குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௫௧
Qur'an Surah Ali 'Imran Verse 151
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
سَنُلْقِيْ فِيْ قُلُوْبِ الَّذِيْنَ كَفَرُوا الرُّعْبَ بِمَٓا اَشْرَكُوْا بِاللّٰهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا ۚ وَمَأْوٰىهُمُ النَّارُ ۗ وَبِئْسَ مَثْوَى الظّٰلِمِيْنَ (آل عمران : ٣)
- sanul'qī
- سَنُلْقِى
- We will cast
- போடுவோம்
- fī qulūbi
- فِى قُلُوبِ
- in (the) hearts
- உள்ளங்களில்
- alladhīna
- ٱلَّذِينَ
- (of) those who
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- disbelieve
- நிராகரித்தார்கள்
- l-ruʿ'ba
- ٱلرُّعْبَ
- [the] terror
- திகிலை
- bimā ashrakū
- بِمَآ أَشْرَكُوا۟
- because they associated partners
- அவர்கள் இணைவைத்த காரணத்தால்
- bil-lahi
- بِٱللَّهِ
- with Allah
- அல்லாஹ்விற்கு
- mā lam yunazzil
- مَا لَمْ يُنَزِّلْ
- what not He sent down
- எது/இறக்கவில்லை
- bihi
- بِهِۦ
- about it
- அதற்கு
- sul'ṭānan
- سُلْطَٰنًاۖ
- any authority
- ஓர் ஆதாரத்தை
- wamawāhumu
- وَمَأْوَىٰهُمُ
- and their refuge
- இன்னும் அவர்களுடைய தங்குமிடம்
- l-nāru
- ٱلنَّارُۚ
- (will be) the Fire
- நரகம்தான்
- wabi'sa
- وَبِئْسَ
- and wretched
- கெட்டுவிட்டது
- mathwā
- مَثْوَى
- (is the) abode
- தங்குமிடம்
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- [of] the wrongdoers
- அநியாயக்காரர்களின்
Transliteration:
Sanulqee fee quloobil lazeena kafarur ru'ba bimaaa ashrakoo billaahi maa lam yunazzil bihee sultaana-nw wa maawaahumun Naar; wa bi'sa maswaz zaalimeen(QS. ʾĀl ʿImrān:151)
English Sahih International:
We will cast terror into the hearts of those who disbelieve for what they have associated with Allah of which He had not sent down [any] authority. And their refuge will be the Fire, and wretched is the residence of the wrongdoers. (QS. Ali 'Imran, Ayah ௧௫௧)
Abdul Hameed Baqavi:
நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் அதிசீக்கிரத்தில் நாம் திகிலை உண்டுபண்ணி விடுவோம். ஏனென்றால், அவர்கள் இணை வைப்பதற்கு அல்லாஹ் எவ்வித ஆதாரமும் அவர்களுக்கு அளிக்காதிருக்க அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றார்கள். இவர்கள் தங்குமிடம் நரகம்தான். (நரகத்திலும்) இந்த அநியாயக்காரர்கள் தங்குமிடம் மிகக் கெட்டது. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௫௧)
Jan Trust Foundation
விரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம்; ஏனெனில் (தனக்கு இணை வைப்பதற்கு அவர்களுக்கு) எந்தவிதமான ஆதாரமும் இறக்கி வைக்கப்படாமலிருக்க அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள். தவிர, அவர்கள் தங்குமிடம் நெருப்புதான்; அக்கிரமக்காரர்கள் தங்கும் இடங்களிலெல்லாம் அது தான் மிகவும் கெட்டது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அல்லாஹ்) எதற்கு ஓர் ஆதாரத்தை இறக்கவில்லையோ அதை அல்லாஹ்விற்கு அவர்கள் இணைவைத்த காரணத்தால் நிராகரிப்பாளர்களுடைய உள்ளங்களில் திகிலை போடுவோம். அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அநியாயக்காரர்களின் தங்குமிடம் கெட்டுவிட்டது.