குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௫௫
Qur'an Surah An-Nisa Verse 155
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَبِمَا نَقْضِهِمْ مِّيْثَاقَهُمْ وَكُفْرِهِمْ بِاٰيٰتِ اللّٰهِ وَقَتْلِهِمُ الْاَنْۢبِيَاۤءَ بِغَيْرِ حَقٍّ وَّقَوْلِهِمْ قُلُوْبُنَا غُلْفٌ ۗ بَلْ طَبَعَ اللّٰهُ عَلَيْهَا بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُوْنَ اِلَّا قَلِيْلًاۖ (النساء : ٤)
- fabimā naqḍihim
- فَبِمَا نَقْضِهِم
- Then because of their breaking
- ஆகவே, அவர்கள் முறித்ததாலும்
- mīthāqahum
- مِّيثَٰقَهُمْ
- (of) their covenant
- தங்கள் வாக்குறுதியை
- wakuf'rihim
- وَكُفْرِهِم
- and their disbelief
- இன்னும் அவர்கள் நிராகரித்ததாலும்
- biāyāti
- بِـَٔايَٰتِ
- in (the) Signs
- வசனங்களை
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- waqatlihimu
- وَقَتْلِهِمُ
- and their killing
- இன்னும் அவர்கள் கொலை செய்ததாலும்
- l-anbiyāa
- ٱلْأَنۢبِيَآءَ
- (of) the Prophets
- நபிமார்களை
- bighayri ḥaqqin
- بِغَيْرِ حَقٍّ
- without any right
- நியாயமின்றி
- waqawlihim
- وَقَوْلِهِمْ
- and their saying
- இன்னும் அவர்கள் கூறியதாலும்
- qulūbunā
- قُلُوبُنَا
- "Our hearts
- எங்கள் உள்ளங்கள்
- ghul'fun
- غُلْفٌۢۚ
- (are) wrapped"
- திரையிடப்பட்டுள்ளன
- bal
- بَلْ
- Nay
- மாறாக
- ṭabaʿa
- طَبَعَ
- (has) set a seal
- முத்திரையிட்டான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- ʿalayhā
- عَلَيْهَا
- on their (hearts)
- அவற்றின் மீது
- bikuf'rihim
- بِكُفْرِهِمْ
- for their disbelief
- அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக
- falā yu'minūna
- فَلَا يُؤْمِنُونَ
- so not they believe
- ஆகவே நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்
- illā qalīlan
- إِلَّا قَلِيلًا
- except a few
- சிலரைத் தவிர
Transliteration:
Fabimaa naqdihim meesaaqahum wa kufrihim bi Aayaatil laahi wa qatlihimul Ambiyaaa'a bighairi haqqinw wa qawlihim quloobunna ghulf; bal taba'al laahu 'alaihaa bikufrihim falaa yu'minoona illaa qaleelaa(QS. an-Nisāʾ:155)
English Sahih International:
And [We cursed them] for their breaking of the covenant and their disbelief in the signs of Allah and their killing of the prophets without right and their saying, "Our hearts are wrapped" [i.e., sealed against reception]. Rather, Allah has sealed them because of their disbelief, so they believe not, except for a few. (QS. An-Nisa, Ayah ௧௫௫)
Abdul Hameed Baqavi:
ஆகவே, அவர்கள் தங்கள் வாக்குறுதிகளுக்கு மாறு செய்ததினாலும், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர்கள் நிராகரித்ததாலும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டிருந்ததாலும் "எங்களுடைய உள்ளங்கள் திரையிடப்பட்டு விட்டன. (ஆகவே, எவருடைய உபதேசமும் பலனளிக்காது) என்று அவர்கள் கூறிவந்ததாலும் (நாம் அவர்களைச் சபித்து விட்டோம்). அவர்கள் கூறியதைப்போல் அல்ல! மாறாக, அல்லாஹ்தான் அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டு விட்டான். ஆதலால் (அவர்களில் நல்லோர்) சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௫௫)
Jan Trust Foundation
அவர்களுடைய வாக்குறுதியை அவர்கள் மீறியதாலும்; அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்து விட்டதாலும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்ததாலும், “எங்கள் இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன.” (எனவே எந்த உபதேசமும் அங்கே செல்லாது) என்று அவர்கள் கூறியதாலும், (அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்;) அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் (அவர்களுடைய இருதயங்களின் மீது) முத்திரையிட்டுவிட்டான். ஆகவே அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஈமான் கொள்ள மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, அவர்கள் தங்கள் வாக்குறுதியை முறித்ததாலும், அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்ததாலும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்ததாலும் “எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டுள்ளன என்று அவர்கள் கூறியதாலும் (நாம் அவர்களைச் சபித்தோம்). மாறாக, அல்லாஹ் அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவற்றின் மீது முத்திரையிட்டான். ஆகவே, சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.