குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௬௫
Qur'an Surah Ali 'Imran Verse 165
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَوَلَمَّآ اَصَابَتْكُمْ مُّصِيْبَةٌ قَدْ اَصَبْتُمْ مِّثْلَيْهَاۙ قُلْتُمْ اَنّٰى هٰذَا ۗ قُلْ هُوَ مِنْ عِنْدِ اَنْفُسِكُمْ ۗ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ (آل عمران : ٣)
- awalammā
- أَوَلَمَّآ
- Or
- இன்னும் / போது
- aṣābatkum
- أَصَٰبَتْكُم
- when
- ஏற்பட்டது/உங்களுக்கு
- muṣībatun
- مُّصِيبَةٌ
- struck you
- ஒரு சோதனை
- qad aṣabtum
- قَدْ أَصَبْتُم
- disaster surely
- திட்டமாக அடைந்தீர்கள்
- mith'layhā
- مِّثْلَيْهَا
- you had struck (them)
- அது போன்று இரு மடங்கை
- qul'tum
- قُلْتُمْ
- twice of it
- கூறினீர்கள்
- annā hādhā
- أَنَّىٰ هَٰذَاۖ
- you said "From where
- எங்கிருந்து/இது
- qul
- قُلْ
- (is) this?"
- கூறுவீராக
- huwa
- هُوَ
- Say
- அது
- min ʿindi anfusikum
- مِنْ عِندِ أَنفُسِكُمْۗ
- "It (is) from yourselves"
- உங்களிடமிருந்துதான்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- ʿalā
- عَلَىٰ
- (is) on
- மீது
- kulli
- كُلِّ
- every
- எல்லாம்
- shayin
- شَىْءٍ
- thing
- பொருள்
- qadīrun
- قَدِيرٌ
- All-Powerful
- பேராற்றலுடையவன்
Transliteration:
Awa lammaaa asaabatkum museebatun qad asabtum mislaihaa qultum annaa haazaa qul huwa min 'indi anfusikum; innal laaha 'alaa kulli shai'in Qadeer(QS. ʾĀl ʿImrān:165)
English Sahih International:
Why [is it that] when a [single] disaster struck you [on the day of Uhud], although you had struck [the enemy in the battle of Badr] with one twice as great, you said, "From where is this?" Say, "It is from yourselves [i.e., due to your sin]." Indeed, Allah is over all things competent. (QS. Ali 'Imran, Ayah ௧௬௫)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே! "பத்ரு" போரில்) இதைவிட இருமடங்கு கஷ்டத்தை நீங்கள் அவர்களுக்கு உண்டு பண்ணியிருந்தும் இந்தக் கஷ்டம் (உஹுத் போரில்) உங்களுக்கு ஏற்பட்ட சமயத்தில் இது எவ்வாறு (யாரால்) ஏற்பட்டது? என நீங்கள் கேட்(க ஆரம்பித்துவிட்)டீர்கள். (நீங்கள் செய்த தவறின் காரணமாக) உங்களால்தான் இது ஏற்பட்டதென்றும், நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான் என்றும் (நபியே!) நீங்கள் கூறுங்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௬௫)
Jan Trust Foundation
இன்னும் உங்களுக்கு (உஹதில்) ஒரு துன்பம் வந்துற்றபோது, நீங்கள் (பத்ரில்) அவர்களுக்கு இது போன்று இருமடங்குத் துன்பம் உண்டு பண்ணியிருந்த போதிலும், “இது எப்படி வந்தது?” என்று கூறுகிறிர்கள்; (நபியே!) நீர் கூறும்| இது (வந்தது) உங்களிடமிருந்தேதான் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்,”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்கள் மீது திட்டமாக அல்லாஹ் அருள் புரிந்தான். ஏனெனில், அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களுக்கு மத்தியில் அனுப்பினான். அவர்கள் மீது அவனுடைய வசனங்களை (அவர்) ஓதுகிறார்; அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார்; அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். நிச்சயமாக (அவர்கள் இதற்கு) முன்னர் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தனர்.