Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௨௮

Qur'an Surah An-Nur Verse 28

ஸூரத்துந் நூர் [௨௪]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِنْ لَّمْ تَجِدُوْا فِيْهَآ اَحَدًا فَلَا تَدْخُلُوْهَا حَتّٰى يُؤْذَنَ لَكُمْ وَاِنْ قِيْلَ لَكُمُ ارْجِعُوْا فَارْجِعُوْا هُوَ اَزْكٰى لَكُمْ ۗوَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ (النور : ٢٤)

fa-in lam tajidū
فَإِن لَّمْ تَجِدُوا۟
But if not you find
நீங்கள் காணவில்லையெனில்
fīhā
فِيهَآ
in it
அவற்றில்
aḥadan
أَحَدًا
anyone
ஒருவரையும்
falā tadkhulūhā
فَلَا تَدْخُلُوهَا
then (do) not enter it
அவற்றில் நீங்கள் நுழையாதீர்கள்
ḥattā yu'dhana
حَتَّىٰ يُؤْذَنَ
until permission has been given
அனுமதி கொடுக்கப்படுகின்ற வரை
lakum
لَكُمْۖ
to you
உங்களுக்கு
wa-in qīla
وَإِن قِيلَ
And if it is said
சொல்லப்பட்டால்
lakumu
لَكُمُ
to you
உங்களுக்கு
ir'jiʿū
ٱرْجِعُوا۟
"Go back"
திரும்பி விடுங்கள்
fa-ir'jiʿū
فَٱرْجِعُوا۟ۖ
then go back;
திரும்பி விடுங்கள்
huwa
هُوَ
it
அது
azkā
أَزْكَىٰ
(is) purer
மிக சுத்தமானது
lakum
لَكُمْۚ
for you
உங்களுக்கு
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
of what you do
நீங்கள் செய்வதை
ʿalīmun
عَلِيمٌ
(is) All-Knower
நன்கறிந்தவன்

Transliteration:

Fa il lam tajidoo feehaaa ahadan falaa tadkhuloohaa hattaa yu'zana lakum wa in qeela lakumurji'oo farji'oo huwa azkaa lakum; wallaahu bimaa ta'maloona 'Aleem (QS. an-Nūr:28)

English Sahih International:

And if you do not find anyone therein, do not enter them until permission has been given you. And if it is said to you, "Go back," then go back; it is purer for you. And Allah is Knowing of what you do. (QS. An-Nur, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

அவ்வீட்டில் எவரையுமே நீங்கள் காணாவிடில், உங்களுக்கு அனுமதி கிடைக்கும் வரையில் அதில் நுழையாதீர்கள். (தவிர இச்சமயம் வீட்டில் நுழைய வேண்டாம்.) "நீங்கள் திரும்பிவிடுங்கள்" என்று (அவ்வீட்டில் இருக்கும் பெண்கள் மற்ற எவராலும்) உங்களுக்குக் கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் (தாமதிக்காது) திரும்பி விடுங்கள். இதுவே உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்து கொள்வான். (ஸூரத்துந் நூர், வசனம் ௨௮)

Jan Trust Foundation

அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், “திரும்பிப் போய் விடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் - அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவற்றில் நீங்கள் ஒருவரையும் காணவில்லையெனில், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படுகின்ற வரை அவற்றில் நீங்கள் நுழையாதீர்கள். “திரும்பி விடுங்கள்”என்று உங்களுக்கு சொல்லப்பட்டால் (வீட்டுக்குள் நுழையாமல்) திரும்பி விடுங்கள். அது உங்க(ள் ஆன்மாக்க)ளுக்கு மிக சுத்தமானது. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.