Skip to content

ஸூரா ஸூரத்துஷ்ஷுஃரா - Page: 2

Ash-Shu'ara

(aš-Šuʿarāʾ)

௧௧

قَوْمَ فِرْعَوْنَ ۗ اَلَا يَتَّقُوْنَ ١١

qawma
قَوْمَ
மக்களிடம்
fir'ʿawna
فِرْعَوْنَۚ
ஃபிர்அவ்னின்
alā yattaqūna
أَلَا يَتَّقُونَ
அவர்கள் அஞ்சிக் கொள்ள வேண்டாமா!
"அந்த ஃபிர்அவ்னுடைய மக்கள் எனக்குப் பயப்பட மாட்டார்களா?" (என்று கேட்டான்.) ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௧)
Tafseer
௧௨

قَالَ رَبِّ اِنِّيْٓ اَخَافُ اَنْ يُّكَذِّبُوْنِ ۗ ١٢

qāla
قَالَ
அவர் கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா!
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
பயப்படுகிறேன்
an yukadhibūni
أَن يُكَذِّبُونِ
அவர்கள் என்னை பொய்ப்பிப்பார்கள் என்று
அதற்கு அவர் "என் இறைவனே! அவர்கள் என்னைப் பொய்யாக்கி விடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன்" என்றார். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௨)
Tafseer
௧௩

وَيَضِيْقُ صَدْرِيْ وَلَا يَنْطَلِقُ لِسَانِيْ فَاَرْسِلْ اِلٰى هٰرُوْنَ ١٣

wayaḍīqu
وَيَضِيقُ
இன்னும் நெருக்கடிக்குள்ளாகிவிடும்
ṣadrī
صَدْرِى
என் நெஞ்சம்
walā yanṭaliqu
وَلَا يَنطَلِقُ
இன்னும் பேசாது
lisānī
لِسَانِى
என் நாவு
fa-arsil
فَأَرْسِلْ
ஆகவே, நீ அனுப்பு
ilā hārūna
إِلَىٰ هَٰرُونَ
ஹாரூனுக்கு
"(அவ்வாறு அவர்கள் பொய்யாக்கினால்) என் மனமுடைந்து விடும். (அத்துடன் எனக்குக் கொன்னல் இருப்பதால்) என் நாவால் (சரியாகப்) பேச முடியாது. ஆதலால் (என்னுடன்) வருமாறு ஹாரூனுக்கு நீ அறிவிப்பாயாக! ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௩)
Tafseer
௧௪

وَلَهُمْ عَلَيَّ ذَنْۢبٌ فَاَخَافُ اَنْ يَّقْتُلُوْنِ ۚ ١٤

walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
ʿalayya
عَلَىَّ
என் மீது
dhanbun
ذَنۢبٌ
ஒருகுற்றம்இருக்கிறது
fa-akhāfu
فَأَخَافُ
ஆகவே, நான் பயப்படுகிறேன்
an yaqtulūni
أَن يَقْتُلُونِ
அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்று
அன்றி, என் மீது அவர்களுக்கு ஒரு குற்றச்சாட்டுதலும் இருக்கிறது. அதற்காக அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என்றும் நான் பயப்படுகிறேன்" (என்றும் கூறினார்). ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௪)
Tafseer
௧௫

قَالَ كَلَّاۚ فَاذْهَبَا بِاٰيٰتِنَآ اِنَّا مَعَكُمْ مُّسْتَمِعُوْنَ ۙ ١٥

qāla
قَالَ
அவன் கூறினான்
kallā
كَلَّاۖ
அவ்வாறல்ல!
fa-idh'habā
فَٱذْهَبَا
நீங்கள் இருவரும் செல்லுங்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَآۖ
எனது அத்தாட்சிகளை கொண்டு
innā maʿakum
إِنَّا مَعَكُم
நிச்சயமாக நாம் உங்களுடன்
mus'tamiʿūna
مُّسْتَمِعُونَ
செவியேற்பவர்களாக
அதற்கு (இறைவன்) கூறியதாவது: "அவ்வாறன்று (பயப்படாதீர்கள்; ஹாரூனையும் அழைத்துக் கொண்டு) நீங்கள் இருவரும் என்னுடைய அத்தாட்சிகளை (எடுத்து)க் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் இருந்து (அனைத்தையும்) கேட்டுக் கொண்டிருப்பேன். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௫)
Tafseer
௧௬

فَأْتِيَا فِرْعَوْنَ فَقُوْلَآ اِنَّا رَسُوْلُ رَبِّ الْعٰلَمِيْنَ ۙ ١٦

fatiyā
فَأْتِيَا
ஆகவே, நீங்கள் இருவரும் வாருங்கள்
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னிடம்
faqūlā
فَقُولَآ
நீங்கள் இருவரும் கூறுங்கள்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
rasūlu
رَسُولُ
தூதராக இருக்கிறோம்
rabbi
رَبِّ
இறைவனுடைய
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
ஆகவே, நீங்களிருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று "நிச்சயமாக நாங்கள் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்ப்பவனின் தூதர்களாவோம்" என்றும், ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௬)
Tafseer
௧௭

اَنْ اَرْسِلْ مَعَنَا بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ ۗ ١٧

an arsil
أَنْ أَرْسِلْ
நிச்சயமாக அனுப்பிவிடு
maʿanā
مَعَنَا
எங்களுடன்
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களை
"இஸ்ராயீலின் சந்ததிகளை நீ எங்களுடன் அனுப்பிவிடு என்றும் கூறுங்கள்!" (என்றும் கட்டளையிட்டான்.) ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௭)
Tafseer
௧௮

قَالَ اَلَمْ نُرَبِّكَ فِيْنَا وَلِيْدًا وَّلَبِثْتَ فِيْنَا مِنْ عُمُرِكَ سِنِيْنَ ۗ ١٨

qāla
قَالَ
அவன் கூறினான்
alam nurabbika
أَلَمْ نُرَبِّكَ
நாம் உம்மை வளர்க்கவில்லையா?
fīnā
فِينَا
எங்களில்
walīdan
وَلِيدًا
குழந்தையாக
walabith'ta
وَلَبِثْتَ
இன்னும் தங்கியிருந்தாய்
fīnā
فِينَا
எங்களுடன்
min ʿumurika
مِنْ عُمُرِكَ
உமது வாழ்க்கையில்
sinīna
سِنِينَ
ஆண்டுகள்
(அவ்வாறே அவர்கள் ஃபிர்அவ்னிடம் சென்று கூறவே) அதற்கவன் (மூஸாவை நோக்கி) "நாங்கள் உங்களைக் குழந்தையாக எடுத்துக் கொண்டு வளர்க்கவில்லையா? நீங்கள் (உங்கள் வாலிபத்தை அடையும் வரையில்) பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்திருந்தீர்கள். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௮)
Tafseer
௧௯

وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِيْ فَعَلْتَ وَاَنْتَ مِنَ الْكٰفِرِيْنَ ١٩

wafaʿalta
وَفَعَلْتَ
இன்னும் நீ செய்துவிட்டாய்
faʿlataka
فَعْلَتَكَ
உனது செயலை
allatī faʿalta
ٱلَّتِى فَعَلْتَ
எது/செய்தாய்
wa-anta
وَأَنتَ
நீயோ இருக்கிறாய்
mina l-kāfirīna
مِنَ ٱلْكَٰفِرِينَ
நன்றியறியாதவர்களில்
நீங்கள் செய்(யத் தகா)த (ஒரு) காரியத்தையும் செய்தீர்கள்! (அதனை மன்னித்திருந்தும்) நீங்கள் நன்றி கெட்டவராகவே இருக்கின்றீர்கள்" என்றான். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௧௯)
Tafseer
௨௦

قَالَ فَعَلْتُهَآ اِذًا وَّاَنَا۠ مِنَ الضَّاۤلِّيْنَ ٢٠

qāla
قَالَ
அவர் கூறினார்
faʿaltuhā
فَعَلْتُهَآ
அதை நான் செய்தேன்
idhan
إِذًا
அப்போது
wa-anā
وَأَنَا۠
நானோ
mina l-ḍālīna
مِنَ ٱلضَّآلِّينَ
அறியாதவர்களில்
அதற்கு மூஸா "நான் அறியாதவனாக இருந்த நிலைமையில் அதனை நான் செய்தேன். ([௨௬] ஸூரத்துஷ்ஷுஃரா: ௨௦)
Tafseer