Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௦௨

Qur'an Surah An-Nisa Verse 102

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௦௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا كُنْتَ فِيْهِمْ فَاَقَمْتَ لَهُمُ الصَّلٰوةَ فَلْتَقُمْ طَاۤىِٕفَةٌ مِّنْهُمْ مَّعَكَ وَلْيَأْخُذُوْٓا اَسْلِحَتَهُمْ ۗ فَاِذَا سَجَدُوْا فَلْيَكُوْنُوْا مِنْ وَّرَاۤىِٕكُمْۖ وَلْتَأْتِ طَاۤىِٕفَةٌ اُخْرٰى لَمْ يُصَلُّوْا فَلْيُصَلُّوْا مَعَكَ وَلْيَأْخُذُوْا حِذْرَهُمْ وَاَسْلِحَتَهُمْ ۗ وَدَّ الَّذِيْنَ كَفَرُوْا لَوْ تَغْفُلُوْنَ عَنْ اَسْلِحَتِكُمْ وَاَمْتِعَتِكُمْ فَيَمِيْلُوْنَ عَلَيْكُمْ مَّيْلَةً وَّاحِدَةً ۗوَلَا جُنَاحَ عَلَيْكُمْ اِنْ كَانَ بِكُمْ اَذًى مِّنْ مَّطَرٍ اَوْ كُنْتُمْ مَّرْضٰٓى اَنْ تَضَعُوْٓا اَسْلِحَتَكُمْ وَخُذُوْا حِذْرَكُمْ ۗ اِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْكٰفِرِيْنَ عَذَابًا مُّهِيْنًا (النساء : ٤)

wa-idhā kunta
وَإِذَا كُنتَ
And when you are
நீர் இருந்தால்
fīhim
فِيهِمْ
among them
அவர்களில்
fa-aqamta
فَأَقَمْتَ
and you lead
இன்னும் நிலைநிறுத்தினால்
lahumu
لَهُمُ
for them
அவர்களுக்கு
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
the prayer
தொழுகையை
faltaqum
فَلْتَقُمْ
then let stand
நிற்கவும்
ṭāifatun
طَآئِفَةٌ
a group
ஒரு பிரிவு
min'hum
مِّنْهُم
of them
அவர்களில்
maʿaka
مَّعَكَ
with you
உம்முடன்
walyakhudhū
وَلْيَأْخُذُوٓا۟
and let them take
அவர்கள் எடுக்கவும்
asliḥatahum
أَسْلِحَتَهُمْ
their arms
ஆயுதங்களை/தங்கள்
fa-idhā sajadū
فَإِذَا سَجَدُوا۟
Then when they have prostrated
அவர்கள் சஜ்தா செய்து விட்டால்
falyakūnū
فَلْيَكُونُوا۟
then let them be
அவர்கள் இருக்கவும்
min warāikum
مِن وَرَآئِكُمْ
from behind you
உங்களுக்குப் பின்னர்
waltati
وَلْتَأْتِ
and let come (forward)
இன்னும் வரவும்
ṭāifatun ukh'rā
طَآئِفَةٌ أُخْرَىٰ
a group other
ஒரு பிரிவு/மற்ற
lam yuṣallū
لَمْ يُصَلُّوا۟
(which has) not prayed
அவர்கள் தொழவில்லை
falyuṣallū
فَلْيُصَلُّوا۟
and let them pray
அவர்கள் தொழவும்
maʿaka
مَعَكَ
with you
உம்முடன்
walyakhudhū
وَلْيَأْخُذُوا۟
and let them take
அவர்கள் எடுக்கவும்
ḥidh'rahum
حِذْرَهُمْ
their precautions
தங்கள் தற்காப்பை
wa-asliḥatahum
وَأَسْلِحَتَهُمْۗ
and their arms
இன்னும் தங்கள் ஆயுதங்களை
wadda alladhīna
وَدَّ ٱلَّذِينَ
Wished those who
விரும்பினார்(கள்)/ எவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieved
நிராகரித்தனர்
law taghfulūna
لَوْ تَغْفُلُونَ
if you neglect
நீங்கள் கவனமற்று விடுவதை
ʿan
عَنْ
[about]
இருந்து
asliḥatikum
أَسْلِحَتِكُمْ
your arms
உங்கள் ஆயுதங்கள்
wa-amtiʿatikum
وَأَمْتِعَتِكُمْ
and your baggage
இன்னும் உங்கள் பொருள்கள்
fayamīlūna
فَيَمِيلُونَ
so (that) they (can) assault
அவர்கள் பாய்ந்து விடுவார்கள்
ʿalaykum
عَلَيْكُم
[upon] you
உங்கள் மீது
maylatan
مَّيْلَةً
(in) an attack
பாய்ச்சல்
wāḥidatan
وَٰحِدَةًۚ
single
ஒரே பாய்ச்சல்
walā junāḥa
وَلَا جُنَاحَ
But (there is) no blame
குற்றமில்லை
ʿalaykum
عَلَيْكُمْ
upon you
உங்கள் மீது
in kāna
إِن كَانَ
if was
இருந்தால்
bikum
بِكُمْ
with you
உங்களுக்கு
adhan
أَذًى
any trouble
சிரமம்
min
مِّن
(because) of
காரணமாக
maṭarin
مَّطَرٍ
rain
மழை
aw
أَوْ
or
அல்லது
kuntum
كُنتُم
you are
இருந்தீர்கள்
marḍā
مَّرْضَىٰٓ
sick
நோயாளிகளாக
an taḍaʿū
أَن تَضَعُوٓا۟
that you lay down
நீங்கள் வைப்பது
asliḥatakum
أَسْلِحَتَكُمْۖ
your arms
உங்கள் ஆயுதங்களை
wakhudhū
وَخُذُوا۟
but take
இன்னும் எடுங்கள்
ḥidh'rakum
حِذْرَكُمْۗ
your precautions
உங்கள் தற்காப்பை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
aʿadda
أَعَدَّ
has prepared
ஏற்படுத்தினான்
lil'kāfirīna
لِلْكَٰفِرِينَ
for the disbelievers
நிராகரிப்பாளர்களுக்கு
ʿadhāban
عَذَابًا
a punishment
வேதனையை
muhīnan
مُّهِينًا
humiliating
இழிவான

Transliteration:

Wa izaa kunta feehim fa aqamta lahumus Salaata faltaqum taaa'ifatum minhum ma'aka walyaakhuzooo aslihatahum fa izaa sajadoo fal yakoonoo minw waraaa'ikum waltaati taaa'ifatun ukhraa lam yusalloo falyusallo ma'aka walyaakhuzoo hizrahum wa aslihatahum; waddal lazeena kafaroo law taghfuloona 'anaslihatikum wa amti'atikum fa yameeloona 'alaikum mailatanw waahidah; wa laa junaaha 'alaikum in kaana bikum azam mimmatarin aw kuntum mmardaaa an tada'ooo aslihatakum wa khuzoo hizrakum; innal laaha a'adda lilkaafireena 'azaabam muheenaa (QS. an-Nisāʾ:102)

English Sahih International:

And when you [i.e., the commander of an army] are among them and lead them in prayer, let a group of them stand [in prayer] with you and let them carry their arms. And when they have prostrated, let them be [in position] behind you and have the other group come forward which has not [yet] prayed and let them pray with you, taking precaution and carrying their arms. Those who disbelieve wish that you would neglect your weapons and your baggage so they could come down upon you in one [single] attack. But there is no blame upon you, if you are troubled by rain or are ill, for putting down your arms, but take precaution. Indeed, Allah has prepared for the disbelievers a humiliating punishment. (QS. An-Nisa, Ayah ௧௦௨)

Abdul Hameed Baqavi:

(நபியே! போர் முனையில்) நீங்களும் அவர்களுடன் இருந்து அவர்களைத் தொழவைக்க நீங்கள் (இமாமாக) முன்னின்றால், அவர்களில் ஒரு பிரிவினர் (மட்டும் தங்கள் கையில்) தங்களுடைய ஆயுதங்களைப் பிடித்துக்கொண்டே உங்களுடன் தொழவும். இவர்கள் உங்களுடன் (தொழுது) "ஸஜ்தா" செய்துவிட்டால் (அணியிலிருந்து விலகி) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து) நிற்கவும். (அது சமயம்) தொழாமலிருந்த மற்றொரு கூட்டத்தினர் வந்து உங்களுடன் சேர்ந்து தொழவும். எனினும் அவர்களும் தங்கள் (கையில்) ஆயுதங்களைப் பிடித்த வண்ணம் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருக்கவும். ஏனென்றால், நீங்கள் உங்கள் பொருள் களிலிருந்தும், உங்கள் ஆயுதங்களிலிருந்தும் பராமுகமாகிவிட்டால் உங்கள் மீது ஒரேயடியாக பாய்ந்து தாக்குதல் நடத்திட வேண்டு மென்று அந்நிராகரிப்பவர்கள் விரும்புகின்றனர். இந்நிலைமையில், மழையின் தொந்தரவினாலோ அல்லது நீங்கள் நோயாளியாக இருந்தோ உங்கள் ஆயுதங்களைக் (கையில் பிடிக்க முடியா விட்டால்) கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது குற்றமில்லை. எனினும் நீங்கள் (அவர்களைப் பற்றி) எச்சரிக்கையாகவே இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௦௨)

Jan Trust Foundation

(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்; அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்; ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது; எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே! போரில்) நீர் அவர்களுடன் இருந்து, அவர்களுக்கு தொழுகையை நிலைநிறுத்தினால் அவர்களில் ஒரு பிரிவு உம்முடன் (தொழ) நிற்கவும். அவர்கள் தங்கள் ஆயுதங்களை (கைகளில்) எடுக்கவும். அவர்கள் (உம்முடன் தொழுது) சஜ்தா செய்துவிட்டால் (தொழுகையிலிருந்து விலகி) உங்களுக்குப் பின்னால் இருக்கவும். தொழாமலிருந்த மற்றொரு பிரிவு வரவும், உம்முடன் அவர்கள் தொழவும். அவர்களும் தங்கள் தற்காப்பையும், தங்கள் ஆயுதங்களையும் எடுக்கவும். நீங்கள் உங்கள் ஆயுதங்கள் மற்றும் உங்கள் பொருள்களிலிருந்து கவனமற்றுவிட வேண்டுமே! என்று நிராகரிப்பாளர்கள் விரும்பினர். (அப்படி கவனமற்றால்) உடனே உங்கள் மீது ஒரே பாய்ச்சலாக பாய்ந்து விடுவார்கள். மழையின் காரணமாக சிரமம் உங்களுக்கு இருந்தால் அல்லது நீங்கள் நோயாளிகளாக இருந்தால் உங்கள் ஆயுதங்களை (கீழே) வைப்பது உங்கள் மீது குற்றமில்லை. உங்கள் தற்காப்பை எடுங்கள் (உஷாராக இருங்கள்). நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கு இழிவான வேதனையை ஏற்படுத்தினான்.