குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்பியா வசனம் ௯௧
Qur'an Surah Al-Anbya Verse 91
ஸூரத்துல் அன்பியா [௨௧]: ௯௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّتِيْٓ اَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيْهَا مِنْ رُّوْحِنَا وَجَعَلْنٰهَا وَابْنَهَآ اٰيَةً لِّلْعٰلَمِيْنَ (الأنبياء : ٢١)
- wa-allatī
- وَٱلَّتِىٓ
- And she who
- இன்னும் எவள்
- aḥṣanat
- أَحْصَنَتْ
- guarded
- பாதுகாத்துக் கொண்டாள்
- farjahā
- فَرْجَهَا
- her chastity
- தனது மறைவிடத்தை
- fanafakhnā
- فَنَفَخْنَا
- so We breathed
- நாம் ஊதினோம்
- fīhā
- فِيهَا
- into her
- அவளில்
- min rūḥinā
- مِن رُّوحِنَا
- of Our Spirit
- நமது உயிரிலிருந்து
- wajaʿalnāhā
- وَجَعَلْنَٰهَا
- and We made her
- இன்னும் அவளைஆக்கினோம்
- wa-ib'nahā
- وَٱبْنَهَآ
- and her son
- அவளுடைய மகனையும்
- āyatan
- ءَايَةً
- a sign
- ஓர் அத்தாட்சியாக
- lil'ʿālamīna
- لِّلْعَٰلَمِينَ
- for the worlds
- அகிலத்தார்களுக்கு
Transliteration:
Wallateee ahsanat farjahaa fanafakhnaa feehaa mir roohinaa wa ja'alnaahaa wabnahaaa Aayatal lil'aalameen(QS. al-ʾAnbiyāʾ:91)
English Sahih International:
And [mention] the one who guarded her chastity [i.e., Mary], so We blew into her [garment] through Our angel [i.e., Gabriel], and We made her and her son a sign for the worlds. (QS. Al-Anbya, Ayah ௯௧)
Abdul Hameed Baqavi:
தன் கற்பைக் காத்துக்கொண்ட (மர்யம் என்ப)வரை(யும் நீங்கள் ஞாபகமூட்டுங்கள். நம்முடைய தூதர்) ஜிப்ரீல் மூலம் அவருடைய கர்ப்பத்தில் நாம் ஊதினோம். அவரையும் அவருடைய மகனையும் உலகத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம். (ஸூரத்துல் அன்பியா, வசனம் ௯௧)
Jan Trust Foundation
இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூறும்); எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் தனது மறைவிடத்தை பாதுகாத்துக் கொண்டவளையும் (-மர்யமையும்) நினைவு கூர்வீராக! நமது (-நாம் படைத்த) உயிரிலிருந்து அவளில் (-அவளுடைய மேலாடையின் முன்பக்க வழியில்) நாம் ஊதினோம். அவளையும் அவளுடைய மகனையும் அகிலத்தார்களுக்கு ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்கினோம்.