Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௬௫

Qur'an Surah An-Nisa Verse 165

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

رُسُلًا مُّبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ لِئَلَّا يَكُوْنَ لِلنَّاسِ عَلَى اللّٰهِ حُجَّةٌ ۢ بَعْدَ الرُّسُلِ ۗوَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا (النساء : ٤)

rusulan mubashirīna
رُّسُلًا مُّبَشِّرِينَ
Messengers bearers of glad tidings
தூதர்களை/நற்செய்தி கூறுபவர்களாக
wamundhirīna
وَمُنذِرِينَ
and warners
இன்னும் எச்சரிப்பவர்களாக
li-allā yakūna
لِئَلَّا يَكُونَ
so that not there is
இல்லாதிருக்க
lilnnāsi
لِلنَّاسِ
for the mankind
மக்களுக்கு
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
against Allah
அல்லாஹ்வின் மீது
ḥujjatun
حُجَّةٌۢ
any argument
ஓர் ஆதாரம்
baʿda
بَعْدَ
after
பின்னர்
l-rusuli
ٱلرُّسُلِۚ
the Messengers
தூதர்கள்
wakāna l-lahu
وَكَانَ ٱللَّهُ
And is Allah
அல்லாஹ் இருக்கின்றான்
ʿazīzan
عَزِيزًا
All-Mighty
மிகைத்தவனாக
ḥakīman
حَكِيمًا
All-Wise
மகா ஞானவானாக

Transliteration:

Rusulam mubashshireena wa munzireena li'allaa yakoona linnaasi 'alal laahi hujjatum ba'dar Rusul; wa kaanallaahu 'Azeezan Hakeema (QS. an-Nisāʾ:165)

English Sahih International:

[We sent] messengers as bringers of good tidings and warners so that mankind will have no argument against Allah after the messengers. And ever is Allah Exalted in Might and Wise. (QS. An-Nisa, Ayah ௧௬௫)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வின் மீது (குற்றம் கூற) மனிதர்களுக்கு யாதொரு வழியும் இல்லாதிருக்க இத்தூதர்களுக்குப் பின்னரும் (யஹ்யா போன்ற வேறு) பல தூதர்களை (சுவர்க்கத்தைக் கொண்டு) நற்செய்தி கூறுகின்றவர்களாகவும், (நரகத்தைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கின்றவர்களாகவும் (நாம் அனுப்பி வைத்தோம்.) அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௬௫)

Jan Trust Foundation

தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்); மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தூதர்களுக்குப் பின்பு அல்லாஹ்வின் மீது (குற்றம் கூற) மக்களுக்கு ஓர் ஆதாரமும் இல்லாதிருக்க, நற்செய்தி கூறுபவர்களாக, (அச்சமூட்டி) எச்சரிப்பவர்களாக (பல) தூதர்களை (அனுப்பினோம்). அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்.