Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௯௩

Qur'an Surah Ali 'Imran Verse 93

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௯௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ كُلُّ الطَّعَامِ كَانَ حِلًّا لِّبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اِلَّا مَا حَرَّمَ اِسْرَاۤءِيْلُ عَلٰى نَفْسِهٖ مِنْ قَبْلِ اَنْ تُنَزَّلَ التَّوْرٰىةُ ۗ قُلْ فَأْتُوْا بِالتَّوْرٰىةِ فَاتْلُوْهَآ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (آل عمران : ٣)

kullu
كُلُّ
All
எல்லா(ம்)
l-ṭaʿāmi
ٱلطَّعَامِ
[the] food
உணவு(ம்)
kāna
كَانَ
was
இருந்தது
ḥillan
حِلًّا
lawful
ஆகுமானதாக
libanī is'rāīla
لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
for (the) Children (of) Israel
இஸ்ரவேலர்களுக்கு
illā
إِلَّا
except
தவிர
مَا
what
எவை
ḥarrama
حَرَّمَ
made unlawful
விலக்கினார்
is'rāīlu
إِسْرَٰٓءِيلُ
Israel
இஸ்ராயீல்
ʿalā nafsihi
عَلَىٰ نَفْسِهِۦ
upon himself
தன் மீது
min qabli
مِن قَبْلِ
[from] before
முன்னர்
an tunazzala
أَن تُنَزَّلَ
[that] (was) revealed
இறக்கப்படுவதற்கு
l-tawrātu
ٱلتَّوْرَىٰةُۗ
the Taurat
தவ்றாத்
qul
قُلْ
Say
கூறுவீராக
fatū
فَأْتُوا۟
"So bring
வாருங்கள்
bil-tawrāti
بِٱلتَّوْرَىٰةِ
the Taurat
தவ்றாத்தைக்கொண்டு
fa-it'lūhā
فَٱتْلُوهَآ
and recite it
இன்னும் ஓதுங்கள்/அதை
in kuntum
إِن كُنتُمْ
if you are
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
truthful"
உண்மையாளர்களாக

Transliteration:

Kullut ta'aami kaana hillal li Baneee Israaa'eela illaa maa harrama Israaa'eelu 'alaa nafsihee min qabli an tunzzalat Tawraah; qul faatoo bit Tawraati fatloohaaa in kuntum saadiqeen (QS. ʾĀl ʿImrān:93)

English Sahih International:

All food was lawful to the Children of Israel except what Israel [i.e., Jacob] had made unlawful to himself before the Torah was revealed. Say, [O Muhammad], "So bring the Torah and recite it, if you should be truthful." (QS. Ali 'Imran, Ayah ௯௩)

Abdul Hameed Baqavi:

இஸ்ரவேலர்களுக்கு தவ்றாத் அருளப்படுவதற்கு முன்னர் எல்லா உணவும் ஆகுமானதாகவே இருந்தது. எனினும், இஸ்ராயீல் தனக்கு விலக்கிக் கொண்டவற்றைத் தவிர. (ஆகவே இதற்கு மாறாகக் கூறும் யூதர்களை நோக்கி நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் தவ்றாத்தைக் கொண்டுவந்து ஓதிக் காண்பியுங்கள்." (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௯௩)

Jan Trust Foundation

இஸ்ராயீல் (என்ற யஃகூப்) தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னால் தன் மீது ஹராமாக்கிக் கொண்டதைத் தவிர, இஸ்ரவேலர்களுக்கு எல்லாவகையான உணவும் அனுமதிக்கப்பட்டிருந்தது; (நபியே!) நீர் கூறும்| “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தையும் கொண்டு வந்து அதை ஓதிக்காண்பியுங்கள்” என்று.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தவ்றாத் இறக்கப்படுவதற்கு முன்னர் இஸ்ரவேலர்களுக்கு எல்லா உணவும் ஆகுமானதாகவே இருந்தது, இஸ்ராயீல் தன் மீது விலக்கியவற்றைத் தவிர. (யூதர்களே! நீங்கள்) உண்மையாளர்களாக இருந்தால் தவ்றாத்தைக் கொண்டுவாருங்கள்! அதை ஓதுங்கள்! என்று (நபியே!) கூறுவீராக."