Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௫௭

Qur'an Surah An-Nisa Verse 157

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِيْحَ عِيْسَى ابْنَ مَرْيَمَ رَسُوْلَ اللّٰهِۚ وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰكِنْ شُبِّهَ لَهُمْ ۗوَاِنَّ الَّذِيْنَ اخْتَلَفُوْا فِيْهِ لَفِيْ شَكٍّ مِّنْهُ ۗمَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوْهُ يَقِيْنًاۢ ۙ (النساء : ٤)

waqawlihim
وَقَوْلِهِمْ
And for their saying
இன்னும் அவர்கள் கூறியதாலும்
innā
إِنَّا
"Indeed we
நிச்சயமாக நாம்
qatalnā
قَتَلْنَا
killed
கொன்றோம்
l-masīḥa
ٱلْمَسِيحَ
the Messiah
மஸீஹை
ʿīsā ib'na
عِيسَى ٱبْنَ
Isa son
ஈஸா/மகன்
maryama
مَرْيَمَ
(of) Maryam
மர்யமுடைய
rasūla
رَسُولَ
(the) Messenger
தூதர்
l-lahi
ٱللَّهِ
(of) Allah"
அல்லாஹ்வின்
wamā qatalūhu
وَمَا قَتَلُوهُ
And not they killed him
அவர்கள் கொல்லவில்லை/ அவரை
wamā ṣalabūhu
وَمَا صَلَبُوهُ
and not they crucified him
இன்னும் அவர்கள் சிலுவையில் அறையவில்லை/அவரை
walākin
وَلَٰكِن
but
எனினும்
shubbiha
شُبِّهَ
it was made to appear (so)
தோற்றமாக்கப்பட்டான்
lahum
لَهُمْۚ
to them
அவர்களுக்கு
wa-inna alladhīna
وَإِنَّ ٱلَّذِينَ
And indeed those who
நிச்சயமாக/எவர்கள்
ikh'talafū
ٱخْتَلَفُوا۟
differ
முரண்பட்டனர்
fīhi
فِيهِ
in it
அவர் விஷயத்தில்
lafī shakkin
لَفِى شَكٍّ
(are) surely in doubt
சந்தேகத்தில்தான்
min'hu
مِّنْهُۚ
about it
அதில்
mā lahum
مَا لَهُم
Not for them
அவர்களுக்கு இல்லை
bihi
بِهِۦ
about it
அதில்
min ʿil'min
مِنْ عِلْمٍ
[of] (any) knowledge
ஓர் அறிவும்
illā ittibāʿa
إِلَّا ٱتِّبَاعَ
except (the) following
தவிர/பின்பற்றுவது
l-ẓani
ٱلظَّنِّۚ
(of) assumption
சந்தேகத்தை
wamā qatalūhu
وَمَا قَتَلُوهُ
And not they killed him
அவர்கள் கொல்லவில்லை/ அவரை
yaqīnan
يَقِينًۢا
certainly
உறுதியாக

Transliteration:

Wa qawlihim innaa qatal nal maseeha 'Eesab-na-Maryama Rasoolal laahi wa maa qataloohu wa maa salaboohu wa laakin shubbiha lahum; wa innal lazeenakh talafoo fee lafee shakkim minh; maa lahum bihee min 'ilmin illat tibaa'az zann; wa maa qataloohu yaqeenaa (QS. an-Nisāʾ:157)

English Sahih International:

And [for] their saying, "Indeed, we have killed the Messiah, Jesus the son of Mary, the messenger of Allah." And they did not kill him, nor did they crucify him; but [another] was made to resemble him to them. And indeed, those who differ over it are in doubt about it. They have no knowledge of it except the following of assumption. And they did not kill him, for certain. (QS. An-Nisa, Ayah ௧௫௭)

Abdul Hameed Baqavi:

அன்றி "அல்லாஹ்வுடைய தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் (சிலுவையில் அறைந்து) கொலை செய்து விட்டோம்" என்று அவர்கள் கூறியதனாலும் அவர்களைச் சபித்தோம். அவரை அவர்கள் கொலை செய்யவும் இல்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவும் இல்லை. (அவர் இருந்த அறைக்குள் அவரைத் தேடிச் சென்றவன் அவரைப்போல் ஆக்கப்பட்டு விட்டான். தேடிச்சென்ற மற்றவர்கள் அவனையே சிலுவையில் அறைந்தனர். இதனால்) அவர்கள் சந்தேகத்திற் குள்ளாக்கப்பட்டு விட்டனர். ஆகவே, எவர்கள் இதற்கு மாறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் வீண் சந்தேகத்திலேயே ஆழ்ந்து விட்டனர். வீண் சந்தேகத்தைப் பின்பற்று வதன்றி அதில் அவர்களுக்கு உண்மையான ஞான(ஆதார)ம் கிடையாது. நிச்சயமாக அவர்கள் அவரைக் கொலை செய்யவே இல்லை. (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௫௭)

Jan Trust Foundation

இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“அல்லாஹ்வின் தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் கொன்றோம்“என்று அவர்கள் கூறியதாலும் (அவர்களைச் சபித்தோம்). அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவில்லை. எனினும், அவர்களுக்கு (அவரைப் போன்று ஒருவன்) தோற்றமாக்கப்பட்டான். நிச்சயமாக அவர் விசயத்தில் (உண்மைக்கு) முரண்பட்டவர்கள் அதில் சந்தேகத்தில்தான் இருக்கின்றனர். சந்தேகத்தைப் பின்பற்றுவது தவிர அதில் அவர்களுக்கு வேறு ஓர் அறிவும் இல்லை. உறுதியாக அவர்கள் அவரைக் கொல்லவில்லை.