Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௮

Qur'an Surah Ali 'Imran Verse 18

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

شَهِدَ اللّٰهُ اَنَّهٗ لَآ اِلٰهَ اِلَّا هُوَۙ وَالْمَلٰۤىِٕكَةُ وَاُولُوا الْعِلْمِ قَاۤىِٕمًاۢ بِالْقِسْطِۗ لَآ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ (آل عمران : ٣)

shahida
شَهِدَ
Bears witness
சாட்சி கூறினான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
annahu
أَنَّهُۥ
that [He]
நிச்சயமாக அவன்
لَآ
(there is) no
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
god
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّا
except
தவிர
huwa
هُوَ
Him
அவன்
wal-malāikatu
وَٱلْمَلَٰٓئِكَةُ
and (so do) the Angels
இன்னும் வானவர்கள்
wa-ulū l-ʿil'mi
وَأُو۟لُوا۟ ٱلْعِلْمِ
and owners (of) [the] knowledge
இன்னும் கல்விமான்கள்
qāiman bil-qis'ṭi
قَآئِمًۢا بِٱلْقِسْطِۚ
standing in justice
நீதத்தை நிலை நிறுத்துபவன்
لَآ
(There is) no
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
god
வணக்கத்திற்குரியவன்
illā huwa
إِلَّا هُوَ
except Him
அவனைத் தவிர
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
the All-Mighty
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
the All-Wise
ஞானவான்

Transliteration:

Shahidal laahu annahoo laa ilaaha illaa Huwa walmalaaa'ikatu wa ulul 'ilmi qaaa'imam bilqist; laaa ilaaha illaa Huwal 'Azeezul Hakeem (QS. ʾĀl ʿImrān:18)

English Sahih International:

Allah witnesses that there is no deity except Him, and [so do] the angels and those of knowledge – [that He is] maintaining [creation] in justice. There is no deity except Him, the Exalted in Might, the Wise. (QS. Ali 'Imran, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

(நபியே! நீதவானாகிய) அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்: "நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை." அவ்வாறே மலக்குகளும் (வேதத்தை ஆராய்ந்த) கல்வியாளர்களும் சாட்சி கூறுகின்றனர்; (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடைய வனுமான அவனையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௮)

Jan Trust Foundation

அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீதத்தை நிலைநிறுத்துபவனாக அல்லாஹ் சாட்சி கூறுகிறான்: "நிச்சயமாக அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை." இன்னும் வானவர்கள், கல்விமான்கள் (இதற்கு சாட்சி கூறுகின்றனர்). மிகைத்தவன், ஞானவான் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை.