குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௮௦
Qur'an Surah Ali 'Imran Verse 80
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَا يَأْمُرَكُمْ اَنْ تَتَّخِذُوا الْمَلٰۤىِٕكَةَ وَالنَّبِيّٖنَ اَرْبَابًا ۗ اَيَأْمُرُكُمْ بِالْكُفْرِ بَعْدَ اِذْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ࣖ (آل عمران : ٣)
- walā
- وَلَا
- And not
- அவர் ஏவுவது இல்லை
- yamurakum
- يَأْمُرَكُمْ
- he will order you
- அவர் ஏவுவது இல்லை உங்களை
- an tattakhidhū
- أَن تَتَّخِذُوا۟
- that you take
- நீங்கள்எடுத்துக்கொள்வது
- l-malāikata
- ٱلْمَلَٰٓئِكَةَ
- the Angels
- வானவர்களை
- wal-nabiyīna
- وَٱلنَّبِيِّۦنَ
- and the Prophets
- இன்னும் நபிமார்களை
- arbāban
- أَرْبَابًاۗ
- (as) lords
- கடவுள்களாக
- ayamurukum
- أَيَأْمُرُكُم
- Would he order you
- உங்களைஏவுவாரா?
- bil-kuf'ri
- بِٱلْكُفْرِ
- to [the] disbelief
- நிராகரிக்கும்படி
- baʿda
- بَعْدَ
- after
- பின்னர்
- idh antum
- إِذْ أَنتُم
- [when] you (have become)
- நீங்கள் ஆகிய
- mus'limūna
- مُّسْلِمُونَ
- Muslims?
- முஸ்லிம்களாக
Transliteration:
Wa laa yaamurakum an tattakhizul malaaa 'ikata wan Nabiyyeena arbaabaa; a yaamurukum bilkufri ba'da iz antum muslimoon(QS. ʾĀl ʿImrān:80)
English Sahih International:
Nor could he order you to take the angels and prophets as lords. Would he order you to disbelief after you had been Muslims? (QS. Ali 'Imran, Ayah ௮௦)
Abdul Hameed Baqavi:
தவிர "மலக்குகளையும், நபிமார்களையும் தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள்" என்றும் அவர் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார். என்னே! இறைவன் ஒருவனையே நீங்கள் அங்கீகரித்த பின்னர் (அவனை) நிராகரிக்கும்படி அவர் உங்களை ஏவுவாரா? (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௮௦)
Jan Trust Foundation
மேலும் அவர், “மலக்குகளையும், நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய இரட்சகர்களாக) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார் - நீங்கள் முஸ்லிம்களாக (அல்லாஹ்விடமே முற்றிலும் சரணடைந்தவர்கள்) ஆகிவிட்ட பின்னர் (நீங்கள் அவனை) நிராகரிப்போராகி விடுங்கள் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிடுவாரா?.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் "மலக்குகளையும், நபிமார்களையும் கடவுள்களாக (நீங்கள்) எடுத்துக் கொள்வதற்கும்" (அவர்) உங்களை ஏவுவது (அவருக்கு உசிதம்) இல்லை. நீங்கள் முஸ்லிம்களாக ஆகிய பின்னர் (அல்லாஹ்வை) நிராகரிக்கும்படி உங்களை ஏவுவாரா?