குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௬௨
Qur'an Surah An-Nisa Verse 62
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَكَيْفَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۢبِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ ثُمَّ جَاۤءُوْكَ يَحْلِفُوْنَ بِاللّٰهِ ۖاِنْ اَرَدْنَآ اِلَّآ اِحْسَانًا وَّتَوْفِيْقًا (النساء : ٤)
- fakayfa
- فَكَيْفَ
- So how
- எவ்வாறு
- idhā aṣābathum
- إِذَآ أَصَٰبَتْهُم
- when befalls them
- அவர்களுக்கு ஏற்பட்டால்
- muṣībatun
- مُّصِيبَةٌۢ
- disaster
- ஒரு கஷ்டம்
- bimā
- بِمَا
- for what
- எதன் காரணமாக
- qaddamat
- قَدَّمَتْ
- sent forth
- முற்படுத்தியன
- aydīhim
- أَيْدِيهِمْ
- their hands
- அவர்களின் கரங்கள்
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- jāūka
- جَآءُوكَ
- they come to you
- உம்மிடம் வந்தனர்
- yaḥlifūna
- يَحْلِفُونَ
- swearing
- சத்தியம் செய்கின்றனர்
- bil-lahi
- بِٱللَّهِ
- by Allah
- அல்லாஹ்வைக் கொண்டு
- in aradnā
- إِنْ أَرَدْنَآ
- "Not we intended
- நாங்கள் நாடவில்லை
- illā
- إِلَّآ
- except
- அன்றி
- iḥ'sānan
- إِحْسَٰنًا
- good
- நன்மையை
- watawfīqan
- وَتَوْفِيقًا
- and reconciliation"
- இன்னும் ஒற்றுமையை
Transliteration:
Fakaifa izaaa asaabathum museebatum summa jaaa'ooka yahlifoona billaahi in aradnaaa illaaa ihsaananw wa tawfeeqaa(QS. an-Nisāʾ:62)
English Sahih International:
So how [will it be] when disaster strikes them because of what their hands have put forth and then they come to you swearing by Allah, "We intended nothing but good conduct and accommodation." (QS. An-Nisa, Ayah ௬௨)
Abdul Hameed Baqavi:
(நபியே!) அவர்களின் கரங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக அவர்களுக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்ட சமயத்தில் (அதற்குப் பரிகாரம் தேடிக்கொள்ள முடியாமலாகிவிட்ட அவர்களின் இழி நிலைமை) எவ்வாறு இருந்தது (என்பதை நீங்கள் கவனியுங்கள்.) பின்னர் அவர்கள் உங்களிடமே வந்து "(அந்த ஷைத்தானிடம் நாங்கள் சென்றதெல்லாம்) நன்மையையும் ஒற்றுமையையும் கருதியேயன்றி, வேறொன்றையும் நாங்கள் விரும்பவில்லை" என்று அல்லாஹ்வின் பேரால் சத்தியம் செய்கின்றனர். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௬௨)
Jan Trust Foundation
அவர்களின் கைகள் முற்படுத்தியனுப்பிய தீவினையின் காரணத்தால், அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் எப்படியிருக்கும்? அப்பொழுது அவர்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மேல் சத்தியம் செய்து “நாங்கள் நன்மையையும் ஒற்றுமையையும் தவிர (வேறெதனையும்) நாடவில்லை” என்று கூறுகின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) (தீமைகளில்) அவர்களின் கரங்கள் முற்படுத்தியவற்றிலின் காரணமாக அவர்களுக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்டால் (அதற்குப் பரிகாரம் தேடிக் கொள்ள முடியாமல்போன அவர்களின் இழி நிலைமை) எவ்வாறு இருந்தது (என்பதை நீர் கவனிப்பீராக.) பிறகு அவர்கள் உம்மிடம் வந்து "(அந்த தீயவனிடம் நாங்கள் சென்றதெல்லாம்) நன்மையையும் ஒற்றுமையையும் அன்றி, (வேறொன்றையும்) நாங்கள் நாடவில்லை" என்று அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்கின்றனர்.