Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௬௮

Qur'an Surah Al-Baqarah Verse 68

ஸூரத்துல் பகரா [௨]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا هِيَ ۗ قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا فَارِضٌ وَّلَا بِكْرٌۗ عَوَانٌۢ بَيْنَ ذٰلِكَ ۗ فَافْعَلُوْا مَا تُؤْمَرُوْنَ (البقرة : ٢)

qālū
قَالُوا۟
They said
கூறினார்கள்
ud'ʿu
ٱدْعُ
"Pray
பிரார்த்திப்பீராக
lanā
لَنَا
for us
எங்களுக்காக
rabbaka
رَبَّكَ
(to) your Lord
உம் இறைவனிடம்
yubayyin
يُبَيِّن
to make clear
விவரிப்பான்
lanā
لَّنَا
to us
எங்களுக்கு
مَا
what
என்ன?
hiya
هِىَۚ
it (is)"
அது
qāla
قَالَ
He said
கூறினார்
innahu
إِنَّهُۥ
"Indeed He
நிச்சயமாக அவன்
yaqūlu
يَقُولُ
says
கூறுகிறான்
innahā
إِنَّهَا
"[Indeed] it
நிச்சயமாக அது
baqaratun
بَقَرَةٌ
(is) a cow
பசு
lā fāriḍun
لَّا فَارِضٌ
not old
கிழடு அல்ல
walā bik'run
وَلَا بِكْرٌ
and not young
இன்னும் இளங்கன்றல்ல
ʿawānun
عَوَانٌۢ
middle aged
நடுத்தரமானது
bayna
بَيْنَ
between
மத்தியில்
dhālika
ذَٰلِكَۖ
that"
அதற்கு
fa-if'ʿalū
فَٱفْعَلُوا۟
so do
எனவே செய்யுங்கள்
mā tu'marūna
مَا تُؤْمَرُونَ
what you are commanded"
எதை/ஏவப்படுகிறீர்கள்

Transliteration:

Qaalud-'u lanaa rabbaka yubaiyil lanaa maa hee; qaala innahoo yaqoolu innahaa baqaratul laa faaridunw wa laa bikrun 'awaanum baina zaalika faf'aloo maa tu'maroon (QS. al-Baq̈arah:68)

English Sahih International:

They said, "Call upon your Lord to make clear to us what it is." [Moses] said, "[Allah] says, 'It is a cow which is neither old nor virgin, but median between that,' so do what you are commanded." (QS. Al-Baqarah, Ayah ௬௮)

Abdul Hameed Baqavi:

"அ(ந்த மாட்டின் வய)து என்னவென்று எங்களுக்கு அறிவிக்கும்படி உங்களது இறைவனைக் கேளுங்கள்" என்றார்கள். (அதற்கு மூஸா) "நிச்சயமாக அது கிழடும் அல்ல; இளங்கன்றுமல்ல. மத்திய பருவத்திலுள்ள ஒரு மாடு என அவன் கூறுகிறான்" எனக் கூறி "உங்களுக்கிடப்பட்ட கட்டளையை நீங்கள் நிறைவேற்றுங்கள்" என்றார். (ஸூரத்துல் பகரா, வசனம் ௬௮)

Jan Trust Foundation

“அது எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!” என்றார்கள். “அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். எனவே “உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்“ என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக” (மூஸா) கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அ(ந்த மாட்டின் வய)து என்னவென்று எங்களுக்கு அவன் விவரிப்பான்" எனக் கூறினார்கள். "நிச்சயமாக அது கிழடும் அல்ல; இளங்கன்றுமல்ல. அதற்கு மத்தியில் நடுத்தரமான ஒரு பசு என நிச்சயமாக அவன் கூறுகிறான். எனவே, நீங்கள் ஏவப்படுவதைச் செய்யுங்கள்" எனக் கூறினார்.