குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௮௫
Qur'an Surah Al-Baqarah Verse 85
ஸூரத்துல் பகரா [௨]: ௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ اَنْتُمْ هٰٓؤُلَاۤءِ تَقْتُلُوْنَ اَنْفُسَكُمْ وَتُخْرِجُوْنَ فَرِيْقًا مِّنْكُمْ مِّنْ دِيَارِهِمْۖ تَظٰهَرُوْنَ عَلَيْهِمْ بِالْاِثْمِ وَالْعُدْوَانِۗ وَاِنْ يَّأْتُوْكُمْ اُسٰرٰى تُفٰدُوْهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْكُمْ اِخْرَاجُهُمْ ۗ اَفَتُؤْمِنُوْنَ بِبَعْضِ الْكِتٰبِ وَتَكْفُرُوْنَ بِبَعْضٍۚ فَمَا جَزَاۤءُ مَنْ يَّفْعَلُ ذٰلِكَ مِنْكُمْ اِلَّا خِزْيٌ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۚوَيَوْمَ الْقِيٰمَةِ يُرَدُّوْنَ اِلٰٓى اَشَدِّ الْعَذَابِۗ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ (البقرة : ٢)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- antum
- أَنتُمْ
- you
- நீங்கள்
- hāulāi
- هَٰٓؤُلَآءِ
- (are) those
- ஓ இவர்களே
- taqtulūna
- تَقْتُلُونَ
- (who) kill
- கொன்றீர்கள்
- anfusakum
- أَنفُسَكُمْ
- yourselves
- உங்களை
- watukh'rijūna
- وَتُخْرِجُونَ
- and evict
- இன்னும் வெளியேற்றுகிறீர்கள்
- farīqan
- فَرِيقًا
- a party
- ஒரு பிரிவினரை
- minkum
- مِّنكُم
- of you
- உங்களில்
- min
- مِّن
- from
- இருந்து
- diyārihim
- دِيَٰرِهِمْ
- their homes
- இல்லங்கள்/ அவர்களுடைய
- taẓāharūna
- تَظَٰهَرُونَ
- you support one another
- உதவுகிறீர்கள்
- ʿalayhim
- عَلَيْهِم
- against them
- அவர்களுக்கு எதிராக
- bil-ith'mi
- بِٱلْإِثْمِ
- in sin
- பாவமாக
- wal-ʿud'wāni
- وَٱلْعُدْوَٰنِ
- and [the] transgression
- இன்னும் அநியாயம்
- wa-in yatūkum
- وَإِن يَأْتُوكُمْ
- And if they come to you
- அவர்கள் வந்தால்/உங்களிடம்
- usārā
- أُسَٰرَىٰ
- (as) captives
- கைதிகளாக
- tufādūhum
- تُفَٰدُوهُمْ
- you ransom them
- ஈடுகொடுத்து மீட்கிறீர்கள்/அவர்களை
- wahuwa
- وَهُوَ
- while it
- அதுவோ
- muḥarramun
- مُحَرَّمٌ
- (was) forbidden
- தடுக்கப்பட்டது
- ʿalaykum
- عَلَيْكُمْ
- to you
- உங்கள் மீது
- ikh'rājuhum
- إِخْرَاجُهُمْۚ
- their eviction
- வெளியேற்றுவது/அவர்களை
- afatu'minūna
- أَفَتُؤْمِنُونَ
- So do you believe
- நம்பிக்கை கொள்கிறீர்கள்?
- bibaʿḍi
- بِبَعْضِ
- in part (of)
- சிலவற்றை
- l-kitābi
- ٱلْكِتَٰبِ
- the Book
- வேதத்தில்
- watakfurūna
- وَتَكْفُرُونَ
- and disbelieve
- இன்னும் நிராகரிக்கிறீர்கள்
- bibaʿḍin
- بِبَعْضٍۚ
- in part?
- சிலவற்றை
- famā
- فَمَا
- Then what
- இல்லை
- jazāu
- جَزَآءُ
- (should be the) recompense
- கூலி
- man
- مَن
- (for the one) who
- எவர்
- yafʿalu
- يَفْعَلُ
- does
- செய்கிறார்
- dhālika
- ذَٰلِكَ
- that
- அதை
- minkum
- مِنكُمْ
- among you
- உங்களில்
- illā
- إِلَّا
- except
- தவிர
- khiz'yun
- خِزْىٌ
- disgrace
- இழிவு
- fī l-ḥayati
- فِى ٱلْحَيَوٰةِ
- in the life
- வாழ்க்கையில்
- l-dun'yā
- ٱلدُّنْيَاۖ
- (of) the world
- இவ்வுலகம்
- wayawma l-qiyāmati
- وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ
- and (on the) Day of [the] Resurrection
- இன்னும் மறுமை நாளில்
- yuraddūna
- يُرَدُّونَ
- they will be sent back
- திருப்பப்படுவார்கள்
- ilā
- إِلَىٰٓ
- to
- பக்கம்
- ashaddi
- أَشَدِّ
- (the) most severe
- மிகக் கடுமையானது
- l-ʿadhābi
- ٱلْعَذَابِۗ
- punishment?
- வேதனை
- wamā l-lahu
- وَمَا ٱللَّهُ
- And not (is) Allah
- இல்லை/அல்லாஹ்
- bighāfilin
- بِغَٰفِلٍ
- unaware
- கவனமற்றவனாக
- ʿammā taʿmalūna
- عَمَّا تَعْمَلُونَ
- of what you do
- எதைப் பற்றி/ செய்கிறீர்கள்
Transliteration:
Summa antum haaa'ulaaa'i taqtuloona anfusakum wa tukhrijoona fareeqam minkum min diyaarihim tazaaharoona 'alaihim bil ismi wal'udwaani wa iny yaatookum usaaraa tufaadoohum wahuwa muharramun 'alaikum ikhraajuhum; afatu' mi-noona biba'dil Kitaabi wa takfuroona biba'd; famaa jazaaa'u mai yaf'alu zaalika minkum illaa khizyun fil hayaatid-dunyaa wa yawmal qiyaamati yuraddoona ilaaa ashaddil 'azaab; wa mal laahu bighaafilin 'ammaa ta'maloon(QS. al-Baq̈arah:85)
English Sahih International:
Then, you are those [same ones who are] killing one another and evicting a party of your people from their homes, cooperating against them in sin and aggression. And if they come to you as captives, you ransom them, although their eviction was forbidden to you. So do you believe in part of the Scripture and disbelieve in part? Then what is the recompense for those who do that among you except disgrace in worldly life; and on the Day of Resurrection they will be sent back to the severest of punishment. And Allah is not unaware of what you do. (QS. Al-Baqarah, Ayah ௮௫)
Abdul Hameed Baqavi:
இவ்வாறு உறுதிப்படுத்திய பின்னரும் நீங்கள் உங்(கள் மனிதர்)களைக் கொலை செய்து விடுகின்றீர்கள். உங்களில் பலரை அவர்கள் இல்லங்களில் இருந்தும் வெளியேற்றி விடுகின்றீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமாகவும் அநியாயமாகவும் (அவர்களுடைய எதிரிகளுக்கு) நீங்கள் உதவியும் செய்கின்றீர்கள். (ஆனால், நீங்கள் வெளியேற்றிய) அவர்கள் (எதிரிகளின் கையில் சிக்கிச்) கைதிகளாக உங்களிடம் (உதவி தேடி) வந்து விட்டாலோ அவர்களுக்காக நீங்கள் (பொருளை) ஈடுகொடுத்து (அவர்களை மீட்டு) விடுகின்றீர்கள். ஆனால், அவர்களை அவர்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றுவதும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. (இவ்வாறு செய்யும்) நீங்கள் வேதத்தில் (உள்ள) சில கட்டளைகளை நம்பிக்கை கொண்டு, சில கட்டளைகளை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் எவர்கள் இவ்வாறு செய்கின்றார்களோ அவர்களுக்கு இவ்வுலகத்தில் இழிவைத் தவிர (வேறொன்றும்) கிடைக்காது. மறுமையிலோ, (அவர்கள்) கடுமையான வேதனையின் பக்கம் விரட்டப்படுவார்கள். உங்களுடைய இச்செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை. (ஸூரத்துல் பகரா, வசனம் ௮௫)
Jan Trust Foundation
(இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே உங்களிடையே கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே ஒருசாராரை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்கள்மீது அக்கிரமம் புரியவும், பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் (இவ்விரோதிகளிடம் சிக்கி) கைதிகளாக உங்களிடம் வந்தால், (அப்பொழுது மட்டும் பழிப்புக்கு அஞ்சி) நஷ்டஈடு பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள்-ஆனால் அவர்களை (வீடுகளை விட்டு) வெளியேற்றுவது உங்கள் மீது ஹராமா(ன தடுக்கப்பட்ட செயலா)கும். (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இவ்வாறு உறுதிப்படுத்திய) இவர்களே! பிறகு நீங்கள் உங்(கள் மக்)களைக் கொல்கிறீர்கள்; உங்களில் ஒரு பிரிவினரை அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்களுக்கு எதிராக பாவமாகவும் அநியாயமாகவும் உதவுகிறீர்கள்; கைதிகளாக உங்களிடம் அவர்கள் வந்தால் அவர்களை ஈடுகொடுத்து மீட்கிறீர்கள். அவர்களை (அவர்களின் இல்லங்களிலிருந்து) வெளியேற்றுவதோ உங்கள் மீது தடுக்கப்பட்டதாகும். நீங்கள் வேதத்தில் சிலவற்றை நம்பிக்கை கொண்டு, சிலவற்றை நிராகரிக்கிறீர்களா? உங்களில் அதைச் செய்பவர்களின் கூலி இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர (வேறு) இல்லை. மறுமை நாளிலோ, (அவர்கள்) மிகக் கடுமையான வேதனையின் பக்கம் திருப்பப்படுவார்கள். நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.