குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௫௩
Qur'an Surah Ali 'Imran Verse 53
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
رَبَّنَآ اٰمَنَّا بِمَآ اَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ (آل عمران : ٣)
- rabbanā
- رَبَّنَآ
- Our Lord
- எங்கள் இறைவா
- āmannā
- ءَامَنَّا
- we believe[d]
- நம்பிக்கை கொண்டோம்
- bimā
- بِمَآ
- in what
- எதை
- anzalta
- أَنزَلْتَ
- You revealed
- நீ இறக்கினாய்
- wa-ittabaʿnā
- وَٱتَّبَعْنَا
- and we follow[ed]
- இன்னும் பின்பற்றினோம்
- l-rasūla
- ٱلرَّسُولَ
- the Messenger
- தூதர்
- fa-uk'tub'nā
- فَٱكْتُبْنَا
- then write us
- ஆகவே எங்களை பதிவு செய்
- maʿa l-shāhidīna
- مَعَ ٱلشَّٰهِدِينَ
- among the witnesses"
- சாட்சியாளர்களுடன்
Transliteration:
Rabbanaaa aamannaa bimaaa anzalta wattaba'nar Rasoola faktubnaa ma'ash shaahideen(QS. ʾĀl ʿImrān:53)
English Sahih International:
Our Lord, we have believed in what You revealed and have followed the messenger [i.e., Jesus], so register us among the witnesses [to truth]." (QS. Ali 'Imran, Ayah ௫௩)
Abdul Hameed Baqavi:
(அன்றி) "எங்கள் இறைவனே! நீ அருட்செய்த (வேதத்)தை நாங்கள் நம்புகின்றோம். (உன்னுடைய) இத்தூதரையும் நாங்கள் பின்பற்றி நடக்கின்றோம். ஆதலால், (அவரை) உண்மைப் படுத்தியவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!" (என்றும் அந்தத் தோழர்கள் பிரார்த்தித்தனர்.) (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௫௩)
Jan Trust Foundation
“எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
"எங்கள் இறைவா! நீ இறக்கியதை நம்பிக்கை கொண்டோம். தூதரை பின்பற்றினோம். ஆகவே, சாட்சியாளர்களுடன் எங்களை பதிவு செய்!" (என்று பிரார்த்தித்தனர்).