குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௧௦
Qur'an Surah An-Nisa Verse 110
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَنْ يَّعْمَلْ سُوْۤءًا اَوْ يَظْلِمْ نَفْسَهٗ ثُمَّ يَسْتَغْفِرِ اللّٰهَ يَجِدِ اللّٰهَ غَفُوْرًا رَّحِيْمًا (النساء : ٤)
- waman yaʿmal
- وَمَن يَعْمَلْ
- And whoever does
- எவர்/செய்வார்
- sūan
- سُوٓءًا
- evil
- ஒரு தீமையை
- aw
- أَوْ
- or
- அல்லது
- yaẓlim
- يَظْلِمْ
- wrongs
- அநீதியிழைப்பார்
- nafsahu
- نَفْسَهُۥ
- his soul
- தனக்கு
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- yastaghfiri
- يَسْتَغْفِرِ
- seeks forgiveness
- மன்னிப்புக் கேட்பார்
- l-laha
- ٱللَّهَ
- (of) Allah
- அல்லாஹ்விடம்
- yajidi
- يَجِدِ
- he will find
- காண்பார்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- ghafūran
- غَفُورًا
- Oft-Forgiving
- மகா மன்னிப்பாளனாக
- raḥīman
- رَّحِيمًا
- Most Merciful
- பெரும் கருணையாளனாக
Transliteration:
Wa mai ya'mal sooo'an aw yazlim nafsahoo summa yastaghfiril laaha yajidil laaha Ghafoorar Raheemaa(QS. an-Nisāʾ:110)
English Sahih International:
And whoever does a wrong or wrongs himself but then seeks forgiveness of Allah will find Allah Forgiving and Merciful. (QS. An-Nisa, Ayah ௧௧௦)
Abdul Hameed Baqavi:
எவரேனும், யாதொரு பாவத்தைச் செய்துவிட்டு அல்லது தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டு, பின்னர் (அதிலிருந்து விலகி, உண்மையாகவே கைசேதப்பட்டு) அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ்வை (அவனுடைய குற்றங்களை) மிக மன்னிப்பவனாகவும் (அவன் மீது) நிகரற்ற அன்புடையவனாகவும் காண்பான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௧௦)
Jan Trust Foundation
எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் அவர் - அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவர், ஒரு தீமையைச் செய்துவிட்டு அல்லது தனக்குத்தானே அநீதி இழைத்து விட்டு, பிறகு (அதிலிருந்து விலகி, கைசேதப்பட்டு) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரினால் அல்லாஹ்வை மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாகக் காண்பார்.