குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௪௬
Qur'an Surah An-Nisa Verse 46
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مِنَ الَّذِيْنَ هَادُوْا يُحَرِّفُوْنَ الْكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ وَيَقُوْلُوْنَ سَمِعْنَا وَعَصَيْنَا وَاسْمَعْ غَيْرَ مُسْمَعٍ وَّرَاعِنَا لَيًّاۢ بِاَلْسِنَتِهِمْ وَطَعْنًا فِى الدِّيْنِۗ وَلَوْ اَنَّهُمْ قَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا وَاسْمَعْ وَانْظُرْنَا لَكَانَ خَيْرًا لَّهُمْ وَاَقْوَمَۙ وَلٰكِنْ لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُوْنَ اِلَّا قَلِيْلًا (النساء : ٤)
- mina
- مِّنَ
- Of
- இருந்து (சிலர்)
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- hādū
- هَادُوا۟
- are Jews
- யூதராகி விட்டார்கள்
- yuḥarrifūna
- يُحَرِّفُونَ
- they distort
- புரட்டுகின்றனர்
- l-kalima
- ٱلْكَلِمَ
- the words
- வசனங்களை
- ʿan
- عَن
- from
- இருந்து
- mawāḍiʿihi
- مَّوَاضِعِهِۦ
- their places
- அதன் இடங்கள்
- wayaqūlūna
- وَيَقُولُونَ
- and they say
- இன்னும் கூறுகின்றனர்
- samiʿ'nā
- سَمِعْنَا
- "We hear[d]
- செவியுற்றோம்
- waʿaṣaynā
- وَعَصَيْنَا
- and we disobey[ed]"
- இன்னும் மாறுசெய்தோம்
- wa-is'maʿ
- وَٱسْمَعْ
- and Hear
- கேட்பீராக
- ghayra mus'maʿin
- غَيْرَ مُسْمَعٍ
- not to be heard
- கேட்கப்படாதவராக
- warāʿinā
- وَرَٰعِنَا
- and Raina"
- இன்னும் ராயினா
- layyan
- لَيًّۢا
- twisting
- வளைத்து
- bi-alsinatihim
- بِأَلْسِنَتِهِمْ
- [with] their tongues
- தங்கள் நாவுகளை
- waṭaʿnan
- وَطَعْنًا
- and defaming
- இன்னும் குற்றம் சொல்வதற்காக
- fī l-dīni
- فِى ٱلدِّينِۚ
- [in] the religion
- மார்க்கத்தில்
- walaw annahum qālū
- وَلَوْ أَنَّهُمْ قَالُوا۟
- And if [that] they (had) said
- நிச்சயமாக அவர்கள் கூறினால்
- samiʿ'nā
- سَمِعْنَا
- "We hear[d]
- செவியுற்றோம்
- wa-aṭaʿnā
- وَأَطَعْنَا
- and we obey[ed]"
- இன்னும் கீழ்ப்படிந்தோம்
- wa-is'maʿ
- وَٱسْمَعْ
- and Hear
- இன்னும் கேட்பீராக
- wa-unẓur'nā
- وَٱنظُرْنَا
- and look (at) us
- இன்னும் எங்களை பார்ப்பீராக
- lakāna
- لَكَانَ
- surely it (would) have been
- இருந்திருக்கும்
- khayran
- خَيْرًا
- better
- நன்றாக
- lahum
- لَّهُمْ
- for them
- அவர்களுக்கு
- wa-aqwama
- وَأَقْوَمَ
- and more suitable
- இன்னும் மிக நேர்மையாக
- walākin
- وَلَٰكِن
- [And] but
- எனினும்
- laʿanahumu
- لَّعَنَهُمُ
- cursed them
- அவர்களை சபித்தான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- bikuf'rihim
- بِكُفْرِهِمْ
- for their disbelief
- அவர்களின் நிராகரிப்பின் காரணமாக
- falā yu'minūna
- فَلَا يُؤْمِنُونَ
- so not they believe
- ஆகவே நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்
- illā
- إِلَّا
- except
- தவிர
- qalīlan
- قَلِيلًا
- a few
- சிலரை
Transliteration:
Minal lazeena haadoo yuharrifoonal Kalima 'am mawaadi'ihee wa yaqooloona sami'naa wa 'asainaa wasma' ghaira musma'inw wa raa'inaa laiyam bi alsinatihim wa ta'nan fiddeen; wa law annahum qaaloo sami'naa wa ata'naa wasma' wanzurnaa lakaana khairal lahum wa aqwama wa laakil la ''anahumul laahu bikufrihim falaa yu'minoona illaa qaleela(QS. an-Nisāʾ:46)
English Sahih International:
Among the Jews are those who distort words from their [proper] places [i.e., usages] and say, "We hear and disobey" and "Hear but be not heard" and "Ra’ina," twisting their tongues and defaming the religion. And if they had said [instead], "We hear and obey" and "Wait for us [to understand]," it would have been better for them and more suitable. But Allah has cursed them for their disbelief, so they believe not, except for a few. (QS. An-Nisa, Ayah ௪௬)
Abdul Hameed Baqavi:
யூதர்களில் சிலர் (வேத) வசனங்களைக் கருத்து வேறுபடும்படிப் புரட்டி வருவதுடன் (உங்களை நோக்கி "நபியே! நீங்கள் சொன்னதை) நாம் செவியுற்றோம். எனினும் நாம் (அதற்கு) மாறு செய்வோம்" என்று கூறி (உங்கள்) மார்க்கத்தில் குற்றம் சொல்லவும் கருதி ("நபியே! நாம் சொல்வதை) நீங்கள் கேளுங்கள். (இனி யாதொன்றையும்) நீங்கள் கேட்காதிருங்கள்" என்றும் கூறி "ராயினா" என்று நாவைக் கோணி உளறுகின்றனர். ("ராயினா" என்னும் பதத்திற்கு அரபி மொழியில் "எங்களைக் கவனியுங்கள்" என்பது அர்த்தம். எனினும் யூதர்களுடைய மொழியிலோ "மூடனே!" என்பது அர்த்தமாகும். எனினும் அவர்கள் உங்களை நோக்கி "நபியே! நீங்கள் சொன்னதற்கு) நாம் செவிசாய்த்தோம். (உங்களுக்கு) நாம் வழிப்பட்டோம். (நாம் சொல்வதை) நீங்கள் கேளுங்கள் (என்று கூறி "ராயினா" என்னும் பதத்திற்குப் பதிலாக "உன்ளுர்னா") "எங்களை அன்பாக நோக்குங்கள்" என்றும் கூறியிருந்தால் அது அவர்களுக்கே மிக நன்றாகவும், நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும், அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்துவிட்டான். ஆதலால் அவர்களில் சிலரைத் தவிர (பெரும் பான்மையானவர்கள்) நம்பிக்கையாளர்களாகவே மாட்டார்கள். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௪௬)
Jan Trust Foundation
யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்; (இன்னும் உம்மை நோக்கி, “நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்; இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!” என்று கூறி, “ராயினா” என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்; (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் “நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட்டோம்;” (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்; எங்களை அன்போடு கவனியுங்கள் (உன்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும்-ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்; ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
யூதர்களில் (சிலர்) வசனங்களை அதன் இடங்களிலிருந்து புரட்டுகின்றனர். "(நபியே!) செவியுற்றோம். (எனினும்) (அதற்கு) மாறு செய்தோம். (நீர்) கேட்கப்படாதவராக கேட்பீராக. இன்னும் தங்கள் நாவுகளை வளைத்தும் மார்க்கத்தில் குற்றம் சொல்வதற்காகவும் (உன்ளுர்னா என்று கூறாமல்) ராயினா என்று கூறுகின்றனர். செவியுற்றோம், கீழ்ப்படிந்தோம் என்றும் ‘இஸ்மஃ', (கேட்பீராக) ‘உன்ளுர்னா' (எங்களைப் பார்ப்பீராக) என்றும் நிச்சயமாக அவர்கள் கூறி இருந்தால் (அது) அவர்களுக்கு மிக நன்றாகவும், மிக நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும், அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்தான். ஆகவே, சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.