Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௬௪

Qur'an Surah An-Nisa Verse 164

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَرُسُلًا قَدْ قَصَصْنٰهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ ۗوَكَلَّمَ اللّٰهُ مُوْسٰى تَكْلِيْمًاۚ (النساء : ٤)

warusulan
وَرُسُلًا
And Messengers
இன்னும் தூதர்களை
qad
قَدْ
surely
திட்டமாக
qaṣaṣnāhum ʿalayka
قَصَصْنَٰهُمْ عَلَيْكَ
We (have) mentioned them to you
விவரித்தோம்/அவர்களை/உமக்கு
min qablu
مِن قَبْلُ
from before
முன்னர்
warusulan
وَرُسُلًا
and Messengers
இன்னும் தூதர்களை
lam naqṣuṣ'hum
لَّمْ نَقْصُصْهُمْ
not We (have) mentioned them
விவரிக்கவில்லை/அவர்களை
ʿalayka
عَلَيْكَۚ
to you
உமக்கு
wakallama l-lahu
وَكَلَّمَ ٱللَّهُ
And spoke Allah
பேசினான்/அல்லாஹ்
mūsā
مُوسَىٰ
(to) Musa
மூஸாவுடன்
taklīman
تَكْلِيمًا
(in a) conversation
பேசுதல்

Transliteration:

Wa Rusulan qad qasas naahum 'alaika min qablu wa Rusulal lam naqsushum 'alaik; wa kallamallaahu Moosaa takleemaa (QS. an-Nisāʾ:164)

English Sahih International:

And [We sent] messengers about whom We have related [their stories] to you before and messengers about whom We have not related to you. And Allah spoke to Moses with [direct] speech. (QS. An-Nisa, Ayah ௧௬௪)

Abdul Hameed Baqavi:

(இவர்களைப் போல் இன்னும் வேறு) பல நபிமார்களையும் (நாம் அனுப்பி வைத்தோம்.) அவர்களுடைய சரித்திரங்களையும் இதற்கு முன்னர் நாம் உங்களுக்குக் கூறியிருக்கின்றோம். வேறு பல நபிமார்களையும் (நாம் அனுப்பியிருக்கின்றோம். எனினும்) அவர்களுடைய சரித்திரங்களை நாம் உங்களுக்குக் கூறவில்லை. மூஸாவு(க்கு வஹீ அறிவித்தது)டன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௬௪)

Jan Trust Foundation

(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(பல) தூதர்களை (அனுப்பினோம்.) அவர்களை முன்னர் உமக்கு விவரித்தோம். இன்னும் பல தூதர்களை (அனுப்பினோம்.) அவர்களை உமக்கு விவரிக்கவில்லை. மூஸாவுடன் அல்லாஹ் பேசினான்.