Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௨௦௦

Qur'an Surah Ali 'Imran Verse 200

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௨௦௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْاۗ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ࣖ (آل عمران : ٣)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you who believe[d]!
நம்பிக்கையாளர்களே
iṣ'birū
ٱصْبِرُوا۟
Be steadfast
பொறுங்கள்
waṣābirū
وَصَابِرُوا۟
and [be] patient
இன்னும் அதிகம் பொறுத்துக் கொள்ளுங்கள்
warābiṭū
وَرَابِطُوا۟
and [be] constant
இன்னும் போருக்குத் தயாராகுங்கள்
wa-ittaqū l-laha
وَٱتَّقُوا۟ ٱللَّهَ
and fear Allah
இன்னும் அல்லாஹ்வை அஞ்சுங்கள்
laʿallakum tuf'liḥūna
لَعَلَّكُمْ تُفْلِحُونَ
so that you may (be) successful
நீங்கள் வெற்றி பெறுவதற்காக

Transliteration:

Yaaa aiyuhal lazeena aamanus biroo wa saabiroo wa raabitoo wattaqul laaha la'allakum tuflihoon (QS. ʾĀl ʿImrān:200)

English Sahih International:

O you who have believed, persevere and endure and remain stationed and fear Allah that you may be successful. (QS. Ali 'Imran, Ayah ௨௦௦)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். ஒருவருக்கொருவர் சகித்துக் கொள்ளுங்கள். (எதிரியை எதிர்க்க) எந்நேரமும் தயாராக இருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நீங்கள் (இம்மையிலும் மறுமையிலும்) வெற்றியடைவீர்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௨௦௦)

Jan Trust Foundation

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றியடைவதற்காக பொறுங்கள்; (எதிரிகளைவிட) அதிகம் பொறுத்துக் கொள்ளுங்கள்; போருக்குத் தயாராகுங்கள்; அல்லாஹ்வை அஞ்சுங்கள்.