اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِيْنَ اِذَا دُعُوْٓا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اَنْ يَّقُوْلُوْا سَمِعْنَا وَاَطَعْنَاۗ وَاُولٰۤىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ٥١
- innamā kāna qawla
- إِنَّمَا كَانَ قَوْلَ
- கூற்றாக இருப்பதெல்லாம்
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களுடைய
- idhā duʿū
- إِذَا دُعُوٓا۟
- அழைக்கப்பட்டால்
- ilā l-lahi
- إِلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் பக்கம்
- warasūlihi
- وَرَسُولِهِۦ
- இன்னும் அவனது தூதர்
- liyaḥkuma
- لِيَحْكُمَ
- அவர் தீர்ப்பளிப்பதற்காக
- baynahum
- بَيْنَهُمْ
- அவர்களுக்கு மத்தியில்
- an yaqūlū
- أَن يَقُولُوا۟
- அவர்கள் கூறுவதுதான்
- samiʿ'nā
- سَمِعْنَا
- நாங்கள் செவியுற்றோம்
- wa-aṭaʿnā
- وَأَطَعْنَاۚ
- இன்னும் கீழ்ப்படிந்தோம்
- wa-ulāika humu
- وَأُو۟لَٰٓئِكَ هُمُ
- அவர்கள்தான்
- l-muf'liḥūna
- ٱلْمُفْلِحُونَ
- வெற்றியாளர்கள்
எனினும், மெய்யாகவே நம்பிக்கை கொண்டவர்களோ அவர்களுக்கு இடையில் (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றித்) தீர்ப்பு பெற அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் வரும்படி அழைக்கப்பட்டால், அதற்கவர்கள் "நாங்கள் செவி சாய்த்தோம்; நாங்கள் வழிப்பட்டோம்" என்று கூறுவதைத் தவிர, வேறு ஒன்றும் கூறுவதில்லை. இத்தகையவர்கள்தாம் முற்றிலும் வெற்றி அடைந்தவர்கள். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௫௧)Tafseer
وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَخْشَ اللّٰهَ وَيَتَّقْهِ فَاُولٰۤىِٕكَ هُمُ الْفَاۤىِٕزُوْنَ ٥٢
- waman
- وَمَن
- யார்
- yuṭiʿi
- يُطِعِ
- கீழ்ப்படிகின்றார்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வுக்கும்
- warasūlahu
- وَرَسُولَهُۥ
- அவனது தூதருக்கும்
- wayakhsha
- وَيَخْشَ
- இன்னும் பயப்படுகிறார்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- wayattaqhi
- وَيَتَّقْهِ
- இன்னும் அவனை அஞ்சிக் கொள்கிறார்
- fa-ulāika humu
- فَأُو۟لَٰٓئِكَ هُمُ
- அவர்கள்தான்
- l-fāizūna
- ٱلْفَآئِزُونَ
- நற்பாக்கியம் பெற்றவர்கள்
எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வுக்குப் பயந்து (அவனுக்கு மாறு செய்வதை விட்டு) விலகிக் கொண்டார்களோ அத்தகையவர்தாம் நிச்சயமாக பெரும் பாக்கியம் பெற்றவர்கள். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௫௨)Tafseer
۞ وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ لَىِٕنْ اَمَرْتَهُمْ لَيَخْرُجُنَّۗ قُلْ لَّا تُقْسِمُوْاۚ طَاعَةٌ مَّعْرُوْفَةٌ ۗاِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ ٥٣
- wa-aqsamū
- وَأَقْسَمُوا۟
- சத்தியம் செய்தனர்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வின் மீது
- jahda
- جَهْدَ
- கடுமையாக
- aymānihim
- أَيْمَٰنِهِمْ
- அவர்களது சத்தியங்கள்
- la-in amartahum
- لَئِنْ أَمَرْتَهُمْ
- நீங்கள் அவர்களுக்கு கட்டளையிட்டால்
- layakhrujunna
- لَيَخْرُجُنَّۖ
- நிச்சயமாக அவர்கள் வெளியேறுவார்கள்
- qul
- قُل
- கூறுவீராக
- lā tuq'simū
- لَّا تُقْسِمُوا۟ۖ
- நீங்கள் சத்தியமிடாதீர்கள்
- ṭāʿatun
- طَاعَةٌ
- கீழ்ப்படிதலே
- maʿrūfatun
- مَّعْرُوفَةٌۚ
- அறியப்பட்ட
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- khabīrun
- خَبِيرٌۢ
- ஆழ்ந்தறிபவன்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- நீங்கள் செய்வதை
(நபியே! நயவஞ்சகர்களாகிய) அவர்களுக்கு நீங்கள் கட்டளையிட்டால், அவர்களும் நிச்சயமாக (போருக்குப்) புறப்பட்டு விடுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறுகிறார்கள். நீங்கள் (அவர்களை நோக்கிக்) கூறுங்கள்: "(இவ்வாறு) சத்தியம் செய்யாதீர்கள்! நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறுவதன் உண்மை தெரிந்த விஷயம்தான். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்." ([௨௪] ஸூரத்துந் நூர்: ௫௩)Tafseer
قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُمْ مَّا حُمِّلْتُمْۗ وَاِنْ تُطِيْعُوْهُ تَهْتَدُوْاۗ وَمَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ ٥٤
- qul
- قُلْ
- கூறுவீராக
- aṭīʿū
- أَطِيعُوا۟
- கீழ்ப்படியுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வுக்கு
- wa-aṭīʿū
- وَأَطِيعُوا۟
- இன்னும் கீழ்ப்படியுங்கள்
- l-rasūla
- ٱلرَّسُولَۖ
- தூதருக்கு
- fa-in tawallaw
- فَإِن تَوَلَّوْا۟
- நீங்கள் விலகிச் சென்றால்
- fa-innamā
- فَإِنَّمَا
- எல்லாம்
- ʿalayhi
- عَلَيْهِ
- அவர் மீது
- mā ḥummila
- مَا حُمِّلَ
- எது/சுமத்தப்பட்டது
- waʿalaykum
- وَعَلَيْكُم
- இன்னும் உங்கள் மீது
- mā
- مَّا
- எது
- ḥummil'tum
- حُمِّلْتُمْۖ
- சுமத்தப்பட்டீர்கள்
- wa-in tuṭīʿūhu
- وَإِن تُطِيعُوهُ
- நீங்கள் கீழ்ப்படிந்தால்/அவருக்கு
- tahtadū
- تَهْتَدُوا۟ۚ
- நேர்வழி பெறுவீர்கள்
- wamā
- وَمَا
- கடமை இல்லை
- ʿalā l-rasūli
- عَلَى ٱلرَّسُولِ
- தூதர் மீது
- illā
- إِلَّا
- தவிர
- l-balāghu
- ٱلْبَلَٰغُ
- எடுத்துரைப்பதை
- l-mubīnu
- ٱلْمُبِينُ
- தெளிவாக
(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் (உண்மையாக) கட்டுப்பட்டு நடங்கள். நீங்கள் புறக்கணித்தாலோ (நமக்கொன்றும் நஷ்டமில்லை. ஏனென்றால்) அவர் மீதுள்ள கடமை எல்லாம், அவர் (தன்) மீது சுமத்தப்பட்ட (தூதை உங்களுக்கு எடுத்துரைப்ப)துதான். உங்கள் மீதுள்ள கடமையெல்லாம் உங்கள் மீது சுமத்தப்பட்ட (அவருக்கு கட்டுப்பட்டு நடப்ப)துதான். நீங்கள் அவருக்கு கட்டுப்பட்டு நடந்தால் நீங்கள்தாம் நேரான வழியில் சென்று விடுவீர்கள். (நம் தூதைப்) பகிரங்கமாக (தெளிவாக) அறிவிப்பதைத் தவிர, வேறொன்றும் நம் தூதர் மீது கடமையில்லை. ([௨௪] ஸூரத்துந் நூர்: ௫௪)Tafseer
وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِى الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۖ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِيْنَهُمُ الَّذِى ارْتَضٰى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِّنْۢ بَعْدِ خَوْفِهِمْ اَمْنًاۗ يَعْبُدُوْنَنِيْ لَا يُشْرِكُوْنَ بِيْ شَيْـًٔاۗ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰلِكَ فَاُولٰۤىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ٥٥
- waʿada
- وَعَدَ
- வாக்களித்துள்ளான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டவர்கள்
- minkum
- مِنكُمْ
- உங்களில்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நற்செயல்களை
- layastakhlifannahum
- لَيَسْتَخْلِفَنَّهُمْ
- இவர்களை பிரதிநிதிகளாக ஆக்குவான்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- இப்பூமியில்
- kamā
- كَمَا
- போன்று
- is'takhlafa
- ٱسْتَخْلَفَ
- பிரதிநிதிகளாக ஆக்கியது
- alladhīna min qablihim
- ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ
- இவர்களுக்கு முன்னுள்ளவர்களை
- walayumakkinanna
- وَلَيُمَكِّنَنَّ
- இன்னும் பலப்படுத்தித்தருவான்
- lahum
- لَهُمْ
- இவர்களுக்கு
- dīnahumu
- دِينَهُمُ
- இவர்களுடைய மார்க்கத்தை
- alladhī ir'taḍā
- ٱلَّذِى ٱرْتَضَىٰ
- எது/அவன் திருப்தி கொண்டான்
- lahum
- لَهُمْ
- இவர்களுக்காக
- walayubaddilannahum
- وَلَيُبَدِّلَنَّهُم
- இன்னும் இவர்களுக்கு மாற்றித்தருவான்
- min baʿdi
- مِّنۢ بَعْدِ
- பின்னர்
- khawfihim
- خَوْفِهِمْ
- இவர்களது பயத்திற்கு
- amnan
- أَمْنًاۚ
- நிம்மதியை
- yaʿbudūnanī
- يَعْبُدُونَنِى
- இவர்கள் என்னை வணங்குவார்கள்
- lā yush'rikūna
- لَا يُشْرِكُونَ
- இணைவைக்க மாட்டார்கள்
- bī
- بِى
- எனக்கு
- shayan
- شَيْـًٔاۚ
- எதையும்
- waman
- وَمَن
- யார்
- kafara
- كَفَرَ
- நிராகரிப்பார்களோ
- baʿda
- بَعْدَ
- பின்னர்
- dhālika
- ذَٰلِكَ
- இதற்கு
- fa-ulāika humu
- فَأُو۟لَٰٓئِكَ هُمُ
- அவர்கள்தான்
- l-fāsiqūna
- ٱلْفَٰسِقُونَ
- பாவிகள்
(மனிதர்களே!) உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால், அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை(ப் பூமிக்கு) அதிபதிகளாக்கியது போன்றே இவர்களையும் நிச்சயமாகப் பூமிக்கு அதிபதியாக்கி வைப்பதாகவும், அவன் விரும்பிய மார்க்கத்தில் இவர்களை உறுதியாக்கி வைப்பதாகவும், அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு இவர்களுடைய பயத்தை மாற்றி விடுவதாகவும் நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். (அன்றி) அவன் தன்னையே வணங்கும்படியாகவும், யாதொன் றையும் தனக்கு இணையாக்கக் கூடாது என்றும் அவன் கட்டளையிட்டிருக்கின்றான். இதன் பின்னர், எவரேனும் நிராகரிப்பவர்களாகி விட்டால் நிச்சயமாக அவர்கள் பெரும் பாவிகள்தாம். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௫௫)Tafseer
وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ٥٦
- wa-aqīmū
- وَأَقِيمُوا۟
- இன்னும் நிலைநிறுத்துங்கள்
- l-ṣalata
- ٱلصَّلَوٰةَ
- தொழுகையை
- waātū
- وَءَاتُوا۟
- இன்னும் கொடுங்கள்
- l-zakata
- ٱلزَّكَوٰةَ
- ஸகாத்தை
- wa-aṭīʿū
- وَأَطِيعُوا۟
- இன்னும் கீழ்ப்படியுங்கள்
- l-rasūla
- ٱلرَّسُولَ
- தூதருக்கு
- laʿallakum tur'ḥamūna
- لَعَلَّكُمْ تُرْحَمُونَ
- நீங்கள் வெற்றி பெறுவதற்காக
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்தொழுகி, ஜகாத்தும் கொடுத்து (அவனுடைய) தூதரை (முற்றிலும்) பின்பற்றி வாருங்கள். நீங்கள் (இறைவனுடைய) அருளை அடைவீர்கள். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௫௬)Tafseer
لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْا مُعْجِزِيْنَ فِى الْاَرْضِۚ وَمَأْوٰىهُمُ النَّارُۗ وَلَبِئْسَ الْمَصِيْرُ ࣖ ٥٧
- lā taḥsabanna
- لَا تَحْسَبَنَّ
- எண்ணிவிடாதீர்கள்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரிப்பாளர்களை
- muʿ'jizīna fī l-arḍi
- مُعْجِزِينَ فِى ٱلْأَرْضِۚ
- பலவீனப்படுத்தி விடுபவர்களாக/இப்பூமியில்
- wamawāhumu
- وَمَأْوَىٰهُمُ
- இன்னும் அவர்கள் தங்குமிடம்
- l-nāru
- ٱلنَّارُۖ
- நரகம்தான்
- walabi'sa l-maṣīru
- وَلَبِئْسَ ٱلْمَصِيرُ
- அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது
(நபியே!) நிராகரிப்பவர்கள் பூமியில் (ஓடி ஒளிந்து தப்பித்துக்கொண்டு) நம்மைத் தோற்கடித்து விடுவர் என நீங்கள் எண்ணவேண்டாம். (அவர்களைத் தண்டனைக்குள்ளாக்கியே தீருவோம். மறுமையில்) அவர்கள் செல்லுமிடம் நரகம்தான். அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது. ([௨௪] ஸூரத்துந் நூர்: ௫௭)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِيْنَ مَلَكَتْ اَيْمَانُكُمْ وَالَّذِيْنَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلٰثَ مَرّٰتٍۗ مِنْ قَبْلِ صَلٰوةِ الْفَجْرِ وَحِيْنَ تَضَعُوْنَ ثِيَابَكُمْ مِّنَ الظَّهِيْرَةِ وَمِنْۢ بَعْدِ صَلٰوةِ الْعِشَاۤءِۗ ثَلٰثُ عَوْرٰتٍ لَّكُمْۗ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ جُنَاحٌۢ بَعْدَهُنَّۗ طَوَّافُوْنَ عَلَيْكُمْ بَعْضُكُمْ عَلٰى بَعْضٍۗ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰيٰتِۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ٥٨
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- liyastadhinkumu
- لِيَسْتَـْٔذِنكُمُ
- உங்களிடம் அனுமதி கோரட்டும்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- malakat
- مَلَكَتْ
- சொந்தமாகியவர்களும்
- aymānukum
- أَيْمَٰنُكُمْ
- உங்கள் வலக்கரங்கள்
- wa-alladhīna lam yablughū
- وَٱلَّذِينَ لَمْ يَبْلُغُوا۟
- அடையாதவர்களும்
- l-ḥuluma
- ٱلْحُلُمَ
- பருவத்தை
- minkum
- مِنكُمْ
- உங்களில்
- thalātha
- ثَلَٰثَ
- மூன்று
- marrātin
- مَرَّٰتٍۚ
- நேரங்களில்
- min qabli
- مِّن قَبْلِ
- முன்
- ṣalati
- صَلَوٰةِ
- தொழுகைக்கு
- l-fajri
- ٱلْفَجْرِ
- காலை
- waḥīna taḍaʿūna
- وَحِينَ تَضَعُونَ
- மதியத்தில்
- thiyābakum
- ثِيَابَكُم
- உங்கள் ஆடைகளை
- mina l-ẓahīrati
- مِّنَ ٱلظَّهِيرَةِ
- நீங்கள் களைந்துவிடும் நேரத்தில்
- wamin baʿdi
- وَمِنۢ بَعْدِ
- பின்
- ṣalati
- صَلَوٰةِ
- தொழுகைக்கு
- l-ʿishāi
- ٱلْعِشَآءِۚ
- இஷா
- thalāthu
- ثَلَٰثُ
- மூன்றும்
- ʿawrātin
- عَوْرَٰتٍ
- மறைவான நேரங்கள்
- lakum
- لَّكُمْۚ
- உங்களுக்கு
- laysa
- لَيْسَ
- இல்லை
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்கள் மீதும்
- walā ʿalayhim
- وَلَا عَلَيْهِمْ
- அவர்கள் மீதும்
- junāḥun
- جُنَاحٌۢ
- குற்றம்
- baʿdahunna
- بَعْدَهُنَّۚ
- அவர்கள் பின்பு
- ṭawwāfūna
- طَوَّٰفُونَ
- அதிகம் வந்துபோகக் கூடியவர்கள்
- ʿalaykum
- عَلَيْكُم
- உங்களிடம்
- baʿḍukum
- بَعْضُكُمْ
- உங்களில் சிலர்
- ʿalā
- عَلَىٰ
- மீது
- baʿḍin
- بَعْضٍۚ
- சிலரின்
- kadhālika
- كَذَٰلِكَ
- இவ்வாறு
- yubayyinu
- يُبَيِّنُ
- தெளிவுபடுத்துகிறான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- lakumu
- لَكُمُ
- உங்களுக்கு
- l-āyāti
- ٱلْءَايَٰتِۗ
- வசனங்களை
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
- ḥakīmun
- حَكِيمٌ
- மகா ஞானவான்
நம்பிக்கையாளர்களே! உங்களுடைய அடிமைகளும், உங்களில் பருவமடையாத (சிறிய) பிள்ளைகளும் (நீங்கள் திரைக்குள் அந்தரங்கமாக இருக்கக்கூடிய நேரங்களில்) உங்களிடம் (வருவாராயின் உங்களுடைய) அனுமதியை மூன்று தடவைகள் அவர்கள் கோரவேண்டும். (அந்த நேரங்களாவன:) "ஃபஜ்ரு" தொழுகைக்கு முன்னரும் (படுக்கைக்காக உங்கள் மேல் மிச்சமான) ஆடைகளைக் களைந்திருக்கக்கூடிய "லுஹர்" வேளையிலும், "இஷா" நேரத்தில் தொழுகைக்குப் பின்னரும் ஆகிய (இம்) மூன்று நேரங்களும் நீங்கள் திரைக்குள் அந்தரங்கமாக இருக்கக்கூடிய நேரங்கள். (இவைகளைத் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் உங்கள் அனுமதியின்றியே உங்களிடம் வருவது) அவர்கள் மீது குற்றமல்ல. (ஏனென்றால்,) இவர்கள் அடிக்கடி உங்களிடம் வரக்கூடியவர் களாகவும், உங்களில் ஒருவர் மற்றவரிடம் அடிக்கடி செல்ல வேண்டியவர்களாகவும் இருப்பதனாலும் (அடிக்கடி அனுமதி கோரவேண்டிய அவசியமில்லை.) இவ்வாறு அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௫௮)Tafseer
وَاِذَا بَلَغَ الْاَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوْا كَمَا اسْتَأْذَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۗ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَكُمْ اٰيٰتِهٖۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ٥٩
- wa-idhā balagha
- وَإِذَا بَلَغَ
- அடைந்துவிட்டால்
- l-aṭfālu
- ٱلْأَطْفَٰلُ
- குழந்தைகள்
- minkumu
- مِنكُمُ
- உங்களின்
- l-ḥuluma
- ٱلْحُلُمَ
- பருவத்தை
- falyastadhinū
- فَلْيَسْتَـْٔذِنُوا۟
- அவர்கள் அனுமதி கோரட்டும்
- kamā is'tadhana
- كَمَا ٱسْتَـْٔذَنَ
- அனுமதி கோரியது போன்று
- alladhīna min qablihim
- ٱلَّذِينَ مِن قَبْلِهِمْۚ
- அவர்களுக்கு முன்னுள்ளவர்கள்
- kadhālika
- كَذَٰلِكَ
- இவ்வாறு
- yubayyinu
- يُبَيِّنُ
- தெளிவுபடுத்துகிறான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- āyātihi
- ءَايَٰتِهِۦۗ
- தனது வசனங்களை
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
- ḥakīmun
- حَكِيمٌ
- மகா ஞானவான்
உங்கள் குழந்தைகள் பருவமடைந்துவிடும் பட்சத்தில், அவர்களும் தங்களுக்கு மூத்தவர்கள் அனுமதி கோரவேண்டிய பிரகாரம் அனுமதி கோரவேண்டும். இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௫௯)Tafseer
وَالْقَوَاعِدُ مِنَ النِّسَاۤءِ الّٰتِيْ لَا يَرْجُوْنَ نِكَاحًا فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ اَنْ يَّضَعْنَ ثِيَابَهُنَّ غَيْرَ مُتَبَرِّجٰتٍۢ بِزِيْنَةٍۗ وَاَنْ يَّسْتَعْفِفْنَ خَيْرٌ لَّهُنَّۗ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ ٦٠
- wal-qawāʿidu
- وَٱلْقَوَٰعِدُ
- வயது முதிர்ந்தவர்கள்
- mina l-nisāi
- مِنَ ٱلنِّسَآءِ
- பெண்களில்
- allātī lā yarjūna
- ٱلَّٰتِى لَا يَرْجُونَ
- ஆசைப்படாதவர்கள்
- nikāḥan
- نِكَاحًا
- திருமணத்தை
- falaysa
- فَلَيْسَ
- இல்லை
- ʿalayhinna
- عَلَيْهِنَّ
- அவர்கள் மீது
- junāḥun
- جُنَاحٌ
- குற்றம்
- an yaḍaʿna
- أَن يَضَعْنَ
- அவர்கள் கழட்டுவதில்
- thiyābahunna
- ثِيَابَهُنَّ
- அவர்களின் துப்பட்டாக்களை
- ghayra mutabarrijātin
- غَيْرَ مُتَبَرِّجَٰتٍۭ
- வெளியே வராமல்
- bizīnatin
- بِزِينَةٍۖ
- அலங்காரங்களுடன்
- wa-an yastaʿfif'na
- وَأَن يَسْتَعْفِفْنَ
- அவர்கள் பேணுதலாக இருப்பது
- khayrun
- خَيْرٌ
- சிறந்தது
- lahunna
- لَّهُنَّۗ
- அவர்களுக்கு
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- samīʿun
- سَمِيعٌ
- நன்கு செவியேற்பவன்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
திருமண விருப்பமற்ற முதிர்ந்த வயதுடைய (நடமாட முடியாது) உட்கார்ந்தே இருக்கக்கூடிய கிழவிகள், தங்கள் அழகைக் காண்பிக்க வேண்டுமென்ற நோக்கமின்றித் தங்கள் மேல் ஆடைகளைக் களைந்து விட்டிருப்பதில் அவர்கள் மீது குற்றமில்லை. இதனையும் அவர்கள் தவிர்த்துக்கொள்வதே அவர்களுக்கு மிக்க நன்று. அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௬௦)Tafseer