பல அத்தாட்சிகளை (ஒன்றன்பின் ஒன்றாக) நாம் காண்பித்து வந்தோம். (எனினும், அவைகளை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. ஆதலால், நாம் அவர்களை அழித்துவிட்டோம்.) ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௨௭)
Tafseer
௨௮

فَلَوْلَا نَصَرَهُمُ الَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ قُرْبَانًا اٰلِهَةً ۗبَلْ ضَلُّوْا عَنْهُمْۚ وَذٰلِكَ اِفْكُهُمْ وَمَا كَانُوْا يَفْتَرُوْنَ ٢٨

falawlā naṣarahumu
فَلَوْلَا نَصَرَهُمُ
(அவர்கள்) இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா?
alladhīna ittakhadhū
ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟
எவர்களை/எடுத்துக் கொண்டார்கள்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
qur'bānan
قُرْبَانًا
வழிபாட்டுக்காக
ālihatan
ءَالِهَةًۢۖ
தெய்வங்களாக
bal
بَلْ
மாறாக
ḍallū
ضَلُّوا۟
அவர்கள் மறைந்து விட்டனர்
ʿanhum
عَنْهُمْۚ
இவர்களை விட்டு
wadhālika
وَذَٰلِكَ
இது
if'kuhum
إِفْكُهُمْ
இவர்களின்பொய்(யும்)
wamā kānū
وَمَا كَانُوا۟
இன்னும் எதை/இருந்தார்களோ
yaftarūna
يَفْتَرُونَ
இட்டுக் கட்டுபவர்களாக
(அல்லாஹ்வுக்குத்) தங்களைச் சமீபமாக்கி வைக்கக்கூடிய தெய்வங்கள் என்று அல்லாஹ் அல்லாதவைகளை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே, அவைகளேனும் இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா? ஆனால், அவைகளெல்லாம் இவர்களை விட்டும் மறைந்து விட்டன. இவைகளெல்லாம் அவர்கள் கற்பனை செய்துகொண்டு பொய்யாகக் கூறியவைகள்தாம் (என்று தெளிவாகி விட்டது). ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௨௮)
Tafseer
௨௯

وَاِذْ صَرَفْنَآ اِلَيْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ يَسْتَمِعُوْنَ الْقُرْاٰنَۚ فَلَمَّا حَضَرُوْهُ قَالُوْٓا اَنْصِتُوْاۚ فَلَمَّا قُضِيَ وَلَّوْا اِلٰى قَوْمِهِمْ مُّنْذِرِيْنَ ٢٩

wa-idh ṣarafnā ilayka
وَإِذْ صَرَفْنَآ إِلَيْكَ
நாம் திருப்பிய சமயத்தை நினைவு கூர்வீராக!/உம் பக்கம்
nafaran
نَفَرًا
சில நபர்களை
mina l-jini
مِّنَ ٱلْجِنِّ
ஜின்களின்
yastamiʿūna
يَسْتَمِعُونَ
செவிமடுக்கின்றனர்
l-qur'āna
ٱلْقُرْءَانَ
குர்ஆனை
falammā ḥaḍarūhu
فَلَمَّا حَضَرُوهُ
அவர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது
qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
anṣitū
أَنصِتُوا۟ۖ
வாய்மூடி இருங்கள்!
falammā quḍiya
فَلَمَّا قُضِىَ
முடிக்கப்பட்ட போது
wallaw
وَلَّوْا۟
திரும்பினார்கள்
ilā qawmihim
إِلَىٰ قَوْمِهِم
தங்களது சமுதாயத்தினர் பக்கம்
mundhirīna
مُّنذِرِينَ
எச்சரிப்பவர்களாக
(நபியே!) இந்தக் குர்ஆனைக் கேட்கும் பொருட்டு, ஜின்களில் சிலரை நாம் உங்களிடம் வருமாறு செய்து, அவர்கள் வந்த சமயத்தில் (அவர்கள் தங்கள் மக்களை நோக்கி) "நீங்கள் வாய் பொத்தி (இதனைக் கேட்டுக்கொண்டு) இருங்கள்" என்று கூறினார்கள். (இது) ஓதி முடிவு பெறவே, தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய முற்பட்டனர். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௨௯)
Tafseer
௩௦

قَالُوْا يٰقَوْمَنَآ اِنَّا سَمِعْنَا كِتٰبًا اُنْزِلَ مِنْۢ بَعْدِ مُوْسٰى مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ يَهْدِيْٓ اِلَى الْحَقِّ وَاِلٰى طَرِيْقٍ مُّسْتَقِيْمٍ ٣٠

qālū
قَالُوا۟
கூறினார்கள்
yāqawmanā
يَٰقَوْمَنَآ
எங்கள் சமுதாயமே!
innā samiʿ'nā
إِنَّا سَمِعْنَا
நிச்சயமாக நாங்கள் செவியுற்றோம்
kitāban
كِتَٰبًا
ஒரு வேதத்தை
unzila
أُنزِلَ
இறக்கப்பட்ட(து)
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
mūsā
مُوسَىٰ
மூஸாவிற்கு
muṣaddiqan
مُصَدِّقًا
உண்மைப்படுத்தக்கூடிய
limā bayna yadayhi
لِّمَا بَيْنَ يَدَيْهِ
தனக்கு முந்தியவற்றை
yahdī
يَهْدِىٓ
அது வழி காட்டுகிறது
ilā l-ḥaqi
إِلَى ٱلْحَقِّ
உண்மைக்கு(ம்)
wa-ilā ṭarīqin
وَإِلَىٰ طَرِيقٍ
பாதைக்கும்
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
மிக நேரான
(அவர்களை நோக்கி) "எங்களுடைய இனத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது மூஸாவுக்குப் பின்னர் அருளப்பட்டிருக்கின்றது. அது, தனக்கு முன்னுள்ள வேதங்களையும் உண்மைப்படுத்துகின்றது. அது சத்தியத்திலும், நேரான வழியிலும் செலுத்துகின்றது. ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௩௦)
Tafseer