குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௫௬
Qur'an Surah Ali 'Imran Verse 156
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ كَفَرُوْا وَقَالُوْا لِاِخْوَانِهِمْ اِذَا ضَرَبُوْا فِى الْاَرْضِ اَوْ كَانُوْا غُزًّى لَّوْ كَانُوْا عِنْدَنَا مَا مَاتُوْا وَمَا قُتِلُوْاۚ لِيَجْعَلَ اللّٰهُ ذٰلِكَ حَسْرَةً فِيْ قُلُوْبِهِمْ ۗ وَاللّٰهُ يُحْيٖ وَيُمِيْتُ ۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ (آل عمران : ٣)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- O you who believe[d]!
- நம்பிக்கையாளர்களே
- lā takūnū
- لَا تَكُونُوا۟
- (Do) not be
- ஆகாதீர்கள்
- ka-alladhīna
- كَٱلَّذِينَ
- like those who
- போன்று/எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- disbelieved
- நிராகரித்தார்கள்
- waqālū
- وَقَالُوا۟
- and they said
- இன்னும் கூறினார்கள்
- li-ikh'wānihim
- لِإِخْوَٰنِهِمْ
- about their brothers
- சகோதரர்களுக்கு/ அவர்களுடைய
- idhā ḍarabū
- إِذَا ضَرَبُوا۟
- when they traveled
- அவர்கள் பயணித்தால்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- aw
- أَوْ
- or
- அல்லது
- kānū
- كَانُوا۟
- they were
- இருந்தார்கள்
- ghuzzan
- غُزًّى
- fighting
- போர் புரிபவர்களாக
- law kānū
- لَّوْ كَانُوا۟
- "if they had been
- அவர்கள் இருந்திருந்தால்
- ʿindanā
- عِندَنَا
- with us
- நம்மிடமே
- mā mātū
- مَا مَاتُوا۟
- not they (would have) died
- அவர்கள் மரணித்திருக்க மாட்டார்கள்
- wamā qutilū
- وَمَا قُتِلُوا۟
- and not they (would have) been killed"
- இன்னும் அவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்
- liyajʿala
- لِيَجْعَلَ
- So makes
- ஆக்குவதற்காக
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- dhālika
- ذَٰلِكَ
- that
- அதை
- ḥasratan
- حَسْرَةً
- a regret
- கைசேதமாக
- fī qulūbihim
- فِى قُلُوبِهِمْۗ
- in their hearts
- அவர்களுடைய உள்ளங்களில்
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- yuḥ'yī
- يُحْىِۦ
- gives life
- வாழவைக்கிறான்
- wayumītu
- وَيُمِيتُۗ
- and causes death
- இன்னும் மரணிக்க வைக்கிறான்
- wal-lahu
- وَٱللَّهُ
- and Allah
- அல்லாஹ்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- of what you do
- நீங்கள் செய்பவற்றை
- baṣīrun
- بَصِيرٌ
- (is) All-Seer
- உற்று நோக்குபவன்
Transliteration:
Yaaa ayyuhul lazeena aamanoo laa takoonoo kallazeena kafaroo wa qaaloo li ikhwaanihim izaa daraboo fil ardi aw kaanoo ghuzzal law kaanoo 'indanaa maa maatoo wa maa qutiloo liyaj'alal laahu zaalika hasratan fee quloobihim; qallaahu yuhyee wa yumeet; wallaahu bimaa ta'maloona Baseer(QS. ʾĀl ʿImrān:156)
English Sahih International:
O you who have believed, do not be like those who disbelieved and said about their brothers when they traveled through the land or went out to fight, "If they had been with us, they would not have died or have been killed," so Allah makes that [misconception] a regret within their hearts. And it is Allah who gives life and causes death, and Allah is Seeing of what you do. (QS. Ali 'Imran, Ayah ௧௫௬)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம். அவர்கள் வெளியூருக்கோ அல்லது போருக்கோ சென்று (இறந்து)விட்ட தங்கள் சகோதரர்களைப் பற்றி "அவர்கள் நம்மிடமே இருந்திருந்தால் அவர்கள் இறந்திருக்கவும் மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்" என்று கூறுகின்றனர். அவர்களுடைய உள்ளங்களில் (என்றென்றுமே) இதை ஒரு கடும் துயரமாக்குவதற்காகவே இவ்வாறு (அவர்கள் நினைக்கும்படி) அல்லாஹ் செய்கிறான். அல்லாஹ்வே உயிருடன் வாழச் செய்பவன்; மரணிக்கவும் செய்பவன். நீங்கள் செய்பவற்றை எல்லாம் அல்லாஹ் உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௫௬)
Jan Trust Foundation
முஃமின்களே! நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள்; பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி (அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்| “அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்” என்று, ஆனால் அல்லாஹ் அவர்கள் மனதில் ஏக்கமும் கவலையும் உண்டாவதற்காகவே இவ்வாறு செய்கிறான்; மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான்; இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களைப் போன்று ஆகாதீர்கள். அவர்களுடைய சகோதரர்கள் பூமியில் பயணித்தால் அல்லது போர்புரிபவர்களாக இருந்தால் அவர்களுக்கு (அந்நிராகரிப்பாளர்கள்) கூறினார்கள்: "அவர்கள் நம்மிடமே இருந்திருந்தால் மரணித்திருக்கவும் மாட்டார்கள். கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்." அவர்களுடைய உள்ளங்களில் இதை ஒரு கைசேதமாக ஆக்குவதற்காகவே (அல்லாஹ் இவ்வாறு செய்தான்). அல்லாஹ்தான் வாழவைக்கிறான்; மரணிக்க வைக்கிறான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்.