குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௭௩
Qur'an Surah Ali 'Imran Verse 173
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَّذِيْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِيْمَانًاۖ وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ (آل عمران : ٣)
- alladhīna
- ٱلَّذِينَ
- Those who
- எவர்கள்
- qāla
- قَالَ
- said
- கூறினார்(கள்)
- lahumu
- لَهُمُ
- to them
- அவர்களுக்கு
- l-nāsu
- ٱلنَّاسُ
- [the people]
- மக்கள்
- inna
- إِنَّ
- "Indeed
- நிச்சயமாக
- l-nāsa
- ٱلنَّاسَ
- the people
- மக்கள்
- qad jamaʿū
- قَدْ جَمَعُوا۟
- (have) certainly gathered
- உறுதியாக ஒன்று சேர்த்துள்ளனர்
- lakum
- لَكُمْ
- against you
- உங்களுக்கு
- fa-ikh'shawhum
- فَٱخْشَوْهُمْ
- so fear them"
- ஆகவே பயப்படுங்கள்/ அவர்களைப்
- fazādahum
- فَزَادَهُمْ
- But it increased them
- அதிகப்படுத்தியது/ அவர்களுக்கு
- īmānan
- إِيمَٰنًا
- (in the) faith
- நம்பிக்கையை
- waqālū
- وَقَالُوا۟
- and they said
- இன்னும் கூறினார்கள்
- ḥasbunā
- حَسْبُنَا
- "Sufficient for us
- போதுமானவன்/ எங்களுக்கு
- l-lahu
- ٱللَّهُ
- (is) Allah
- அல்லாஹ்
- waniʿ'ma
- وَنِعْمَ
- and (He is the) best
- இன்னும் சிறந்து விட்டான்
- l-wakīlu
- ٱلْوَكِيلُ
- [the] Disposer of affairs"
- பொறுப்பாளன்
Transliteration:
Allazeena qaala lahumun naasu innan naasa qad jama'oo lakum fakhshawhuin fazaadahum eemaannanwa wa qaaloo hasbunal laahu wa ni'malwakeel(QS. ʾĀl ʿImrān:173)
English Sahih International:
Those to whom people [i.e., hypocrites] said, "Indeed, the people have gathered against you, so fear them." But it [merely] increased them in faith, and they said, "Sufficient for us is Allah, and [He is] the best Disposer of affairs." (QS. Ali 'Imran, Ayah ௧௭௩)
Abdul Hameed Baqavi:
அன்றி ஒருசிலர் அவர்களிடம் (வந்து) "உங்களுக்கு எதிராக (போர் புரிய) எல்லா வகுப்பினரும் நிச்சயமாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர். (ஆதலால்) அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்" என்று கூறிய சமயத்தில், அவர்களுக்கு (பயம் ஏற்படுவதற்குப் பதிலாக) நம்பிக்கையே அதிகரித்தது. அன்றி "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பேற்பவனாகவும் (பாதுகாவலனாகவும்) இருக்கின்றான்" என்றும் கூறினார்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௭௩)
Jan Trust Foundation
மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது| “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
"நிச்சயமாக மக்கள் (தங்கள் படைகளையும் ஆயுதங்களையும்) உங்களுக்கு (எதிராக) ஒன்று சேர்த்துள்ளனர், ஆகவே, அவர்களைப் பயப்படுங்கள்" என்று (சில) மக்கள் அவர்களுக்கு கூறினர். (அது) அவர்களுக்கு நம்பிக்கையை(த்தான்) அதிகப்படுத்தியது. "அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன், அவன் சிறந்த பொறுப்பாளன்" என்றும் கூறினார்கள்.