குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௬௭
Qur'an Surah Ali 'Imran Verse 167
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلِيَعْلَمَ الَّذِيْنَ نَافَقُوْا ۖوَقِيْلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ اَوِ ادْفَعُوْا ۗ قَالُوْا لَوْ نَعْلَمُ قِتَالًا لَّاتَّبَعْنٰكُمْ ۗ هُمْ لِلْكُفْرِ يَوْمَىِٕذٍ اَقْرَبُ مِنْهُمْ لِلْاِيْمَانِ ۚ يَقُوْلُوْنَ بِاَفْوَاهِهِمْ مَّا لَيْسَ فِيْ قُلُوْبِهِمْ ۗ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا يَكْتُمُوْنَۚ (آل عمران : ٣)
- waliyaʿlama
- وَلِيَعْلَمَ
- And that He (might) make evident
- இன்னும் அறிவதற்காக
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- nāfaqū
- نَافَقُوا۟ۚ
- (are) hypocrites
- நயவஞ்சகம்செய்தனர்
- waqīla
- وَقِيلَ
- And it was said
- இன்னும் கூறப்பட்டது
- lahum
- لَهُمْ
- to them
- அவர்களுக்கு
- taʿālaw
- تَعَالَوْا۟
- "Come
- வாருங்கள்
- qātilū
- قَٰتِلُوا۟
- fight
- போர் புரியுங்கள்
- fī sabīli
- فِى سَبِيلِ
- in (the) way
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- awi id'faʿū
- أَوِ ٱدْفَعُوا۟ۖ
- or defend"
- அவர்கள் தடுங்கள்
- qālū
- قَالُوا۟
- They said
- கூறினார்கள்
- law naʿlamu
- لَوْ نَعْلَمُ
- "If we knew
- நாங்கள் அறிந்திருந்தால்
- qitālan
- قِتَالًا
- fighting
- போரை
- la-ittabaʿnākum
- لَّٱتَّبَعْنَٰكُمْۗ
- certainly we (would have) followed you"
- திட்டமாக பின்பற்றி இருப்போம்/உங்களை
- hum
- هُمْ
- They -
- அவர்கள்
- lil'kuf'ri
- لِلْكُفْرِ
- to disbelief
- நிராகரிப்புக்கு
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- that day
- அன்றைய தினம்
- aqrabu
- أَقْرَبُ
- (were) nearer
- நெருக்கமானவர்(கள்)
- min'hum
- مِنْهُمْ
- than [them]
- அவர்களில்
- lil'īmāni
- لِلْإِيمَٰنِۚ
- to the faith
- நம்பிக்கைக்கு
- yaqūlūna
- يَقُولُونَ
- saying
- கூறுகிறார்கள்
- bi-afwāhihim
- بِأَفْوَٰهِهِم
- with their mouths
- வாய்களால்/தங்கள்
- mā laysa
- مَّا لَيْسَ
- what was not
- எது/இல்லை
- fī qulūbihim
- فِى قُلُوبِهِمْۗ
- in their hearts
- தங்கள் உள்ளங்களில்
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- இன்னும் அல்லாஹ்
- aʿlamu
- أَعْلَمُ
- (is) Most Knowing
- மிக அறிந்தவன்
- bimā yaktumūna
- بِمَا يَكْتُمُونَ
- (of) what they conceal
- எதை/மறைக்கின்றனர்
Transliteration:
Wa liya'lamal lazeena naafaqoo; wa qeela lahum ta'aalaw qaatiloo fee sabeelil laahi awid fa'oo qaaloo law na'lamu qitaalallat taba'naakum; hum lilkufri yawma'izin aqrabu minhum lil eemaan; yaqooloona bi afwaahihim maa laisa fee quloobihim; wallaahu a'lamu bimaa yaktumoon(QS. ʾĀl ʿImrān:167)
English Sahih International:
And that He might make evident those who are hypocrites. For it was said to them, "Come, fight in the way of Allah or [at least] defend." They said, "If we had known [there would be] battle, we would have followed you." They were nearer to disbelief that day than to faith, saying with their mouths what was not in their hearts. And Allah is most knowing of what they conceal . (QS. Ali 'Imran, Ayah ௧௬௭)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே! அந்நயவஞ்சகர்களை நோக்கி நம்முடன் சேர்ந்து) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிய வாருங்கள் அல்லது அ(ந்த நிராகரிப்ப)வர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டதற்கு "(இதனை) நாங்கள் போர் என்று கருதியிருந்தால் நிச்சயமாக உங்களைத் தொடர்ந்(தே வந்)திருப்போம்" என்று அவர்கள் கூறினார்கள். அன்றைய தினம் அவர்கள் நம்பிக்கையைவிட நிராகரிப்புக்கே மிகவும் நெருங்கி இருந்தார்கள். தங்கள் மனதில் இல்லாதவைகளையே அவர்கள் தங்கள் வாயால் கூறினார்கள். அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிவான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௬௭)
Jan Trust Foundation
இன்னும் (முனாஃபிக் தனம் செய்யும்) நயவஞ்சகரை(ப் பிரித்து) அறிவதற்கும் தான்; அவர்களிடம் கூறப்பட்டது| “வாருங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள் அல்லது (பகைவர்கள் அணுகாதவாறு) தடுத்து விடுங்கள்,” (அப்போது) அவர்கள் சொன்னார்கள்| “நாங்கள் போரைப் பற்றி அறிந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றியிருப்போம்.” அன்றையதினம் அவர்கள் ஈமானைவிட குஃப்ரின் பக்கமே அதிகம் நெருங்கியிருந்தார்கள்; தம் உள்ளங்களில் இல்லாதவற்றைத் தம் வாய்களினால் கூறினர்; அவர்கள் (தம் உள்ளங்களில்) மறைத்து வைப்பதையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இரு கூட்டங்களும் சந்தித்த நாளில் உங்களுக்கு ஏற்பட்டது அல்லாஹ்வின் அனுமதி கொண்டுதான் (ஏற்பட்டது). (அல்லாஹ்) நம்பிக்கையாளர்களை அறிவதற்காகவும், நயவஞ்சகர்களை அறிவதற்காகவும் (இவ்வாறு செய்தான்). வாருங்கள், அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள். அல்லது, (அந்த நிராகரிப்பவர்களைத்) தடுங்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டது. "(அதற்கு, இதை) போர் என்று நாங்கள் அறிந்திருந்தால் நிச்சயமாக உங்களைப் பின்பற்றி இருப்போம்" என்று கூறினார்கள். அன்றைய தினம் அவர்கள் நம்பிக்கையை விட நிராகரிப்புக்கே மிகவும் நெருக்கமானவர்கள். தங்கள் உள்ளங்களில் இல்லாததை தங்கள் வாய்களால் கூறுகிறார்கள். அவர்கள் மறைப்பதை அல்லாஹ் மிகஅறிந்தவன்.