குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௫௪
Qur'an Surah An-Nisa Verse 154
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَرَفَعْنَا فَوْقَهُمُ الطُّوْرَ بِمِيْثَاقِهِمْ وَقُلْنَا لَهُمُ ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَّقُلْنَا لَهُمْ لَا تَعْدُوْا فِى السَّبْتِ وَاَخَذْنَا مِنْهُمْ مِّيْثَاقًا غَلِيْظًا (النساء : ٤)
- warafaʿnā
- وَرَفَعْنَا
- And We raised
- மேலும் உயர்த்தினோம்
- fawqahumu
- فَوْقَهُمُ
- over them
- அவர்களுக்கு மேல்
- l-ṭūra
- ٱلطُّورَ
- the mount
- மலையை
- bimīthāqihim
- بِمِيثَٰقِهِمْ
- for their covenant
- அவர்களுடைய வாக்குறுதியின் காரணமாக
- waqul'nā
- وَقُلْنَا
- and We said
- இன்னும் கூறினோம்
- lahumu
- لَهُمُ
- to them
- அவர்களுக்கு
- ud'khulū
- ٱدْخُلُوا۟
- "Enter
- நுழையுங்கள்
- l-bāba
- ٱلْبَابَ
- the gate
- வாசலில்
- sujjadan
- سُجَّدًا
- prostrating"
- தலை குணிந்தவர்களாக
- waqul'nā
- وَقُلْنَا
- And We said
- இன்னும் கூறினோம்
- lahum
- لَهُمْ
- to them
- அவர்களுக்கு
- lā taʿdū
- لَا تَعْدُوا۟
- "(Do) not transgress
- வரம்பு மீறாதீர்கள்
- fī l-sabti
- فِى ٱلسَّبْتِ
- in the Sabbath"
- சனிக்கிழமையில்
- wa-akhadhnā
- وَأَخَذْنَا
- And We took
- இன்னும் எடுத்தோம்
- min'hum
- مِنْهُم
- from them
- அவர்களிடம்
- mīthāqan
- مِّيثَٰقًا
- a covenant
- வாக்குறுதியை
- ghalīẓan
- غَلِيظًا
- solemn
- உறுதியானது
Transliteration:
Wa rafa'naa fawqahumut Toora bimeesaaqihim wa qulnaa lahumud khulul baaba sujjadanw wa qulnaa lahum laa ta'doo fis Sabti wa akhaznaa minhum meesaaqan ghaleezaa(QS. an-Nisāʾ:154)
English Sahih International:
And We raised over them the mount for [refusal of] their covenant; and We said to them, "Enter the gate bowing humbly"; and We said to them, "Do not transgress on the sabbath"; and We took from them a solemn covenant. (QS. An-Nisa, Ayah ௧௫௪)
Abdul Hameed Baqavi:
அவர்களிடம் வாக்குறுதி வாங்குவதற்காகத் "தூர்" (ஸீனாய்) என்னும் மலையை அவர்கள் மீது உயர்த்திய சமயத்தில் "(இந்நகரத்தின்) வாயிலில் தலைகுனிந்து வணங்கியவர்களாகவே செல்லுங்கள்" என்று நாம் அவர்களுக்கு கூறினோம். (மீன் வேட்டையாட) சனிக்கிழமையில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள் என்றும் அவர்களுக்குக் கூறி (இவற்றிற்காகவும்) உறுதியான வாக்குறுதியை நாம் அவர்களிடம் பெற்றிருந்தோம். (எனினும் அவர்கள் மாறி விட்டனர்.) (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௫௪)
Jan Trust Foundation
மேலும், அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம்; இன்னும் “இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்” என்று சொன்னோம்; மேலும் “(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்” என்றும் அவர்களுக்கு கூறினோம்; இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுடைய வாக்குறுதியின் காரணமாக மலையை அவர்களுக்கு மேல் உயர்த்தினோம். “வாசலில் தலைகுனிந்தவர்களாக நுழையுங்கள்” என்று அவர்களுக்குக் கூறினோம். “சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்” என்றும் அவர்களுக்குக் கூறினோம். அவர்களிடம் உறுதியான வாக்குறுதியை எடுத்தோம்.