Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௬௪

Qur'an Surah An-Nisa Verse 64

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا لِيُطَاعَ بِاِذْنِ اللّٰهِ ۗوَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْٓا اَنْفُسَهُمْ جَاۤءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُوْلُ لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِيْمًا (النساء : ٤)

wamā arsalnā
وَمَآ أَرْسَلْنَا
And not We sent
நாம் அனுப்பவில்லை
min rasūlin
مِن رَّسُولٍ
any Messenger
எந்த தூதரையும்
illā liyuṭāʿa
إِلَّا لِيُطَاعَ
except to be obeyed
தவிர / அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்
bi-idh'ni
بِإِذْنِ
by (the) permission
அனுமதி கொண்டு
l-lahi
ٱللَّهِۚ
(of) Allah
அல்லாஹ்வுடைய
walaw annahum
وَلَوْ أَنَّهُمْ
And if [that] they
இருந்தால் / நிச்சயமாகஅவர்கள்
idh ẓalamū
إِذ ظَّلَمُوٓا۟
when they wronged
போது / தீங்கிழைத்தார்கள்
anfusahum
أَنفُسَهُمْ
themselves
தங்களுக்கு
jāūka
جَآءُوكَ
(had) come to you
உம்மிடம் வந்தனர்
fa-is'taghfarū
فَٱسْتَغْفَرُوا۟
and asked forgiveness
இன்னும் பாவமன்னிப்பு கோரினர்
l-laha
ٱللَّهَ
(of) Allah
அல்லாஹ்விடம்
wa-is'taghfara
وَٱسْتَغْفَرَ
and asked forgiveness
இன்னும் பாவமன்னிப்பு கோரினார்
lahumu
لَهُمُ
for them
அவர்களுக்கு
l-rasūlu
ٱلرَّسُولُ
the Messenger
தூதர்
lawajadū
لَوَجَدُوا۟
surely they would have found
கண்டிருப்பார்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
tawwāban
تَوَّابًا
Oft-Forgiving
பிழை பொறுப்பவனாக
raḥīman
رَّحِيمًا
Most Merciful
பெரும் கருணையாளனாக

Transliteration:

Wa maa arsalnaa mir Rasoolin illaa liyutaa'a bi iznil laah; wa law annahum 'iz zalamooo anfusahum jaaa'ooka fastaghfarul laaha wastaghfara lahumur Rasoolu la wajadul laaha Tawwaabar Raheemaa (QS. an-Nisāʾ:64)

English Sahih International:

And We did not send any messenger except to be obeyed by permission of Allah. And if, when they wronged themselves, they had come to you, [O Muhammad], and asked forgiveness of Allah and the Messenger had asked forgiveness for them, they would have found Allah Accepting of Repentance and Merciful. (QS. An-Nisa, Ayah ௬௪)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வுடைய அனுமதிகொண்டு (மக்கள்) அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே தவிர வேறு எதற்காகவும் நாம் எந்த தூதரையும் அனுப்பவில்லை. ஆகவே, அவர்களில் (எவரும் இதற்கு மாறு செய்து) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்திலும், (நபியே!) உங்களிடம் வந்து அல்லாஹ்விடம் (தங்கள்) பாவமன்னிப்பைக் கோரினால், அத்துடன் அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூதராகிய நீங்களும் பாவ மன்னிப்பைக் கோரினால் அன்புடையவனாகவும், மன்னிப்பு டையவனாகவுமே அவர்கள் அல்லாஹ்வைக் காண்பார்கள். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௬௪)

Jan Trust Foundation

அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் எந்தத் தூதரையும் அனுப்பவில்லை. அல்லாஹ்வுடைய அனுமதி கொண்டு அவருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே தவிர. நிச்சயமாக அவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோது, உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி இருந்தால், (அத்துடன்) அவர்களுக்காக தூத(ராகிய நீ)ரும் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரியிருந்தால், பிழை பொறுப்பவனாக, பெரும் கருணையாளனாக அல்லாஹ்வைக் கண்டிருப்பார்கள்.