Skip to content

ஸூரா ஸூரத்துந் நூர் - Word by Word

An-Nur

(an-Nūr)

bismillaahirrahmaanirrahiim

سُوْرَةٌ اَنْزَلْنٰهَا وَفَرَضْنٰهَا وَاَنْزَلْنَا فِيْهَآ اٰيٰتٍۢ بَيِّنٰتٍ لَّعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ١

sūratun
سُورَةٌ
இது ஒரு அத்தியாயமாகும்
anzalnāhā
أَنزَلْنَٰهَا
இதை நாம் இறக்கினோம்
wafaraḍnāhā
وَفَرَضْنَٰهَا
இதை நாம் கடமையாக்கினோம்
wa-anzalnā
وَأَنزَلْنَا
இன்னும் நாம் இறக்கினோம்
fīhā
فِيهَآ
இதில்
āyātin
ءَايَٰتٍۭ
அத்தாட்சிகளை
bayyinātin
بَيِّنَٰتٍ
தெளிவான
laʿallakum tadhakkarūna
لَّعَلَّكُمْ تَذَكَّرُونَ
நீங்கள் நல்லறிவு பெறுவதற்காக
(மனிதர்களே! இது) ஓர் அத்தியாயம். இதனை நாமே இறக்கி (இதிலுள்ள சட்ட திட்டங்களை) நாமே விதித்துள்ளோம். அன்றி, இதனைக்கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு தெளிவான வசனங்களையே நாம் இதில் இறக்கி வைத்தோம். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௧)
Tafseer

اَلزَّانِيَةُ وَالزَّانِيْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ ۖوَّلَا تَأْخُذْكُمْ بِهِمَا رَأْفَةٌ فِيْ دِيْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِۚ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَاۤىِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِيْنَ ٢

al-zāniyatu
ٱلزَّانِيَةُ
விபச்சாரி
wal-zānī
وَٱلزَّانِى
இன்னும் விபசாரன்
fa-ij'lidū
فَٱجْلِدُوا۟
அடியுங்கள்
kulla wāḥidin
كُلَّ وَٰحِدٍ
ஒவ்வொருவரையும்
min'humā
مِّنْهُمَا
அவ்விருவரில்
mi-ata
مِا۟ئَةَ
நூறு
jaldatin
جَلْدَةٍۖ
அடி
walā
وَلَا
பிடித்துவிட வேண்டாம்
takhudh'kum
تَأْخُذْكُم
பிடித்துவிட வேண்டாம் உங்களை
bihimā
بِهِمَا
அந்த இருவர் மீது
rafatun
رَأْفَةٌ
இரக்கம்
fī dīni
فِى دِينِ
மார்க்கத்தில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
tu'minūna
تُؤْمِنُونَ
நம்பிக்கை கொண்டவர்களாக
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வையும்
wal-yawmi l-ākhiri
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِۖ
மறுமை நாளையும்
walyashhad
وَلْيَشْهَدْ
ஆஜராகட்டும்
ʿadhābahumā
عَذَابَهُمَا
அவ்விருவரின் தண்டனைக்கு
ṭāifatun
طَآئِفَةٌ
ஒரு கூட்டம்
mina l-mu'minīna
مِّنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்
விபச்சாரம் செய்த பெண், விபசாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவரையும் நூறு கசையடிகள் அடியுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ் விதித்த இக்கட்டளையை நிறைவேற்றுவதில் அவ்விருவர்களுடைய விஷயத்தில் உங்களுக்கு இரக்கம் ஏற்படக்கூடாது. அவ்விருவருக்கும் (தண்டனையாக) வேதனை கொடுக்கும் சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு தொகையினர் அதன் சமீபமாக இருக்கவும். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௨)
Tafseer

اَلزَّانِيْ لَا يَنْكِحُ اِلَّا زَانِيَةً اَوْ مُشْرِكَةً ۖوَّالزَّانِيَةُ لَا يَنْكِحُهَآ اِلَّا زَانٍ اَوْ مُشْرِكٌۚ وَحُرِّمَ ذٰلِكَ عَلَى الْمُؤْمِنِيْنَ ٣

al-zānī
ٱلزَّانِى
ஒரு விபசாரன்
lā yankiḥu
لَا يَنكِحُ
உ(டலு)றவு வைக்க மாட்டான்
illā zāniyatan
إِلَّا زَانِيَةً
தவிர/ஒரு விபசாரி
aw
أَوْ
அல்லது
mush'rikatan
مُشْرِكَةً
இணைவைப்பவள்
wal-zāniyatu
وَٱلزَّانِيَةُ
இன்னும் விபசாரி
lā yankiḥuhā
لَا يَنكِحُهَآ
அவளுடன் உ(டலு)றவு வைக்கமாட்டான்
illā
إِلَّا
தவிர
zānin
زَانٍ
ஒரு விபசாரன்
aw
أَوْ
அல்லது
mush'rikun
مُشْرِكٌۚ
இணைவைப்பவன்
waḥurrima
وَحُرِّمَ
தடுக்கப்பட்டுள்ளது
dhālika
ذَٰلِكَ
இது
ʿalā l-mu'minīna
عَلَى ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
(கேவலமான) ஒரு விபச்சாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபச்சாரியை அல்லது இணைவைத்து வணங்கும் ஒரு பெண்ணை அன்றி (மற்றெவளையும்) திருமணம் செய்துகொள்ள முடியாது. (அவ்வாறே) ஒரு விபச்சாரி (கேவலமான) ஒரு விபச்சாரனை அல்லது இணை வைத்து வணங்கும் ஓர் ஆணையன்றி (மற்றெவனையும்) திருமணம் செய்துகொள்ள முடியாது. இத்தகைய திருமணம் நம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கின்றது. ([௨௪] ஸூரத்துந் நூர்: ௩)
Tafseer

وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَأْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَاۤءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًاۚ وَاُولٰۤىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ ٤

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
yarmūna
يَرْمُونَ
ஏசுவார்களோ
l-muḥ'ṣanāti
ٱلْمُحْصَنَٰتِ
பத்தினிகளை
thumma
ثُمَّ
பிறகு
lam yatū
لَمْ يَأْتُوا۟
அவர்கள் கொண்டுவரவில்லை என்றால்
bi-arbaʿati
بِأَرْبَعَةِ
நான்கு
shuhadāa
شُهَدَآءَ
சாட்சிகளை
fa-ij'lidūhum
فَٱجْلِدُوهُمْ
அடியுங்கள் அவர்களை
thamānīna
ثَمَٰنِينَ
எண்பது
jaldatan
جَلْدَةً
அடி
walā taqbalū
وَلَا تَقْبَلُوا۟
ஏற்காதீர்கள்
lahum
لَهُمْ
அவர்களின்
shahādatan
شَهَٰدَةً
சாட்சியத்தை
abadan
أَبَدًاۚ
ஒருபோதும்
wa-ulāika humu
وَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-fāsiqūna
ٱلْفَٰسِقُونَ
பாவிகள்
எவனேனும் கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறி (அதற்கு வேண்டிய) நான்கு சாட்சிகளை அவன் கொண்டு வராவிட்டால் அவனை நீங்கள் எண்பது கசையடிகள் அடியுங்கள். பின்னர், அவன் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) நிச்சயமாக இத்தகையவர்கள் பெரும் பாவிகள். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௪)
Tafseer

اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْۢ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْاۚ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ٥

illā
إِلَّا
தவிர
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
tābū
تَابُوا۟
திருந்தினார்கள்
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
dhālika
ذَٰلِكَ
அதற்குப்
wa-aṣlaḥū
وَأَصْلَحُوا۟
இன்னும் சீர்படுத்திக் கொண்டார்கள்
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
ஆயினும், (இவர்களில்) எவரேனும் இதற்குப் பின்னர் (தங்கள் குற்றங்களிலிருந்து) விலகி கைசேதப்பட்டு மன்னிப்பு கோரி(த் தங்கள்) நடத்தைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாக இருக்கின்றான். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௫)
Tafseer

وَالَّذِيْنَ يَرْمُوْنَ اَزْوَاجَهُمْ وَلَمْ يَكُنْ لَّهُمْ شُهَدَاۤءُ اِلَّآ اَنْفُسُهُمْ فَشَهَادَةُ اَحَدِهِمْ اَرْبَعُ شَهٰدٰتٍۢ بِاللّٰهِ ۙاِنَّهٗ لَمِنَ الصّٰدِقِيْنَ ٦

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
yarmūna
يَرْمُونَ
ஏசுகிறார்களோ
azwājahum
أَزْوَٰجَهُمْ
தங்களது மனைவிகளை
walam yakun
وَلَمْ يَكُن
இல்லையோ
lahum
لَّهُمْ
அவர்களிடம்
shuhadāu
شُهَدَآءُ
சாட்சிகள்
illā
إِلَّآ
தவிர
anfusuhum
أَنفُسُهُمْ
அவர்களை
fashahādatu
فَشَهَٰدَةُ
சாட்சிகள் சொல்ல வேண்டும்
aḥadihim
أَحَدِهِمْ
அவர்களில் ஒருவர்
arbaʿu shahādātin
أَرْبَعُ شَهَٰدَٰتٍۭ
நான்கு முறை சாட்சி சொல்வது
bil-lahi
بِٱللَّهِۙ
அல்லாஹ்வின் மீது சத்தியமாக
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக தான்
lamina l-ṣādiqīna
لَمِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மை கூறுபவர்களில்
எவர்கள் தங்கள் மனைவிகள் மீது (விபச்சாரத்தைக் கொண்டு) குற்றம்கூறித் தங்களையன்றி அவர்களிடம் (நான்கு) சாட்சிகள் இல்லாமல் இருந்தால் அதற்காக அச்சமயம் நிச்சயமாக தான் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி, ([௨௪] ஸூரத்துந் நூர்: ௬)
Tafseer

وَالْخَامِسَةُ اَنَّ لَعْنَتَ اللّٰهِ عَلَيْهِ اِنْ كَانَ مِنَ الْكٰذِبِيْنَ ٧

wal-khāmisatu
وَٱلْخَٰمِسَةُ
ஐந்தாவது முறை
anna
أَنَّ
நிச்சயமாக
laʿnata
لَعْنَتَ
சாபம் உண்டாகட்டும்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ʿalayhi
عَلَيْهِ
தன் மீது
in kāna
إِن كَانَ
ஒருவனாக இருந்தால்
mina l-kādhibīna
مِنَ ٱلْكَٰذِبِينَ
பொய் கூறுபவர்களில்
ஐந்தாவது முறை (இவ்விஷயத்தில்) தான் பொய் சொல்வதாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன் மீது உண்டாகுக! என்றும் அவன் சத்தியம் செய்து கூறவேண்டும். ([௨௪] ஸூரத்துந் நூர்: ௭)
Tafseer

وَيَدْرَؤُا عَنْهَا الْعَذَابَ اَنْ تَشْهَدَ اَرْبَعَ شَهٰدٰتٍۢ بِاللّٰهِ اِنَّهٗ لَمِنَ الْكٰذِبِيْنَ ۙ ٨

wayadra-u
وَيَدْرَؤُا۟
தடுக்கும்
ʿanhā
عَنْهَا
அவளை விட்டும்
l-ʿadhāba
ٱلْعَذَابَ
தண்டனையை
an tashhada
أَن تَشْهَدَ
அவள் சாட்சி சொல்வது
arbaʿa shahādātin
أَرْبَعَ شَهَٰدَٰتٍۭ
நான்கு முறை சாட்சி சொல்வது
bil-lahi
بِٱللَّهِۙ
அல்லாஹ்வின் மீது சத்தியமாக
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
lamina l-kādhibīna
لَمِنَ ٱلْكَٰذِبِينَ
பொய் கூறுபவர்களில் உள்ளவர்
(அவனுடைய மனைவி குற்றமற்றவளாயினும் அவள்மீது குற்றம் திரும்பினால்) அவள் தன் மீது விதிக்கப்படவேண்டிய தண்டனையைத் தட்டிக் கழிப்பதற்காக (அவள் அதனை மறுத்து) நிச்சயமாக(த் தன்னுடைய) அ(க்கண)வன் பொய்யே கூறுகிறான் என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து, ([௨௪] ஸூரத்துந் நூர்: ௮)
Tafseer

وَالْخَامِسَةَ اَنَّ غَضَبَ اللّٰهِ عَلَيْهَآ اِنْ كَانَ مِنَ الصّٰدِقِيْنَ ٩

wal-khāmisata
وَٱلْخَٰمِسَةَ
ஐந்தாவது முறை
anna
أَنَّ
நிச்சயமாக
ghaḍaba
غَضَبَ
சாபம் உண்டாகட்டும்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ʿalayhā
عَلَيْهَآ
தன் மீது
in kāna
إِن كَانَ
அவர் இருந்தால்
mina l-ṣādiqīna
مِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மை கூறுபவர்களில்
ஐந்தாவது முறை மெய்யாகவே அவன் (இவ்விஷயத்தில்) உண்மை சொல்லியிருந்தால் தன்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாவதாகுக! என்றும் அவள் கூறவேண்டும். (இதன் மூலம் அவள் மீது விதிக்கப்பட வேண்டிய தண்டனை நீக்கப்பட்டுவிடும்.) ([௨௪] ஸூரத்துந் நூர்: ௯)
Tafseer
௧௦

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ تَوَّابٌ حَكِيْمٌ ࣖ ١٠

walawlā faḍlu
وَلَوْلَا فَضْلُ
அருளும் இல்லாதிருந்தால்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
waraḥmatuhu
وَرَحْمَتُهُۥ
இன்னும் அவனது கருணையும்
wa-anna
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
tawwābun
تَوَّابٌ
பிழை பொறுப்பவனாகவும்
ḥakīmun
حَكِيمٌ
ஞானவானாகவும்
அல்லாஹ்வினுடைய அருளும், அவனுடைய கிருபையும் உங்கள் மீது இல்லாதிருந்து, அல்லாஹ் பாவங்களை மன்னிப்பவனாகவும் ஞானமுடையவனாகவும் இல்லாதிருந்தால் (உங்கள் குடும்ப வாழ்க்கையே சிதறி நீங்கள் பல துன்பங்களுக்குள்ளாகி இருப்பீர்கள்). ([௨௪] ஸூரத்துந் நூர்: ௧௦)
Tafseer