Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௬

Qur'an Surah An-Nur Verse 6

ஸூரத்துந் நூர் [௨௪]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ يَرْمُوْنَ اَزْوَاجَهُمْ وَلَمْ يَكُنْ لَّهُمْ شُهَدَاۤءُ اِلَّآ اَنْفُسُهُمْ فَشَهَادَةُ اَحَدِهِمْ اَرْبَعُ شَهٰدٰتٍۢ بِاللّٰهِ ۙاِنَّهٗ لَمِنَ الصّٰدِقِيْنَ (النور : ٢٤)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
எவர்கள்
yarmūna
يَرْمُونَ
accuse
ஏசுகிறார்களோ
azwājahum
أَزْوَٰجَهُمْ
their spouses
தங்களது மனைவிகளை
walam yakun
وَلَمْ يَكُن
and not have
இல்லையோ
lahum
لَّهُمْ
for them
அவர்களிடம்
shuhadāu
شُهَدَآءُ
witnesses
சாட்சிகள்
illā
إِلَّآ
except
தவிர
anfusuhum
أَنفُسُهُمْ
themselves
அவர்களை
fashahādatu
فَشَهَٰدَةُ
then (the) testimony
சாட்சிகள் சொல்ல வேண்டும்
aḥadihim
أَحَدِهِمْ
(of) one of them
அவர்களில் ஒருவர்
arbaʿu shahādātin
أَرْبَعُ شَهَٰدَٰتٍۭ
(is) four testimonies
நான்கு முறை சாட்சி சொல்வது
bil-lahi
بِٱللَّهِۙ
by Allah
அல்லாஹ்வின் மீது சத்தியமாக
innahu
إِنَّهُۥ
that he
நிச்சயமாக தான்
lamina l-ṣādiqīna
لَمِنَ ٱلصَّٰدِقِينَ
(is) surely of the truthful
உண்மை கூறுபவர்களில்

Transliteration:

Wallazeena yarmoona azwaajahum wa lam yakul lahum shuhadaaa'u illaaa anfusuhum fashahaadatu ahadihim arb'u shahaadaatim billaahi innahoo laminas saadiqeen (QS. an-Nūr:6)

English Sahih International:

And those who accuse their wives [of adultery] and have no witnesses except themselves – then the witness of one of them [shall be] four testimonies [swearing] by Allah that indeed, he is of the truthful. (QS. An-Nur, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

எவர்கள் தங்கள் மனைவிகள் மீது (விபச்சாரத்தைக் கொண்டு) குற்றம்கூறித் தங்களையன்றி அவர்களிடம் (நான்கு) சாட்சிகள் இல்லாமல் இருந்தால் அதற்காக அச்சமயம் நிச்சயமாக தான் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி, (ஸூரத்துந் நூர், வசனம் ௬)

Jan Trust Foundation

எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி|

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர்கள் தங்களது மனைவிகளை (விபசாரிகள் என்று) ஏசுகிறார்களோ அவர்களிடம் அவர்களைத் தவிர சாட்சிகள் (வேறு) இல்லையோ, அவர்களில் ஒருவர், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக தான் உண்மை கூறுபவர்களில் (ஒருவன்)தான்”என்று நான்கு முறை சாட்சிகள் சொல்ல வேண்டும்.