Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௭௨

Qur'an Surah Ali 'Imran Verse 172

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَّذِيْنَ اسْتَجَابُوْا لِلّٰهِ وَالرَّسُوْلِ مِنْۢ بَعْدِ مَآ اَصَابَهُمُ الْقَرْحُ ۖ لِلَّذِيْنَ اَحْسَنُوْا مِنْهُمْ وَاتَّقَوْا اَجْرٌ عَظِيْمٌۚ (آل عمران : ٣)

alladhīna
ٱلَّذِينَ
Those who
எவர்கள்
is'tajābū
ٱسْتَجَابُوا۟
responded
பதிலளித்தார்கள்
lillahi
لِلَّهِ
to Allah
அல்லாஹ்விற்கு
wal-rasūli
وَٱلرَّسُولِ
and the Messenger
இன்னும் தூதர்
min baʿdi
مِنۢ بَعْدِ
from after
இருந்து/பின்னர்
mā aṣābahumu
مَآ أَصَابَهُمُ
what befell them
ஏற்பட்டது/ அவர்களுக்கு
l-qarḥu
ٱلْقَرْحُۚ
the injury
காயம்
lilladhīna
لِلَّذِينَ
for those who
எவர்களுக்கு
aḥsanū
أَحْسَنُوا۟
did good
நல்லறம் புரிந்தார்கள்
min'hum
مِنْهُمْ
among them
அவர்களில்
wa-ittaqaw
وَٱتَّقَوْا۟
and feared Allah
இன்னும் அஞ்சினார்கள்
ajrun ʿaẓīmun
أَجْرٌ عَظِيمٌ
(is) a reward great
கூலி/மகத்தானது

Transliteration:

Allazeenas tajaaboo lil laahi war Rasooli mim ba'di maaa asaabahumulqarh; lillazeena ahsanoo minhum wattaqaw ajrun 'azeem (QS. ʾĀl ʿImrān:172)

English Sahih International:

Those [believers] who responded to Allah and the Messenger after injury had struck them. For those who did good among them and feared Allah is a great reward – (QS. Ali 'Imran, Ayah ௧௭௨)

Abdul Hameed Baqavi:

அவர்கள் எத்தகையவர்கள் என்றால், காயமடைந்த பின்னரும் அல்லாஹ்வுடைய, (அவனுடைய) தூதருடைய அழைப்பை ஏற்று (போருக்கு)ச் சென்றனர். (அல்லாஹ்வுக்குப்) பயந்து நன்மை செய்த இத்தகையவர்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௭௨)

Jan Trust Foundation

அவர்கள் எத்தகையோரென்றால் தங்களுக்கு(ப் போரில்) காயம்பட்ட பின்னரும் அல்லாஹ்வுடையவும், (அவனுடைய) ரஸூலுடையவும் அழைப்பை ஏற்(று மீண்டும் போருக்குச் சென்)றனர்;அத்தகையோரில் நின்றும் யார் அழகானவற்றைச் செய்து, இன்னும் பாவத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு மகத்தான நற்கூலியிருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்கள்) தங்களுக்கு காயமேற்பட்ட பின்னரும் அல்லாஹ்விற்கும் தூதருக்கும் பதிலளித்தார்கள். அவர்களில் நல்லறம் புரிந்து, அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு மகத்தான கூலி உண்டு.