Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௯௨

Qur'an Surah Ali 'Imran Verse 92

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௯௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰى تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ ۗوَمَا تُنْفِقُوْا مِنْ شَيْءٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ (آل عمران : ٣)

lan tanālū
لَن تَنَالُوا۟
Never will you attain
அறவே அடைய மாட்டீர்கள்
l-bira
ٱلْبِرَّ
[the] righteousness
நன்மையை
ḥattā
حَتَّىٰ
until
வரை
tunfiqū
تُنفِقُوا۟
you spend
தர்மம் செய்கிறீர்கள்
mimmā
مِمَّا
from what
எதிலிருந்து
tuḥibbūna
تُحِبُّونَۚ
you love
நேசிக்கிறீர்கள்
wamā tunfiqū
وَمَا تُنفِقُوا۟
And whatever you spend
எதை (நீங்கள்) தர்மம் செய்தாலும்
min shayin
مِن شَىْءٍ
of a thing
ஒரு பொருள் / இல்
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
then indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
bihi
بِهِۦ
of it
அதை
ʿalīmun
عَلِيمٌ
(is) All-Knowing
மிக நன்கறிந்தவன்

Transliteration:

Lan tanaalul birra hattaa tunfiqoo mimmaa tuhibboon; wa maa tunfiqoo min shai'in fa innal laaha bihee 'Aleem (QS. ʾĀl ʿImrān:92)

English Sahih International:

Never will you attain the good [reward] until you spend [in the way of Allah] from that which you love. And whatever you spend – indeed, Allah is Knowing of it. (QS. Ali 'Imran, Ayah ௯௨)

Abdul Hameed Baqavi:

உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் (தானமாக) செலவு செய்யாத வரையில் நிச்சயமாக நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள். ஒரு சொற்பத்தை நீங்கள் தானம் செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனையும் நன்கறிவான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௯௨)

Jan Trust Foundation

நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(செல்வத்தில்) நீங்கள் நேசிப்பதிலிருந்து தர்மம் செய்யும் வரை நன்மையை அறவே அடையமாட்டீர்கள். பொருளில் எதை (நீங்கள்) தர்மம் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை மிக நன்கறிந்தவன் ஆவான்.