குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௭௯
Qur'an Surah Ali 'Imran Verse 179
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَا كَانَ اللّٰهُ لِيَذَرَ الْمُؤْمِنِيْنَ عَلٰى مَآ اَنْتُمْ عَلَيْهِ حَتّٰى يَمِيْزَ الْخَبِيْثَ مِنَ الطَّيِّبِ ۗ وَمَا كَانَ اللّٰهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ وَلٰكِنَّ اللّٰهَ يَجْتَبِيْ مِنْ رُّسُلِهٖ مَنْ يَّشَاۤءُ ۖ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ۚ وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا فَلَكُمْ اَجْرٌ عَظِيْمٌ (آل عمران : ٣)
- mā kāna
- مَّا كَانَ
- Not is
- இல்லை
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- liyadhara
- لِيَذَرَ
- to leave
- விட்டுவிடுபவனாக
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- the believers
- நம்பிக்கையாளர்களை
- ʿalā
- عَلَىٰ
- on
- மீது
- mā antum
- مَآ أَنتُمْ
- what you (are)
- எது/நீங்கள்
- ʿalayhi
- عَلَيْهِ
- in [it]
- அதன் மீது
- ḥattā
- حَتَّىٰ
- until
- இறுதியாக
- yamīza
- يَمِيزَ
- He separates
- பிரிப்பான்
- l-khabītha
- ٱلْخَبِيثَ
- the evil
- தீயவர்(களை)
- mina
- مِنَ
- from
- இருந்து
- l-ṭayibi
- ٱلطَّيِّبِۗ
- the good
- நல்லவர்(கள்)
- wamā kāna
- وَمَا كَانَ
- And not is
- இன்னும் இல்லை
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- liyuṭ'liʿakum
- لِيُطْلِعَكُمْ
- to inform you
- அறிவிப்பவனாக/உங்களுக்கு
- ʿalā l-ghaybi
- عَلَى ٱلْغَيْبِ
- about the unseen
- மறைவானவற்றை
- walākinna
- وَلَٰكِنَّ
- [and] but
- எனினும்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- yajtabī
- يَجْتَبِى
- chooses
- தேர்ந்தெடுக்கிறான்
- min rusulihi
- مِن رُّسُلِهِۦ
- from His Messengers
- தன் தூதர்களில்
- man yashāu
- مَن يَشَآءُۖ
- whom He wills
- எவரை/நாடுகிறான்
- faāminū
- فَـَٔامِنُوا۟
- so believe
- ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்
- bil-lahi
- بِٱللَّهِ
- in Allah
- அல்லாஹ்வை
- warusulihi
- وَرُسُلِهِۦۚ
- and His Messengers
- இன்னும் அவனுடைய தூதர்களை
- wa-in tu'minū
- وَإِن تُؤْمِنُوا۟
- and if you believe
- நீங்கள் நம்பிக்கை கொண்டால்
- watattaqū
- وَتَتَّقُوا۟
- and fear (Allah)
- இன்னும் அஞ்சினால்
- falakum
- فَلَكُمْ
- then for you
- உங்களுக்கு
- ajrun
- أَجْرٌ
- (is a) reward
- கூலி
- ʿaẓīmun
- عَظِيمٌ
- great
- மகத்தானது
Transliteration:
Maa kaanal laahu liyazaral mu'mineena 'alaa maaa antum 'alaihi hattaa yameezal khabeesa minat taiyib; wa maa kaanal laahu liyutli'akum 'alal ghaibi wa laakinnal laaha yajtabee mir Rusulihii mai yashaaa'u fa aaminoo billaahi wa Rusulih; wa in tu 'minoo wa tattaqoo falakum ajrun 'azeem(QS. ʾĀl ʿImrān:179)
English Sahih International:
Allah would not leave the believers in that [state] you are in [presently] until He separates the evil from the good. Nor would Allah reveal to you the unseen. But [instead], Allah chooses of His messengers whom He wills, so believe in Allah and His messengers. And if you believe and fear Him, then for you is a great reward. (QS. Ali 'Imran, Ayah ௧௭௯)
Abdul Hameed Baqavi:
(நயவஞ்சகர்களே!) நீங்கள் இருக்கும் இந்த நிலைமையில் நல்லவர்கள் இன்னாரென்றும் தீயவர்கள் இன்னாரென்றும் பிரித்தறிவிக்கும் வரையில் (உங்களுடன் கலந்திருக்க) அல்லாஹ் (நம்பிக்கையாளர்களை) விட்டுவைக்க மாட்டான். அன்றி மறைவான வற்றையும் அல்லாஹ் உங்களுக்கு அறிவிக்க மாட்டான். எனினும் தன் தூதர்களில் தான் விரும்பியவர்களை (இதனை அறிவிக்க) அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொள்வான். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் (உண்மையாகவே அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்து (நடந்து) கொண்டால் உங்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௭௯)
Jan Trust Foundation
(காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை; இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை; ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நயவஞ்சகர்களே!) இறுதியாக நல்லவர்களிலிருந்து, தீயவர்களை பிரிப்பான். நீங்கள் இருப்பதில் நம்பிக்கையாளர்களை அல்லாஹ் விட்டு விடுபவனாக இல்லை. மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவிப்பவனாகவும் இல்லை. எனினும் தன் தூதர்களில் தான் நாடியவரை அல்லாஹ் தேர்ந்தெடுக்கிறான். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டால், அல்லாஹ்வை அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.