Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௩௬

Qur'an Surah An-Nisa Verse 136

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِيْ نَزَّلَ عَلٰى رَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِيْٓ اَنْزَلَ مِنْ قَبْلُ ۗوَمَنْ يَّكْفُرْ بِاللّٰهِ وَمَلٰۤىِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلٰلًا ۢ بَعِيْدًا (النساء : ٤)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
O you who believe[d]!
நம்பிக்கையாளர்களே!
āminū
ءَامِنُوا۟
Believe
நம்பிக்கை கொள்ளுங்கள்
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
warasūlihi
وَرَسُولِهِۦ
and His Messenger
இன்னும் அவனின் தூதரை
wal-kitābi alladhī
وَٱلْكِتَٰبِ ٱلَّذِى
and the Book which
இன்னும் வேதத்தை/எது
nazzala
نَزَّلَ
He revealed
இறக்கினான்
ʿalā
عَلَىٰ
upon
மீது
rasūlihi
رَسُولِهِۦ
His Messenger
தன் தூதர்
wal-kitābi
وَٱلْكِتَٰبِ
and the Book
இன்னும் வேதத்தை
alladhī
ٱلَّذِىٓ
which
எது
anzala
أَنزَلَ
He revealed
இறக்கினான்
min qablu
مِن قَبْلُۚ
from before
முன்னர்
waman
وَمَن
And whoever
எவர்
yakfur
يَكْفُرْ
disbelieves
நிராகரிப்பார்
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
wamalāikatihi
وَمَلَٰٓئِكَتِهِۦ
and His Angels
இன்னும் அவனின் வானவர்களை
wakutubihi
وَكُتُبِهِۦ
and His Books
இன்னும் அவனின் வேதங்களை
warusulihi
وَرُسُلِهِۦ
and His Messengers
இன்னும் அவனின் தூதர்களை
wal-yawmi
وَٱلْيَوْمِ
and the Day
இன்னும் நாளை
l-ākhiri
ٱلْءَاخِرِ
the Last
மறுமை
faqad
فَقَدْ
then surely
திட்டமாக
ḍalla
ضَلَّ
he (has) lost (the) way
வழிகெட்டார்
ḍalālan
ضَلَٰلًۢا
straying
வழிகேடாக
baʿīdan
بَعِيدًا
far away
தூரமானது

Transliteration:

Yaaa aiyuhal lazeena aamanooo aaminoo billaahi wa Rasoolihee wal Kitaabil lazee nazzala 'alaa Rasoolihee wal Kitaabil lazeee anzala min qabl; wa mai yakfur billaahi wa Malaaa'ikatihee wa Kutubihee wa Rusulihee wal Yawmil Aakhiri faqad dalla dalaalam ba'eedaa (QS. an-Nisāʾ:136)

English Sahih International:

O you who have believed, believe in Allah and His Messenger and the Book that He sent down upon His Messenger and the Scripture which He sent down before. And whoever disbelieves in Allah, His angels, His books, His messengers, and the Last Day has certainly gone far astray. (QS. An-Nisa, Ayah ௧௩௬)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவன் தன்னுடைய (இத்)தூதர் மீது அருளிய இவ்வேதத்தையும், இதற்கு முன்னர் அவன் அருளிய வேதங்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவன் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் நிராகரிக்கின்றானோ அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில்தான் செல்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௩௬)

Jan Trust Foundation

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வையும், அவனின் தூதரையும், அவன் தன் தூதர் மீது இறக்கிய வேதத்தையும், (இதற்கு) முன்னர் அவன் இறக்கிய வேதத்தையும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவர் அல்லாஹ்வையும், அவனின் வானவர்களையும், அவனின் வேதங்களையும், அவனின் தூதர்களையும், மறுமை நாளையும் நிராகரிப்பாரோ (அவர்), திட்டமாக தூரமான வழிகேடாக வழிகெட்டார்.