Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்பியா - Page: 10

Al-Anbya

(al-ʾAnbiyāʾ)

௯௧

وَالَّتِيْٓ اَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيْهَا مِنْ رُّوْحِنَا وَجَعَلْنٰهَا وَابْنَهَآ اٰيَةً لِّلْعٰلَمِيْنَ ٩١

wa-allatī
وَٱلَّتِىٓ
இன்னும் எவள்
aḥṣanat
أَحْصَنَتْ
பாதுகாத்துக் கொண்டாள்
farjahā
فَرْجَهَا
தனது மறைவிடத்தை
fanafakhnā
فَنَفَخْنَا
நாம் ஊதினோம்
fīhā
فِيهَا
அவளில்
min rūḥinā
مِن رُّوحِنَا
நமது உயிரிலிருந்து
wajaʿalnāhā
وَجَعَلْنَٰهَا
இன்னும் அவளைஆக்கினோம்
wa-ib'nahā
وَٱبْنَهَآ
அவளுடைய மகனையும்
āyatan
ءَايَةً
ஓர் அத்தாட்சியாக
lil'ʿālamīna
لِّلْعَٰلَمِينَ
அகிலத்தார்களுக்கு
தன் கற்பைக் காத்துக்கொண்ட (மர்யம் என்ப)வரை(யும் நீங்கள் ஞாபகமூட்டுங்கள். நம்முடைய தூதர்) ஜிப்ரீல் மூலம் அவருடைய கர்ப்பத்தில் நாம் ஊதினோம். அவரையும் அவருடைய மகனையும் உலகத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௯௧)
Tafseer
௯௨

اِنَّ هٰذِهٖٓ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةًۖ وَّاَنَا۠ رَبُّكُمْ فَاعْبُدُوْنِ ٩٢

inna
إِنَّ
நிச்சயமாக
hādhihi
هَٰذِهِۦٓ
இதுதான்
ummatukum
أُمَّتُكُمْ
உங்களது
ummatan wāḥidatan
أُمَّةً وَٰحِدَةً
ஒரே மார்க்கம்
wa-anā
وَأَنَا۠
நான்தான்
rabbukum
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
fa-uʿ'budūni
فَٱعْبُدُونِ
ஆகவே, என்னை வணங்குங்கள்
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அனைவரும் (ஒரே மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டிய) ஒரே வகுப்பார்தான். (இதில் ஜாதி வேற்றுமை கிடையாது.) உங்கள் அனைவருக்கும் இறைவன் நான் ஒருவனே! ஆகவே, என்னையே நீங்கள் வணங்குங்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௯௨)
Tafseer
௯௩

وَتَقَطَّعُوْٓا اَمْرَهُمْ بَيْنَهُمْۗ كُلٌّ اِلَيْنَا رَاجِعُوْنَ ࣖ ٩٣

wataqaṭṭaʿū
وَتَقَطَّعُوٓا۟
பிரிந்து விட்டனர்
amrahum
أَمْرَهُم
காரியத்தில் தங்கள்
baynahum
بَيْنَهُمْۖ
தங்களுக்கு மத்தியில்
kullun
كُلٌّ
எல்லோரும்
ilaynā
إِلَيْنَا
நம்மிடமே
rājiʿūna
رَٰجِعُونَ
திரும்புவார்கள்
எனினும் இவர்கள் தங்களுக்குள் (வேறுபட்டு) பல பிரிவுகளாக பிரிந்துவிட்டனர். இவர்கள் அனைவரும் நம்மிடம் திரும்ப வரக்கூடியவர்கள்தான். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௯௩)
Tafseer
௯௪

فَمَنْ يَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْيِهٖۚ وَاِنَّا لَهٗ كَاتِبُوْنَ ٩٤

faman
فَمَن
யார்
yaʿmal
يَعْمَلْ
செய்வாரோ
mina l-ṣāliḥāti
مِنَ ٱلصَّٰلِحَٰتِ
நற்காரியங்களை
wahuwa mu'minun
وَهُوَ مُؤْمِنٌ
தான் நம்பிக்கையாளராக இருந்து
falā kuf'rāna lisaʿyihi
فَلَا كُفْرَانَ لِسَعْيِهِۦ
மறுக்கப்படாது/முயற்சியை/அவருடைய
wa-innā
وَإِنَّا
நிச்சயமாக நாம்
lahu
لَهُۥ
அதை
kātibūna
كَٰتِبُونَ
பதிவு செய்கிறோம்
ஆகவே, (இவர்களில்) எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுடைய முயற்சி வீணாகிவிடாது. நிச்சயமாக நாம் அவைகளைப் பதிவு செய்து வருகிறோம். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௯௪)
Tafseer
௯௫

وَحَرَامٌ عَلٰى قَرْيَةٍ اَهْلَكْنٰهَآ اَنَّهُمْ لَا يَرْجِعُوْنَ ٩٥

waḥarāmun
وَحَرَٰمٌ
விதிக்கப்பட்டுவிட்டது
ʿalā
عَلَىٰ
மீது
qaryatin
قَرْيَةٍ
ஊர் (மக்கள்)
ahlaknāhā
أَهْلَكْنَٰهَآ
நாம் அழித்து விட்டோம்/அதை
annahum
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
lā yarjiʿūna
لَا يَرْجِعُونَ
திரும்பவே மாட்டார்கள்
நாம் எவ்வூரார்களை அழித்துவிட்டோமோ அவர்கள் நிச்சயமாக (உலகிற்கு) திரும்பவே மாட்டார்கள் என விதிக்கப் பட்டுள்ளது. ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௯௫)
Tafseer
௯௬

حَتّٰىٓ اِذَا فُتِحَتْ يَأْجُوْجُ وَمَأْجُوْجُ وَهُمْ مِّنْ كُلِّ حَدَبٍ يَّنْسِلُوْنَ ٩٦

ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā futiḥat
إِذَا فُتِحَتْ
திறக்கப்பட்டால்
yajūju
يَأْجُوجُ
யஃஜூஜ்
wamajūju
وَمَأْجُوجُ
இன்னும் மஃஜூஜ்
wahum
وَهُم
அவர்கள்
min kulli
مِّن كُلِّ
எல்லா இடத்திலிருந்து
ḥadabin
حَدَبٍ
உயரமான
yansilūna
يَنسِلُونَ
விரைந்து வருவார்கள்
யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்திற்கு வழி திறக்கப்பட்டால் அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் (தண்ணீர் பாய்ந்து ஓடுவதைப் போல்) வழிந்து (உலகின் பல பாகங்களிலும் அதி சீக்கிரத்தில் பரவி) விடுவார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௯௬)
Tafseer
௯௭

وَاقْتَرَبَ الْوَعْدُ الْحَقُّ فَاِذَا هِيَ شَاخِصَةٌ اَبْصَارُ الَّذِيْنَ كَفَرُوْاۗ يٰوَيْلَنَا قَدْ كُنَّا فِيْ غَفْلَةٍ مِّنْ هٰذَا بَلْ كُنَّا ظٰلِمِيْنَ ٩٧

wa-iq'taraba
وَٱقْتَرَبَ
சமீபமாகிவிடும்
l-waʿdu
ٱلْوَعْدُ
வாக்கு
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மையான
fa-idhā hiya
فَإِذَا هِىَ
அப்போது
shākhiṣatun
شَٰخِصَةٌ
கூர்மையாகிவிடும்
abṣāru
أَبْصَٰرُ
பார்வைகள்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களின்
yāwaylanā
يَٰوَيْلَنَا
எங்கள் நாசமே
qad
قَدْ
திட்டமாக
kunnā
كُنَّا
இருந்து விட்டோம்
fī ghaflatin
فِى غَفْلَةٍ
அலட்சியத்தில்
min hādhā
مِّنْ هَٰذَا
இதை விட்டு
bal
بَلْ
மாறாக
kunnā
كُنَّا
இருந்தோம்
ẓālimīna
ظَٰلِمِينَ
அநியாயக்காரர்களாக
(உலக முடிவு பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கிவிட்டது. (அது வரும் பட்சத்தில் அதைக் காணும்) நிராகரிப்பவர்களின் கண்கள் திறந்தது திறந்தவாறே இருக்கும். (அன்றி அவர்கள்) "எங்களுக்குக் கேடுதான். நிச்சயமாக நாங்கள் இதனைப்பற்றி கவலையற்றவர்களாக இருந்தோமே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோமே!" (என்று புலம்புவார்கள்). ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௯௭)
Tafseer
௯௮

اِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ حَصَبُ جَهَنَّمَۗ اَنْتُمْ لَهَا وَارِدُوْنَ ٩٨

innakum
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்களும்
wamā taʿbudūna
وَمَا تَعْبُدُونَ
நீங்கள் வணங்குகின்றவையும்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
ḥaṣabu
حَصَبُ
எறியப்படுபவை
jahannama
جَهَنَّمَ
நரகத்தில்
antum lahā
أَنتُمْ لَهَا
நீங்கள் அதில்
wāridūna
وَٰرِدُونَ
நுழைவீர்கள்
(அச்சமயம் அவர்களை நோக்கி) "நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவைகளும் நரகத்தின் எரிகட்டையாகி விட்டீர்கள். நீங்கள் அனைவரும் அங்கு செல்ல வேண்டியவர்கள்தாம்" (என்று கூறப்படும்). ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௯௮)
Tafseer
௯௯

لَوْ كَانَ هٰٓؤُلَاۤءِ اٰلِهَةً مَّا وَرَدُوْهَاۗ وَكُلٌّ فِيْهَا خٰلِدُوْنَ ٩٩

law kāna hāulāi
لَوْ كَانَ هَٰٓؤُلَآءِ
இருந்திருந்தால் இவை
ālihatan
ءَالِهَةً
கடவுள்களாக
mā waradūhā
مَّا وَرَدُوهَاۖ
அதில் நுழைந்திருக்க மாட்டார்கள்
wakullun
وَكُلٌّ
எல்லோரும்
fīhā
فِيهَا
அதில்
khālidūna
خَٰلِدُونَ
நிரந்தரமாக தங்கக்கூடியவர்கள்
(அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த) இவை (உண்மையான) தெய்வங்களாக இருந்தால் நரகத்திற்கு வந்தே இருக்காது. எனினும், அவர்கள் அனைவரும் (நரகத்தில் தள்ளப்பட்டு) என்றென்றும் அதில் தங்கிவிடுவார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௯௯)
Tafseer
௧௦௦

لَهُمْ فِيْهَا زَفِيْرٌ وَّهُمْ فِيْهَا لَا يَسْمَعُوْنَ ١٠٠

lahum
لَهُمْ
அவர்களுக்கு
fīhā
فِيهَا
அதில் உண்டு
zafīrun
زَفِيرٌ
மூச்சு வெளியேறுதல்
wahum
وَهُمْ
இன்னும் அவர்கள்
fīhā
فِيهَا
அதில்
lā yasmaʿūna
لَا يَسْمَعُونَ
செவியுறமாட்டார்கள்
அதில் அவர்கள் திணறித் திணறிக் (கழுதையைப் போல்) கதறுவார்கள். (மற்றெவரின் சப்தமும்) அவர்கள் காதில் விழாது. ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௦௦)
Tafseer