குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௬௭
Qur'an Surah An-Nisa Verse 167
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ قَدْ ضَلُّوْا ضَلٰلًا ۢ بَعِيْدًا (النساء : ٤)
- inna alladhīna
- إِنَّ ٱلَّذِينَ
- Indeed those who
- நிச்சயமாக எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- disbelieve
- நிராகரித்தார்கள்
- waṣaddū
- وَصَدُّوا۟
- and hinder
- இன்னும் தடுத்தார்கள்
- ʿan sabīli
- عَن سَبِيلِ
- from (the) way
- பாதையை விட்டு
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வுடைய
- qad ḍallū
- قَدْ ضَلُّوا۟
- surely they have strayed
- திட்டமாக வழி கெட்டனர்
- ḍalālan
- ضَلَٰلًۢا
- straying
- வழிகேடாக
- baʿīdan
- بَعِيدًا
- far away
- தூரமான(து)
Transliteration:
Innal lazeena kafaroo wa saddoo 'an sabeelil laahi qad dalloo dalaalam ba'eedaa(QS. an-Nisāʾ:167)
English Sahih International:
Indeed, those who disbelieve and avert [people] from the way of Allah have certainly gone far astray. (QS. An-Nisa, Ayah ௧௬௭)
Abdul Hameed Baqavi:
(நபியே! உங்களை) எவர்கள் நிராகரித்து (மற்றவர்களையும்) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து தடுத்துக் கொண்டார்களோ அவர்கள் நிச்சயமாக வெகுதூரமான ஒரு வழிகேட்டில்தான் சென்றுவிட்டனர். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௬௭)
Jan Trust Foundation
நிராகரித்து அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மனிதர்களை) தடுத்து கொண்டு இருக்கிறார்களே நிச்சயமாக அவர்கள் வழி கேட்டில் வெகு தூரம் வழி கெட்டுச் சென்று விட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக, நிராகரித்து, அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தவர்கள் வெகுதூரமான வழிகேடாக வழிகெட்டு விட்டனர்.