Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௫௩

Qur'an Surah An-Nisa Verse 153

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَسْـَٔلُكَ اَهْلُ الْكِتٰبِ اَنْ تُنَزِّلَ عَلَيْهِمْ كِتٰبًا مِّنَ السَّمَاۤءِ فَقَدْ سَاَلُوْا مُوْسٰٓى اَكْبَرَ مِنْ ذٰلِكَ فَقَالُوْٓا اَرِنَا اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْهُمُ الصَّاعِقَةُ بِظُلْمِهِمْۚ ثُمَّ اتَّخَذُوا الْعِجْلَ مِنْۢ بَعْدِ مَا جَاۤءَتْهُمُ الْبَيِّنٰتُ فَعَفَوْنَا عَنْ ذٰلِكَ ۚ وَاٰتَيْنَا مُوْسٰى سُلْطٰنًا مُّبِيْنًا (النساء : ٤)

yasaluka
يَسْـَٔلُكَ
Ask you
கேட்கிறார்(கள்)/உம்மிடம்
ahlu l-kitābi
أَهْلُ ٱلْكِتَٰبِ
(the) People (of) the Book
வேதக்காரர்கள்
an tunazzila
أَن تُنَزِّلَ
that you bring down
நீர் இறக்கும்படி
ʿalayhim
عَلَيْهِمْ
to them
அவர்கள் மீது
kitāban
كِتَٰبًا
a book
ஒரு வேதத்தை
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِۚ
from the heaven
வானத்திலிருந்து
faqad
فَقَدْ
Then indeed
திட்டமாக
sa-alū
سَأَلُوا۟
they (had) asked
கேட்டனர்
mūsā
مُوسَىٰٓ
Musa
மூஸா(விடம்)
akbara
أَكْبَرَ
greater
மிகப் பெரியதை
min dhālika
مِن ذَٰلِكَ
than that
இதை விட
faqālū
فَقَالُوٓا۟
for they said
கூறினர்
arinā
أَرِنَا
"Show us
எங்களுக்குக் காண்பி
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
jahratan
جَهْرَةً
manifestly"
கண்கூடாக
fa-akhadhathumu
فَأَخَذَتْهُمُ
so struck them
ஆகவே, அவர்களைப் பிடித்தது
l-ṣāʿiqatu
ٱلصَّٰعِقَةُ
the thunderbolt
இடிமுழக்கம்
biẓul'mihim
بِظُلْمِهِمْۚ
for their wrongdoing
அவர்களின் அநியாயத்தினால்
thumma
ثُمَّ
Then
பிறகு
ittakhadhū
ٱتَّخَذُوا۟
they took
எடுத்துக் கொண்டனர்
l-ʿij'la
ٱلْعِجْلَ
the calf (for worship)
காளைக் கன்றை
min baʿdi
مِنۢ بَعْدِ
from after
பின்னர்
mā jāathumu
مَا جَآءَتْهُمُ
[what] came to them
அவர்களிடம் வந்த(து)
l-bayinātu
ٱلْبَيِّنَٰتُ
the clear proofs
தெளிவான அத்தாட்சிகள்
faʿafawnā
فَعَفَوْنَا
then We forgave them
மன்னித்தோம்
ʿan dhālika
عَن ذَٰلِكَۚ
for that
அதை
waātaynā
وَءَاتَيْنَا
And We gave
இன்னும் கொடுத்தோம்
mūsā
مُوسَىٰ
Musa
மூஸாவிற்கு
sul'ṭānan
سُلْطَٰنًا
an authority
சான்றை
mubīnan
مُّبِينًا
clear
தெளிவான(து)

Transliteration:

yas'aluka Ahlul Kitaabi an tunazzila 'alaihim Kitaabam minas samaaa'i faqad sa aloo Moosaa akbara min zaalika faqaaloo arinal laaha jahratan fa akhazat humus saa'iqatu bizulmihim; summat takhazul 'ijla mim ba'di maa jaa'at humul baiyinaatu fa'afawnaa 'ann zaalik; wa aatainaa Moosaa sultaanam mubeenaa (QS. an-Nisāʾ:153)

English Sahih International:

The People of the Scripture ask you to bring down to them a book from the heaven. But they had asked of Moses [even] greater than that and said, "Show us Allah outright," so the thunderbolt struck them for their wrongdoing. Then they took the calf [for worship] after clear evidences had come to them, and We pardoned that. And We gave Moses a clear authority. (QS. An-Nisa, Ayah ௧௫௩)

Abdul Hameed Baqavi:

(நபியே!) வேதத்தையுடையவர்கள் (தாங்கள் விரும்புகின்ற படி) வானத்திலிருந்து தங்கள்மீது ஒரு வேதத்தை இறக்கி வைக்குமாறு உங்களிடம் கேட்கின்றனர். நிச்சயமாக இதைவிடப் பெரியதொன்றையே மூஸாவிடம் அவர்கள் கேட்டு "அல்லாஹ்வை எங்களுக்குக் கண்கூடாகக் காண்பியுங்கள்" என்று கூறினார்கள். ஆகவே, அவர்களின் அநியாயத்தின் காரணமாக அவர்களை இடி முழக்கம் பிடித்துக் கொண்டது. (இதுமட்டுமா?) அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னரும் காளைக்கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். இதனையும் நாம் மன்னித்து (அவர்களுடைய நபி) மூஸாவுக்கு (பின்னும்) தெளிவான அத்தாட்சியைக் கொடுத்தோம். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௫௩)

Jan Trust Foundation

(நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர்; அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு| “எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்” எனக் கூறினர்; ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது; அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள்; அதையும் நாம் மன்னித்தோம்; இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) வேதக்காரர்கள் வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு வேதத்தை நீர் இறக்கும்படி உம்மிடம் கேட்கிறார்கள். திட்டமாக இதைவிட மிகப் பெரியதை மூஸாவிடம் (அவர்கள்) கேட்டனர். “அல்லாஹ்வை கண்கூடாக எங்களுக்குக் காண்பி” என்று கூறினர். ஆகவே, அவர்களின் அநியாயத்தினால் அவர்களை இடி முழக்கம் பிடித்தது. பிறகு, அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். அதை மன்னித்தோம். மூஸாவிற்கு தெளிவான சான்றையும் கொடுத்தோம்.