குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௨௫
Qur'an Surah Ali 'Imran Verse 25
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَكَيْفَ اِذَا جَمَعْنٰهُمْ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيْهِۗ وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ (آل عمران : ٣)
- fakayfa
- فَكَيْفَ
- Then how (will it be)
- எப்படி?
- idhā jamaʿnāhum
- إِذَا جَمَعْنَٰهُمْ
- when We will gather them
- நாம் அவர்களை ஒன்றுசேர்த்தால்
- liyawmin
- لِيَوْمٍ
- on a Day -
- ஒரு நாளில்
- lā
- لَّا
- no
- அறவே இல்லை
- rayba fīhi
- رَيْبَ فِيهِ
- doubt in it
- சந்தேகம்/அதில்
- wawuffiyat
- وَوُفِّيَتْ
- And will be paid in full
- இன்னும் முழுமையாக அளிக்கப்பட்டால்
- kullu nafsin
- كُلُّ نَفْسٍ
- every soul
- எல்லா ஆத்மா
- mā
- مَّا
- what
- எது
- kasabat
- كَسَبَتْ
- it earned
- அது செய்தது
- wahum
- وَهُمْ
- and they
- இன்னும் அவர்கள்
- lā yuẓ'lamūna
- لَا يُظْلَمُونَ
- (will) not be wronged
- அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
Transliteration:
Fakaifa izaa jama'naahum li Yawmil laa raiba fee wa wuffiyat kullu nafsim maa kasabat wa hum laa yuzlamoon(QS. ʾĀl ʿImrān:25)
English Sahih International:
So how will it be when We assemble them for a Day about which there is no doubt? And each soul will be compensated [in full for] what it earned, and they will not be wronged. (QS. Ali 'Imran, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
(நபியே!) சந்தேகமற்ற ஒரு (விசாரணை) நாளில் நாம் அவர்களை ஒன்று சேர்த்து (அவர்களுடைய) ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குத் தக்க பலன் முழுமையாக அளிக்கப்பட்டால் (அவர்களின் நிலைமை) எவ்வாறு இருக்கும்? அவர்கள் (தங்கள் பிரதிபலனை அடைவதில்) சிறிதும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௨௫)
Jan Trust Foundation
சந்தேகமில்லாத அந்த (இறுதி) நாளில் அவர்களையெல்லாம் நாம் ஒன்று சேர்த்து ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கு உரியதை முழுமையாகக் கொடுக்கப்படும்போது (அவர்களுடைய நிலை) எப்படியிருக்கும்? அவர்கள் (தம் வினைகளுக்குரிய பலன் பெருவதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) அறவே அதில் சந்தேகமில்லாத ஒரு நாளில் நாம் அவர்களை ஒன்று சேர்த்து, எல்லா ஆத்மாவும் தான் செய்ததற்கு முழுமையாக (கூலி) அளிக்கப்பட்டால் (அவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்? (அந்நாளில்) அவர்கள் அநீதி இழைக்கப்படமாட்டார்கள்.