குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௩
Qur'an Surah An-Nisa Verse 3
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنْ خِفْتُمْ اَلَّا تُقْسِطُوْا فِى الْيَتٰمٰى فَانْكِحُوْا مَا طَابَ لَكُمْ مِّنَ النِّسَاۤءِ مَثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَ ۚ فَاِنْ خِفْتُمْ اَلَّا تَعْدِلُوْا فَوَاحِدَةً اَوْ مَا مَلَكَتْ اَيْمَانُكُمْ ۗ ذٰلِكَ اَدْنٰٓى اَلَّا تَعُوْلُوْاۗ (النساء : ٤)
- wa-in khif'tum
- وَإِنْ خِفْتُمْ
- And if you fear
- நீங்கள் பயந்தால்
- allā tuq'siṭū
- أَلَّا تُقْسِطُوا۟
- that not you will be able to do justice
- நீதமாக நடக்க மாட்டீர்கள் என்பதை
- fī l-yatāmā
- فِى ٱلْيَتَٰمَىٰ
- with the orphans
- அநாதைகள் விஷயத்தில்
- fa-inkiḥū
- فَٱنكِحُوا۟
- then marry
- மணம் புரியுங்கள்
- mā ṭāba
- مَا طَابَ
- what seems suitable
- எவளை/விருப்பமாகி விட்டார்
- lakum
- لَكُم
- to you
- உங்களுக்கு
- mina l-nisāi
- مِّنَ ٱلنِّسَآءِ
- from the women
- பெண்களிலிருந்து
- mathnā
- مَثْنَىٰ
- two
- இரண்டிரண்டாக
- wathulātha
- وَثُلَٰثَ
- or three
- இன்னும் மும்மூன்றாக
- warubāʿa
- وَرُبَٰعَۖ
- or four
- இன்னும் நான்கு நான்காக
- fa-in khif'tum
- فَإِنْ خِفْتُمْ
- But if you fear
- நீங்கள் பயந்தால்
- allā taʿdilū
- أَلَّا تَعْدِلُوا۟
- that not you can do justice
- நீதமாக நடக்க மாட்டீர்கள் என்பதை
- fawāḥidatan
- فَوَٰحِدَةً
- then (marry) one
- ஒருத்தியை
- aw
- أَوْ
- or
- அல்லது
- mā malakat
- مَا مَلَكَتْ
- what possesses
- எவளை/ சொந்தமாக்கியது
- aymānukum
- أَيْمَٰنُكُمْۚ
- your right hand
- வலக்கரங்கள்/உங்கள்
- dhālika
- ذَٰلِكَ
- That
- இதுவே
- adnā
- أَدْنَىٰٓ
- (is) more appropriate
- சுலபமாகும்
- allā taʿūlū
- أَلَّا تَعُولُوا۟
- that (may) not you oppress
- நீங்கள் அநீதியிழைக்காமல் இருப்பதற்கு
Transliteration:
Wa in khiftum allaa tuqsitoo fil yataamaa fankihoo maa taaba lakum minan nisaaa'i masnaa wa sulaasa wa rubaa'a fa'in khiftum allaa ta'diloo fawaahidatan aw maa malakat aimaanukum; zaalika adnaaa allaa ta'ooloo(QS. an-Nisāʾ:3)
English Sahih International:
And if you fear that you will not deal justly with the orphan girls, then marry those that please you of [other] women, two or three or four. But if you fear that you will not be just, then [marry only] one or those your right hands possess [i.e., slaves]. That is more suitable that you may not incline [to injustice]. (QS. An-Nisa, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
அநாதை(ப் பெண்களை திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டோம் என நீங்கள் அஞ்சினால், மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். (அவ்வாறு பலரை திருமணம் செய்தால் அப்போதும் அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு) நீங்கள் நீதமாக நடக்க முடியாதென பயந்தால் ஒரு பெண்ணை (திருமணம் செய்துகொள்ள வேண்டும்.) அல்லது நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே (போதுமாக்கிக்) கொள்ளுங்கள். நீங்கள் தவறு செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௩)
Jan Trust Foundation
அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அநாதை(ப் பெண்களை திருமணம் செய்து கொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டீர்கள் என நீங்கள் பயந்தால், (மற்ற) பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணம் புரியுங்கள். (பல மனைவிகளுக்கிடையில்) நீதமாக நடக்கமாட்டீர்கள் என பயந்தால் ஒருத்தியை (மணம் புரியுங்கள்). அல்லது உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களை (கொண்டு போதுமாக்கிக் கொள்ளுங்கள்). நீங்கள் அநீதியிழைக்காமல் இருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும்.