Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௩௭

Qur'an Surah Ali 'Imran Verse 37

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْۢبَتَهَا نَبَاتًا حَسَنًاۖ وَّكَفَّلَهَا زَكَرِيَّا ۗ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا ۚ قَالَ يٰمَرْيَمُ اَنّٰى لَكِ هٰذَا ۗ قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ ۗ اِنَّ اللّٰهَ يَرْزُقُ مَنْ يَّشَاۤءُ بِغَيْرِ حِسَابٍ (آل عمران : ٣)

fataqabbalahā
فَتَقَبَّلَهَا
So accepted her
ஆகவேஅவளைஏற்றான்
rabbuhā
رَبُّهَا
her Lord
அவளுடைய இறைவன்
biqabūlin
بِقَبُولٍ
with acceptance
ஏற்பாக
ḥasanin
حَسَنٍ
good
அழகியது
wa-anbatahā
وَأَنۢبَتَهَا
and made her grow
இன்னும் அவளை வளர்த்தான்
nabātan
نَبَاتًا
a growing
வளர்ப்பாக
ḥasanan
حَسَنًا
good
அழகியது
wakaffalahā
وَكَفَّلَهَا
and put her in (the) care
இன்னும் அவளுக்கு பொறுப்பாளராக்கினான்
zakariyyā
زَكَرِيَّاۖ
(of) Zakariya
ஸகரிய்யாவை
kullamā dakhala
كُلَّمَا دَخَلَ
Whenever entered
நுழையும் போதெல்லாம்
ʿalayhā
عَلَيْهَا
upon her
அவளிடம்
zakariyyā
زَكَرِيَّا
Zakariya
ஸகரிய்யா
l-miḥ'rāba
ٱلْمِحْرَابَ
[the] prayer chamber
மாடத்தில்
wajada
وَجَدَ
he found
பெற்றார்
ʿindahā
عِندَهَا
with her
அவளிடம்
riz'qan
رِزْقًاۖ
provision
ஓர் உணவை
qāla
قَالَ
He said
கூறினார்
yāmaryamu
يَٰمَرْيَمُ
"O Maryam!
மர்யமே!
annā
أَنَّىٰ
From where
எங்கிருந்து?
laki
لَكِ
for you
உனக்கு
hādhā
هَٰذَاۖ
(is) this?"
இது
qālat
قَالَتْ
She said
கூறினாள்
huwa
هُوَ
"This
இது
min ʿindi l-lahi
مِنْ عِندِ ٱللَّهِۖ
(is) from Allah
அல்லாஹ்விடமிருந்து
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
yarzuqu
يَرْزُقُ
gives provision
வழங்குவான்
man yashāu
مَن يَشَآءُ
(to) whom He wills
எவர்/நாடுகிறான்
bighayri ḥisābin
بِغَيْرِ حِسَابٍ
without measure"
கணக்கின்றி

Transliteration:

Fataqabbalahaa Rabbuhaa biqaboolin hasaninw wa ambatahaa nabaatan hasananw wa kaffalahaa Zakariyyaa kullamaa dakhala 'alaihaa Zakariyyal Mihraaba wajada 'indahaa rizqan qaala yaa Maryamu annaa laki haazaa qaalat huwa min 'indil laahi innal laaha yarzuqu mai yashaaa'u bighairi hisaab (QS. ʾĀl ʿImrān:37)

English Sahih International:

So her Lord accepted her with good acceptance and caused her to grow in a good manner and put her in the care of Zechariah. Every time Zechariah entered upon her in the prayer chamber, he found with her provision. He said, "O Mary, from where is this [coming] to you?" She said, "It is from Allah. Indeed, Allah provides for whom He wills without account." (QS. Ali 'Imran, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

ஆகவே அவருடைய இறைவன் அதனை அன்பாய் அங்கீகரித்து பரிசுத்தமாகவும், அழகாகவும் அதனை வளரச் செய்து அதனை (வளர்க்க) ஜகரிய்யா பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் செய்தான். ஜகரிய்யா அப்பிள்ளை இருந்த மாடத்திற்குள் நுழையும்போதெல்லாம், அவளிடத்தில் (ஏதேனும்) உணவுப் பொருள் இருப்பதைக் கண்டு "மர்யமே! இது உனக்கு ஏது? (எங்கிருந்து வந்தது?)" என்று கேட்பார். அதற்கவள் "இது அல்லாஹ் விடமிருந்துதான் (வருகின்றது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கு அளவின்றியே உணவளிக்கின்றான்" என்று கூறுவாள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௩௭)

Jan Trust Foundation

அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அவளுடைய இறைவன் அழகிய ஏற்பாக அவளை ஏற்றான். அழகிய வளர்ப்பாக அவளை வளர்த்தான். ஸகரிய்யாவை அவளுக்கு பொறுப்பாளராக்கினான். ஸகரிய்யா மாடத்தில் அவளிடம் நுழையும்போதெல்லாம், ஓர் உணவை அவளிடம் பெற்றார். "மர்யமே! எங்கிருந்து உனக்கு இது (வருகிறது)?" எனக் கூறினார். "இது அல்லாஹ்விடமிருந்து (வருகிறது). நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுகிறவருக்கு கணக்கின்றி வழங்குவான்" எனக் கூறினாள்.