Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௨௦

Qur'an Surah An-Nisa Verse 20

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنْ اَرَدْتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍۙ وَّاٰتَيْتُمْ اِحْدٰىهُنَّ قِنْطَارًا فَلَا تَأْخُذُوْا مِنْهُ شَيْـًٔا ۗ اَتَأْخُذُوْنَهٗ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا (النساء : ٤)

wa-in aradttumu
وَإِنْ أَرَدتُّمُ
And if you intend
நீங்கள் நாடினால்
is'tib'dāla
ٱسْتِبْدَالَ
replacing
மாற்றுவதற்கு
zawjin
زَوْجٍ
a wife
ஒரு மனைவியை
makāna
مَّكَانَ
(in) place
இடத்தில்
zawjin
زَوْجٍ
(of) a wife
ஒரு மனைவி
waātaytum
وَءَاتَيْتُمْ
and you have given
நீங்கள் கொடுத்தீர்கள்
iḥ'dāhunna
إِحْدَىٰهُنَّ
one of them
அவர்களில்ஒருத்திக்கு
qinṭāran
قِنطَارًا
heap (of gold)
குவியலை
falā takhudhū
فَلَا تَأْخُذُوا۟
then (do) not take away
எடுக்காதீர்கள்
min'hu
مِنْهُ
from it
அதிலிருந்து
shayan
شَيْـًٔاۚ
anything
எதையும்
atakhudhūnahu
أَتَأْخُذُونَهُۥ
Would you take it
அதை எடுக்கிறீர்களா?
buh'tānan
بُهْتَٰنًا
(by) slander
அபாண்டமாக
wa-ith'man
وَإِثْمًا
and a sin
இன்னும் பாவமாக
mubīnan
مُّبِينًا
open?
பகிரங்கமானது

Transliteration:

Wa in arattumustib daala zawjim makaana zawjin wa aataitum ihdaahunna qintaaran falaa taakhuzoo minhu shai'aa; ataakhuzoonahoo buhtaannanw wa ismam mubeenaa (QS. an-Nisāʾ:20)

English Sahih International:

But if you want to replace one wife with another and you have given one of them a great amount [in gifts], do not take [back] from it anything. Would you take it in injustice and manifest sin? (QS. An-Nisa, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

ஒரு மனைவி(யை நீக்கிவிட்டு அவளு)க்குப் பதிலாக மற்றொரு பெண்ணை (மணந்துகொள்ள) நீங்கள் கருதினால் (நீக்கிவிட விரும்பும்) அந்த முந்திய மனைவிக்கு நீங்கள் ஒரு (பொற்) குவியலைக் கொடுத்திருந்த போதிலும் அதிலிருந்து எதனையும் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். அபாண்டமாகவும் பகிரங்கமாகவும் ஒரு குற்றத்தைச் சுமத்தி அ(வளுக்கு நீங்கள் கொடுத்த)தை நீங்கள் பறித்துக் கொள்ளலாமா? (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௨௦)

Jan Trust Foundation

நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒரு மனைவியின் இடத்தில் (வேறு) ஒரு மனைவியை மாற்ற நாடினால், அவர்களில் (விவாகரத்து செய்யப்படும்) ஒருத்திக்கு (தங்கக்) குவியலைக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் எடுக்காதீர்கள். (அதுவோ) அபாண்டமாகவும் பகிரங்கமான பாவமாகவும் (இருக்க) அதை நீங்கள் எடுக்கிறீர்களா?