وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلَّذِيْنَ اٰمَنُوْا لَوْ كَانَ خَيْرًا مَّا سَبَقُوْنَآ اِلَيْهِۗ وَاِذْ لَمْ يَهْتَدُوْا بِهٖ فَسَيَقُوْلُوْنَ هٰذَآ اِفْكٌ قَدِيْمٌ ١١
- waqāla
- وَقَالَ
- கூறினார்கள்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரித்தவர்கள்
- lilladhīna āmanū
- لِلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி
- law kāna khayran
- لَوْ كَانَ خَيْرًا
- இது சிறந்ததாக இருந்தால்
- mā sabaqūnā
- مَّا سَبَقُونَآ
- இவர்கள் நம்மை முந்தியிருக்க மாட்டார்கள்
- ilayhi
- إِلَيْهِۚ
- இதனளவில்
- wa-idh lam yahtadū
- وَإِذْ لَمْ يَهْتَدُوا۟
- அவர்கள் நேர்வழி பெறாமல் போனபோது
- bihi
- بِهِۦ
- இதன் மூலம்
- fasayaqūlūna
- فَسَيَقُولُونَ
- கூறுகின்றனர்
- hādhā
- هَٰذَآ
- இது
- if'kun
- إِفْكٌ
- பொய்யாகும்
- qadīmun
- قَدِيمٌ
- பழைய(து)
நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி "இவ்வேதம் நன்மையானதாக இருந்தால் (அதனை நம்பிக்கை கொள்ள இப்பாமர மக்கள்) எங்களைவிட முந்திக்கொள்ள மாட்டார்கள். (இதில் யாதொரு நன்மையுமே இல்லை. ஆதலால்தான், அதனை நாங்கள் நிராகரித்து விட்டோம்)" என்றும் கூறுகின்றனர். அவர்கள் இ(வ்வுண்மையான வேதத்)தைப் பின்பற்றாத நிலைமையில், இது பழங்காலத்துப் பொய்யான கட்டுக்கதைகள்தாம் என்றும் அவர்கள் கூறுவார்கள். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௧௧)Tafseer
وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰٓى اِمَامًا وَّرَحْمَةً ۗوَهٰذَا كِتٰبٌ مُّصَدِّقٌ لِّسَانًا عَرَبِيًّا لِّيُنْذِرَ الَّذِيْنَ ظَلَمُوْا ۖوَبُشْرٰى لِلْمُحْسِنِيْنَ ١٢
- wamin qablihi
- وَمِن قَبْلِهِۦ
- இதற்கு முன்னர்
- kitābu mūsā
- كِتَٰبُ مُوسَىٰٓ
- மூஸாவின் வேதம்
- imāman
- إِمَامًا
- ஒரு முன்னோடியாக(வும்)
- waraḥmatan
- وَرَحْمَةًۚ
- அருளாகவும்
- wahādhā
- وَهَٰذَا
- இதுவோ
- kitābun
- كِتَٰبٌ
- ஒரு வேதமாகும்
- muṣaddiqun
- مُّصَدِّقٌ
- மெய்ப்பிக்கக்கூடிய(து)
- lisānan ʿarabiyyan
- لِّسَانًا عَرَبِيًّا
- அரபி மொழியில்
- liyundhira
- لِّيُنذِرَ
- எச்சரிப்பதற்காக(வும்)
- alladhīna ẓalamū
- ٱلَّذِينَ ظَلَمُوا۟
- அநியாயக்காரர்களை
- wabush'rā
- وَبُشْرَىٰ
- நற்செய்தியாகவும்
- lil'muḥ'sinīna
- لِلْمُحْسِنِينَ
- நல்லவர்களுக்கு
இதற்கு முன்னர், மூஸாவுடைய வேதம் (மக்களுக்கு) வழிகாட்டியாகவும், அருளாகவும் இருந்தது. இதுவோ, (அதனை) உண்மைப்படுத்தும் வேதமாகத் தெளிவான அரபி மொழியில் இருக்கின்றது. அன்றி, அநியாயக்காரர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்துகொண்டும், நன்மை செய்பவர்களுக்கு நற்செய்தி கூறிக்கொண்டும் இருக்கின்றது. ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௧௨)Tafseer
اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَۚ ١٣
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- qālū
- قَالُوا۟
- கூறினார்கள்
- rabbunā
- رَبُّنَا
- எங்கள் இறைவன்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்தான்
- thumma
- ثُمَّ
- பிறகு
- is'taqāmū
- ٱسْتَقَٰمُوا۟
- உறுதியாக இருந்தார்களோ
- falā khawfun
- فَلَا خَوْفٌ
- பயமில்லை
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- walā hum yaḥzanūna
- وَلَا هُمْ يَحْزَنُونَ
- இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
எவர்கள், எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி (அவன் அருள் புரிந்த இவ்வேதத்தை நம்பிக்கை கொண்டு,) அதில் உறுதியாகவும் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௧௩)Tafseer
اُولٰۤىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ خٰلِدِيْنَ فِيْهَاۚ جَزَاۤءً ۢبِمَا كَانُوْا يَعْمَلُوْنَ ١٤
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- aṣḥābu l-janati
- أَصْحَٰبُ ٱلْجَنَّةِ
- சொர்க்கவாசிகள்
- khālidīna
- خَٰلِدِينَ
- நிரந்தரமாக இருப்பார்கள்
- fīhā
- فِيهَا
- அதில்
- jazāan
- جَزَآءًۢ
- கூலியாக
- bimā kānū yaʿmalūna
- بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
- அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு
இவர்கள்தாம் சுவனவாசிகள். அவர்கள் செய்யும் நன்மைக்குக் கூலியாக என்றென்றுமே அதில் அவர்கள் தங்கி விடுவார்கள். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௧௪)Tafseer
وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ اِحْسَانًا ۗحَمَلَتْهُ اُمُّهٗ كُرْهًا وَّوَضَعَتْهُ كُرْهًا ۗوَحَمْلُهٗ وَفِصٰلُهٗ ثَلٰثُوْنَ شَهْرًا ۗحَتّٰىٓ اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِيْنَ سَنَةًۙ قَالَ رَبِّ اَوْزِعْنِيْٓ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْٓ اَنْعَمْتَ عَلَيَّ وَعَلٰى وَالِدَيَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰىهُ وَاَصْلِحْ لِيْ فِيْ ذُرِّيَّتِيْۗ اِنِّيْ تُبْتُ اِلَيْكَ وَاِنِّيْ مِنَ الْمُسْلِمِيْنَ ١٥
- wawaṣṣaynā
- وَوَصَّيْنَا
- நாம் உபதேசித்தோம்
- l-insāna
- ٱلْإِنسَٰنَ
- மனிதனுக்கு
- biwālidayhi
- بِوَٰلِدَيْهِ
- தன் பெற்றோருக்கு
- iḥ'sānan
- إِحْسَٰنًاۖ
- நன்மை செய்வதற்கு
- ḥamalathu
- حَمَلَتْهُ
- அவனை சுமந்தாள்
- ummuhu
- أُمُّهُۥ
- அவனது தாய்
- kur'han
- كُرْهًا
- சிரமத்துடன்
- wawaḍaʿathu
- وَوَضَعَتْهُ
- இன்னும் அவனை ஈன்றெடுத்தாள்
- kur'han
- كُرْهًاۖ
- சிரமத்துடன்
- waḥamluhu
- وَحَمْلُهُۥ
- அவனை சுமந்ததும்
- wafiṣāluhu
- وَفِصَٰلُهُۥ
- இன்னும் அவனுக்கு பால்குடி மறக்கச் செய்ததும்
- thalāthūna
- ثَلَٰثُونَ
- முப்பது
- shahran
- شَهْرًاۚ
- மாதங்களாகும்
- ḥattā
- حَتَّىٰٓ
- இறுதியாக
- idhā balagha
- إِذَا بَلَغَ
- அவன் அடைந்து (விட்டால்)
- ashuddahu
- أَشُدَّهُۥ
- தனது வாலிபத்தை
- wabalagha
- وَبَلَغَ
- இன்னும் அடைந்து(விட்டால்)
- arbaʿīna
- أَرْبَعِينَ
- நாற்பது
- sanatan
- سَنَةً
- வயதை
- qāla
- قَالَ
- அவன் கூறுகிறான்
- rabbi
- رَبِّ
- என் இறைவா
- awziʿ'nī
- أَوْزِعْنِىٓ
- என்னை தூண்டுவாயாக
- an ashkura
- أَنْ أَشْكُرَ
- நான் நன்றி செலுத்துவதற்கு(ம்)
- niʿ'mataka
- نِعْمَتَكَ
- உனது அருளுக்கு
- allatī
- ٱلَّتِىٓ
- எது
- anʿamta
- أَنْعَمْتَ
- நீ அருள் புரிந்தாய்
- ʿalayya
- عَلَىَّ
- என்மீது(ம்)
- waʿalā
- وَعَلَىٰ
- மீதும்
- wālidayya
- وَٰلِدَىَّ
- என் பெற்றோர்
- wa-an aʿmala
- وَأَنْ أَعْمَلَ
- நான் செய்வதற்கும்
- ṣāliḥan
- صَٰلِحًا
- நல்ல அமலை
- tarḍāhu
- تَرْضَىٰهُ
- அதை நீ திருப்திபடுகின்றாய்
- wa-aṣliḥ
- وَأَصْلِحْ
- இன்னும் சீர்திருத்தம் செய்
- lī
- لِى
- எனக்கு
- fī dhurriyyatī
- فِى ذُرِّيَّتِىٓۖ
- என் சந்ததியில்
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- tub'tu
- تُبْتُ
- திரும்பி விட்டேன்
- ilayka
- إِلَيْكَ
- உன் பக்கம்
- wa-innī
- وَإِنِّى
- இன்னும் நிச்சயமாக நான்
- mina l-mus'limīna
- مِنَ ٱلْمُسْلِمِينَ
- முஸ்லிம்களில் ஒருவனாவேன்
மனிதன் தன்னுடைய தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், கஷ்டத்துடனேயே அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்து கஷ்டத்துடனேயே பிரசவிக்கின்றாள். அவள் கர்ப்பமானதிலிருந்து, இவன் பால்குடி மறக்கும் வரையில், முப்பது மாதங்கள் (மிக்க கஷ்டத்துடன்) செல்கின்றன. இவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால் "என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய நற்செயல்களைச் செய்யும்படி(யான நல்லறிவை) நீ எனக்குத் தந்தருள்வாயாக! எனக்கு உதவியாக இருக்கும்படி என்னுடைய குடும்பத்தை சீர்திருத்திவை. நிச்சயமாக நான் உன்னையே நோக்கினேன். (உனக்கு) முற்றிலும் வழிபட்டவர்களில் நானும் ஒருவன்" என்று கூறுவான். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௧௫)Tafseer
اُولٰۤىِٕكَ الَّذِيْنَ نَتَقَبَّلُ عَنْهُمْ اَحْسَنَ مَا عَمِلُوْا وَنَتَجَاوَزُ عَنْ سَيِّاٰتِهِمْ فِيْٓ اَصْحٰبِ الْجَنَّةِۗ وَعْدَ الصِّدْقِ الَّذِيْ كَانُوْا يُوْعَدُوْنَ ١٦
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- இவர்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எப்படிப்பட்டவர்கள்
- nataqabbalu
- نَتَقَبَّلُ
- ஏற்றுக் கொள்வோம்
- ʿanhum
- عَنْهُمْ
- இவர்களிடமிருந்து
- aḥsana
- أَحْسَنَ
- மிக அழகானதை
- mā ʿamilū
- مَا عَمِلُوا۟
- இவர்கள் செய்தவற்றில்
- wanatajāwazu
- وَنَتَجَاوَزُ
- இன்னும் மன்னித்து விடுவோம்
- ʿan sayyiātihim
- عَن سَيِّـَٔاتِهِمْ
- இவர்களின் பாவங்களை
- fī aṣḥābi l-janati
- فِىٓ أَصْحَٰبِ ٱلْجَنَّةِۖ
- சொர்க்க வாசிகளில்
- waʿda l-ṣid'qi
- وَعْدَ ٱلصِّدْقِ
- உண்மையான வாக்காகும்
- alladhī kānū yūʿadūna
- ٱلَّذِى كَانُوا۟ يُوعَدُونَ
- எது/வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்
இத்தகையவர்கள் செய்த நன்மைகள் அனைத்தையும் நாம் அங்கீகரித்துக் கொண்டு, சுவனவாசிகளான இவர்களின் பாவங்களையும் புறக்கணித்து விடுவோம். இவர்களுக்கு அளிக்கப்பட்ட இவ்வாக்கு உண்மையான வாக்குறுதியாகும். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௧௬)Tafseer
وَالَّذِيْ قَالَ لِوَالِدَيْهِ اُفٍّ لَّكُمَآ اَتَعِدَانِنِيْٓ اَنْ اُخْرَجَ وَقَدْ خَلَتِ الْقُرُوْنُ مِنْ قَبْلِيْۚ وَهُمَا يَسْتَغِيْثٰنِ اللّٰهَ وَيْلَكَ اٰمِنْ ۖاِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّۚ فَيَقُوْلُ مَا هٰذَآ اِلَّآ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ ١٧
- wa-alladhī qāla
- وَٱلَّذِى قَالَ
- எவர்/கூறினார்
- liwālidayhi
- لِوَٰلِدَيْهِ
- தனது பெற்றோரை நோக்கி
- uffin
- أُفٍّ
- “சீ”
- lakumā
- لَّكُمَآ
- உங்கள் இருவருக்கும்
- ataʿidāninī
- أَتَعِدَانِنِىٓ
- என்னை எச்சரிக்கிறீர்களா?
- an ukh'raja
- أَنْ أُخْرَجَ
- நான் வெளியேற்றப்படுவேன்
- waqad
- وَقَدْ
- திட்டமாக
- khalati
- خَلَتِ
- சென்றுள்ளனர்
- l-qurūnu
- ٱلْقُرُونُ
- பல தலைமுறைகள்
- min qablī
- مِن قَبْلِى
- எனக்கு முன்னர்
- wahumā
- وَهُمَا
- அவ்விருவரும்
- yastaghīthāni
- يَسْتَغِيثَانِ
- உதவி தேடுகின்றனர்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்விடம்
- waylaka
- وَيْلَكَ
- உனக்கு என்ன கேடு!
- āmin
- ءَامِنْ
- நீ நம்பிக்கை கொள்!
- inna waʿda
- إِنَّ وَعْدَ
- நிச்சயமாக வாக்கு
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- ḥaqqun
- حَقٌّ
- உண்மையானதே!
- fayaqūlu
- فَيَقُولُ
- அவன் கூறுகிறான்
- mā hādhā
- مَا هَٰذَآ
- இது இல்லை
- illā asāṭīru
- إِلَّآ أَسَٰطِيرُ
- கதைகளே தவிர
- l-awalīna
- ٱلْأَوَّلِينَ
- முன்னோரின்
எவன் தன் தாய் தந்தையை நோக்கி (அவர்கள் மறுமையைப் பற்றிக் கூறிய நல்மொழிகளை மறுத்து) "சீச்சீ! உங்களுக்கென்ன நேர்ந்தது! (நான் இறந்தபின்) உயிர்ப்பிக்கப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்களா? எனக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தார் சென்று விட்டனர். (அவர்களில் ஒருவருமே வராது இருக்க நான் மட்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா?) என்று அவன் கூறுகின்றான். அதற்கு அவ்விருவரும் (அவனை) பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து (பின்னர் அவனை நோக்கி) "உனக்கென்ன கேடு! நீ அல்லாஹ்வை நம்பு. நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி மெய்யானது" என்று கூறுகின்றார்கள். அதற்கவன், "இவைகளெல்லாம் முன்னுள்ளோரின் கட்டுக் கதையே தவிர வேறில்லை. (இதனை நான் நம்பவே மாட்டேன்)" என்று கூறுகின்றான். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௧௭)Tafseer
اُولٰۤىِٕكَ الَّذِيْنَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِيْٓ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ ۗاِنَّهُمْ كَانُوْا خٰسِرِيْنَ ١٨
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- இவர்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ḥaqqa
- حَقَّ
- உறுதியாகிவிட்டது
- ʿalayhimu
- عَلَيْهِمُ
- இவர்கள் மீதும்
- l-qawlu
- ٱلْقَوْلُ
- வாக்கு
- fī umamin
- فِىٓ أُمَمٍ
- சமுதாயங்களுடன்
- qad
- قَدْ
- திட்டமாக
- khalat
- خَلَتْ
- சென்றுவிட்ட(னர்)
- min qablihim
- مِن قَبْلِهِم
- இவர்களுக்கு முன்னர்
- mina l-jini
- مِّنَ ٱلْجِنِّ
- ஜின்களில்
- wal-insi
- وَٱلْإِنسِۖ
- மற்றும் மனித(ர்கள்)
- innahum
- إِنَّهُمْ
- நிச்சயமாக இவர்கள்
- kānū
- كَانُوا۟
- இருக்கின்றனர்
- khāsirīna
- خَٰسِرِينَ
- நஷ்டவாளிகளாகவே
இத்தகையவர்களின் கதியோ, இவர்களுக்கு முன் சென்றுபோன (பாவிகளான) மனித, ஜின்களிலுள்ள கூட்டத்தார் களைப் போல் (இவர்களும் அழிந்து) இவர்களின் மீதும் (அல்லாஹ் வுடைய வேதனை வந்திறங்கியே தீருமென்ற) வாக்குறுதி உண்மையாகிவிட்டது. நிச்சயமாக இத்தகையவர்கள் நஷ்டமடைந்து விட்டார்கள். ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௧௮)Tafseer
وَلِكُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوْاۚ وَلِيُوَفِّيَهُمْ اَعْمَالَهُمْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ ١٩
- walikullin
- وَلِكُلٍّ
- எல்லோருக்கும்
- darajātun
- دَرَجَٰتٌ
- தகுதிகள் உண்டு
- mimmā ʿamilū
- مِّمَّا عَمِلُوا۟ۖ
- அவர்கள் செய்தவற்றின் அடிப்படையில்
- waliyuwaffiyahum
- وَلِيُوَفِّيَهُمْ
- இன்னும் இறுதியாக அவன் அவர்களுக்கு முழு கூலி கொடுப்பான்
- aʿmālahum
- أَعْمَٰلَهُمْ
- அவர்களுடைய செயல்களுக்கு
- wahum
- وَهُمْ
- இன்னும் அவர்கள்
- lā yuẓ'lamūna
- لَا يُظْلَمُونَ
- அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
இவர்களில் ஒவ்வொருவருக்கும் (நன்மையோ தீமையோ) அவர்கள் செயலுக்குத் தக்க பதவிகள் இருக்கின்றன. ஆகவே, அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியை முழுமையாகவே கொடுக்கப்படுவார்கள். (நன்மையைக் குறைத்தோ, பாவத்தை அதிகரித்தோ) இவர்களில் ஒருவருக்கும் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டாது. ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௧௯)Tafseer
وَيَوْمَ يُعْرَضُ الَّذِيْنَ كَفَرُوْا عَلَى النَّارِۗ اَذْهَبْتُمْ طَيِّبٰتِكُمْ فِيْ حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَاۚ فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُوْنَ ࣖ ٢٠
- wayawma yuʿ'raḍu
- وَيَوْمَ يُعْرَضُ
- சமர்ப்பிக்கப்படுகின்ற நாளில்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரிப்பாளர்கள்
- ʿalā l-nāri
- عَلَى ٱلنَّارِ
- நரகத்தின் முன்
- adhhabtum
- أَذْهَبْتُمْ
- நீங்கள் போக்கிக் கொண்டீர்கள்
- ṭayyibātikum
- طَيِّبَٰتِكُمْ
- உங்கள் நன்மைகளை
- fī ḥayātikumu
- فِى حَيَاتِكُمُ
- உங்கள் வாழ்க்கையிலே
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- உலக
- wa-is'tamtaʿtum
- وَٱسْتَمْتَعْتُم
- இன்னும் இன்பம் அடைந்தீர்கள்
- bihā
- بِهَا
- அவற்றின் மூலம்
- fal-yawma
- فَٱلْيَوْمَ
- ஆகவே இன்றைய தினம்
- tuj'zawna
- تُجْزَوْنَ
- கூலியாக கொடுக்கப்படுவீர்கள்
- ʿadhāba
- عَذَابَ
- தண்டனையை
- l-hūni
- ٱلْهُونِ
- கேவலமான
- bimā kuntum
- بِمَا كُنتُمْ
- நீங்கள் இருந்த காரணத்தாலும்
- tastakbirūna
- تَسْتَكْبِرُونَ
- நீங்கள் பெருமையடிப்பவர்களாக
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- bighayri l-ḥaqi
- بِغَيْرِ ٱلْحَقِّ
- அநியாயமாக
- wabimā kuntum
- وَبِمَا كُنتُمْ
- நீங்கள் இருந்த காரணத்தாலும்
- tafsuqūna
- تَفْسُقُونَ
- நீங்கள் பாவம் செய்பவர்களாக
நிராகரிப்பவர்களை நரகத்தின் முன்கொண்டு வரப்படும் நாளில் (அவர்களை நோக்கி) "நீங்கள் உலகத்தில் வாழ்ந்திருந்த காலத்தில், நீங்கள் பெற்றிருந்த நல்லவைகளை எல்லாம், (நன்மையான காரியங்களில் உபயோகிக்காது) உங்களுடைய சுகபோகங்களிலேயே உபயோகித்து இன்பமனுபவித்து விட்டீர்கள். ஆகவே, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் பெருமையடித்துக் கொண்டும், பாவம் செய்துகொண்டும் இருந்ததன் காரணமாக, இழிவு தரும் வேதனையே இன்றைய தினம் உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும்" (என்று கூறப்படும்). ([௪௬] ஸூரத்துல் அஹ்காஃப்: ௨௦)Tafseer