Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௩௭

Qur'an Surah An-Nisa Verse 37

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ۨالَّذِيْنَ يَبْخَلُوْنَ وَيَأْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ وَيَكْتُمُوْنَ مَآ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۗ وَاَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ عَذَابًا مُّهِيْنًاۚ (النساء : ٤)

alladhīna
ٱلَّذِينَ
Those who
எவர்கள்
yabkhalūna
يَبْخَلُونَ
are stingy
கருமித்தனம் செய்கிறார்கள்
wayamurūna
وَيَأْمُرُونَ
and order
இன்னும் ஏவுகிறார்கள்
l-nāsa
ٱلنَّاسَ
the people
மக்களுக்கு
bil-bukh'li
بِٱلْبُخْلِ
[of] stinginess
கருமித்தனத்தை
wayaktumūna
وَيَكْتُمُونَ
and hide
இன்னும் மறைக்கிறார்கள்
مَآ
what
எதை
ātāhumu
ءَاتَىٰهُمُ
(has) given them
கொடுத்தான்/அவர்களுக்கு
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
min faḍlihi
مِن فَضْلِهِۦۗ
of His Bounty
தன் அருளிலிருந்து
wa-aʿtadnā
وَأَعْتَدْنَا
and We (have) prepared
தயார்படுத்தினோம்
lil'kāfirīna
لِلْكَٰفِرِينَ
for the disbelievers
நிராகரிப்பவர்களுக்கு
ʿadhāban
عَذَابًا
a punishment
வேதனையை
muhīnan
مُّهِينًا
humiliating
இழிவான

Transliteration:

Allazeena yabkhaloona wa yaamuroonan naasa bilbukhli wa yaktumoona maaa aataahu mullaahu min fadlih; wa a'tadnaa lilkaafireena 'azaabam muheenaa (QS. an-Nisāʾ:37)

English Sahih International:

Who are stingy and enjoin upon [other] people stinginess and conceal what Allah has given them of His bounty – and We have prepared for the disbelievers a humiliating punishment – (QS. An-Nisa, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

எவர்கள் (தாங்கள்) கருமித்தனம் செய்வதுடன் (மற்ற) மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டி, அல்லாஹ் தன் அருளால் அவர்களுக்குக் கொடுத்ததையும் (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்துக் கொள்கின்றார்களோ, அத்தகைய நன்றிகெட்டோருக்கு இழிவுபடுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௩௭)

Jan Trust Foundation

அத்தகையோர் உலோபித்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் உலோபித்தனம் செய்யும்படித் தூண்டி அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக்கொள்கிறார்கள்; அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்கள்) கருமித்தனம் செய்பவர்கள், மக்களுக்கு கருமித்தனத்தை ஏவுபவர்கள், அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்குக் கொடுத்ததை மறைப்பவர்கள். (இத்தகைய நன்றிகெட்ட) நிராகரிப்பாளர்களுக்கு இழிவான வேதனையை தயார்படுத்தினோம்.