Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௨௬

Qur'an Surah An-Nur Verse 26

ஸூரத்துந் நூர் [௨௪]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلْخَبِيْثٰتُ لِلْخَبِيْثِيْنَ وَالْخَبِيْثُوْنَ لِلْخَبِيْثٰتِۚ وَالطَّيِّبٰتُ لِلطَّيِّبِيْنَ وَالطَّيِّبُوْنَ لِلطَّيِّبٰتِۚ اُولٰۤىِٕكَ مُبَرَّءُوْنَ مِمَّا يَقُوْلُوْنَۗ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ ࣖ (النور : ٢٤)

al-khabīthātu
ٱلْخَبِيثَٰتُ
Evil women
கெட்ட சொற்கள்
lil'khabīthīna
لِلْخَبِيثِينَ
(are) for evil men
கெட்டவர்களுக்கு உரியன
wal-khabīthūna
وَٱلْخَبِيثُونَ
and evil men
இன்னும் கெட்டவர்கள்
lil'khabīthāti
لِلْخَبِيثَٰتِۖ
(are) for evil women
கெட்ட சொற்களுக்கு உரியவர்கள்
wal-ṭayibātu
وَٱلطَّيِّبَٰتُ
And good women
இன்னும் நல்ல சொற்கள்
lilṭṭayyibīna
لِلطَّيِّبِينَ
(are) for good men
நல்லவர்களுக்கு உரியன
wal-ṭayibūna
وَٱلطَّيِّبُونَ
and good men
இன்னும் நல்லவர்கள்
lilṭṭayyibāti
لِلطَّيِّبَٰتِۚ
(are) for good women
நல்ல சொற்களுக்கு உரியவர்கள்
ulāika
أُو۟لَٰٓئِكَ
Those
அவர்கள்
mubarraūna
مُبَرَّءُونَ
(are) innocent
நீக்கப்பட்டவர்கள்
mimmā yaqūlūna
مِمَّا يَقُولُونَۖ
of what they say
இவர்கள் சொல்வதிலிருந்து
lahum
لَهُم
For them
அவர்களுக்கு
maghfiratun
مَّغْفِرَةٌ
(is) forgiveness
மன்னிப்பும்
wariz'qun
وَرِزْقٌ
and a provision
அருட்கொடையும்
karīmun
كَرِيمٌ
noble
கண்ணியமான

Transliteration:

Alkhabeesaatu lilkha beeseena walkhabeesoona lilkhabeesaati wattaiyibaatu littaiyibeena wattaiyiboona littaiyibaat; ulaaa'ika mubar ra'oona maimma yaqooloona lahum maghfiratunw wa rizqun kareem (QS. an-Nūr:26)

English Sahih International:

Evil words are for evil men, and evil men are [subjected] to evil words. And good words are for good men, and good men are [an object] of good words. Those [good people] are declared innocent of what they [i.e., slanderers] say. For them is forgiveness and noble provision. (QS. An-Nur, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும்; கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் தகுமானவர்கள். (அவ்வாறே) பரிசுத்தமான பெண்கள், பரிசுத்தமான ஆண்களுக்கும்; பரிசுத்தமான ஆண்கள், பரிசுத்தமான பெண்களுக்கும் தகுமானவர்கள். இத்தகைய (பரிசுத்தமான)வர்கள்தாம் (இந்த நயவஞ்சகர்கள்) கூறும் குற்றங்குறைகளிலிருந்து பரிசுத்தமாக இருக்கின்றனர்.இவர்களுக்கு (மறுமையில்) மன்னிப்பும் உண்டு; கண்ணியமான முறையில் உணவும் உண்டு. (ஸூரத்துந் நூர், வசனம் ௨௬)

Jan Trust Foundation

கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்| நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கெட்ட சொற்கள் கெட்டவர்களுக்கு உரியன. கெட்டவர்கள் கெட்ட சொற்களுக்கு உரியவர்கள். நல்ல சொற்கள் நல்லவர்களுக்கு உரியன. நல்லவர்கள் நல்ல சொற்களுக்கு உரியவர்கள். அவர்கள் (-நல்லவர்கள்) இவர்கள் (-பாவிகள்) சொல்வதிலிருந்து நீக்கப்பட்டவர்கள். (பாவிகள் சுமத்தும் பழியிலிருந்து நல்லவர்கள் நீங்கியவர்கள் ஆவர்.) அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான அருட்கொடையும் (-சொர்கமும்) உண்டு.