Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௫௨

Qur'an Surah An-Nisa Verse 152

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ وَلَمْ يُفَرِّقُوْا بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ اُولٰۤىِٕكَ سَوْفَ يُؤْتِيْهِمْ اُجُوْرَهُمْ ۗوَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا ࣖ (النساء : ٤)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
believe
நம்பிக்கை கொண்டனர்
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
warusulihi
وَرُسُلِهِۦ
and His Messengers
இன்னும் அவனுடைய தூதர்களை
walam yufarriqū
وَلَمْ يُفَرِّقُوا۟
and not they differentiate
இன்னும் பிரிவினை செய்யவில்லை
bayna
بَيْنَ
between
இடையில்
aḥadin
أَحَدٍ
(any) one
ஒருவர்
min'hum
مِّنْهُمْ
of them
அவர்களில்
ulāika
أُو۟لَٰٓئِكَ
those
அவர்கள்
sawfa yu'tīhim
سَوْفَ يُؤْتِيهِمْ
soon He will give them
கொடுப்பான்/அவர்களுக்கு
ujūrahum
أُجُورَهُمْۗ
their reward
கூலிகளை அவர்களுடைய
wakāna
وَكَانَ
And is
இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
ghafūran
غَفُورًا
Oft-Forgiving
மகா மன்னிப்பாளனாக
raḥīman
رَّحِيمًا
Most Merciful
மகாகருணையாளனாக

Transliteration:

Wallazeena aamanoo billaahi wa Rusulihee wa lam yufarriqoo baina ahadim minhum ulaaa'ika sawfa yu'teehim ujoorahum; wa kaanal laahu Ghafoorar Raheema (QS. an-Nisāʾ:152)

English Sahih International:

But they who believe in Allah and His messengers and do not discriminate between any of them – to those He is going to give their rewards. And ever is Allah Forgiving and Merciful. (QS. An-Nisa, Ayah ௧௫௨)

Abdul Hameed Baqavi:

எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கிடையில் பிரிவினை செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய கூலியை (அல்லாஹ் மறுமையில்) கொடுப்பான். அல்லாஹ் மிக்க பிழை பொறுப்பவனும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௫௨)

Jan Trust Foundation

யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டு, அவர்களில் ஒருவருக்கிடையிலும் பிரிவினை செய்யவில்லையோ அவர்களுக்கு அவர்களுடைய கூலிகளை (அல்லாஹ்) கொடுப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.