Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௯

Qur'an Surah Ali 'Imran Verse 9

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

رَبَّنَآ اِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيْهِ ۗاِنَّ اللّٰهَ لَا يُخْلِفُ الْمِيْعَادَ ࣖ (آل عمران : ٣)

rabbanā
رَبَّنَآ
Our Lord!
எங்கள் இறைவா
innaka
إِنَّكَ
Indeed You
நிச்சயமாக நீ
jāmiʿu
جَامِعُ
will gather
ஒன்று சேர்ப்பவன்
l-nāsi
ٱلنَّاسِ
[the] mankind
மக்களை
liyawmin
لِيَوْمٍ
on a Day
ஒரு நாளில்
لَّا
(there is) no
அறவே இல்லை
rayba
رَيْبَ
doubt
சந்தேகம்
fīhi
فِيهِۚ
in it
அதில்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
lā yukh'lifu
لَا يُخْلِفُ
(does) not break
மாற்ற மாட்டான்
l-mīʿāda
ٱلْمِيعَادَ
the Promise"
வாக்கை

Transliteration:

Rabbanaaa innaka jaami 'un-naasi li Yawmil laa raibafeeh; innal laaha laa yukhliful mee'aad (QS. ʾĀl ʿImrān:9)

English Sahih International:

Our Lord, surely You will gather the people for a Day about which there is no doubt. Indeed, Allah does not fail in His promise." (QS. Ali 'Imran, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

"எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஒரு நாளில் மனிதர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். அ(ந்நாள் வருவ)தில் சந்தேகமேயில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் தவறுபவனல்ல" (என்று கூறுவார்கள்.) (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௯)

Jan Trust Foundation

“எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்” (என்றும் அவர்கள் பிரார்த்திப்பார்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"எங்கள் இறைவா! நிச்சயமாக நீ ஒரு நாளில் மக்களை ஒன்று சேர்ப்பாய். அதில் சந்தேகம் அறவே இல்லை. நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்கை மாற்றமாட்டான்."