குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௫௮
Qur'an Surah Al-Baqarah Verse 58
ஸூரத்துல் பகரா [௨]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذْ قُلْنَا ادْخُلُوْا هٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوْا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَّادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَّقُوْلُوْا حِطَّةٌ نَّغْفِرْ لَكُمْ خَطٰيٰكُمْ ۗ وَسَنَزِيْدُ الْمُحْسِنِيْنَ (البقرة : ٢)
- wa-idh qul'nā
- وَإِذْ قُلْنَا
- And when We said
- இன்னும் சமயம்/கூறினோம்
- ud'khulū
- ٱدْخُلُوا۟
- "Enter
- நுழையுங்கள்
- hādhihi
- هَٰذِهِ
- this
- இந்த
- l-qaryata
- ٱلْقَرْيَةَ
- town
- ஊரில்
- fakulū
- فَكُلُوا۟
- then eat
- இன்னும் புசியுங்கள்
- min'hā
- مِنْهَا
- from [it]
- அதில்
- ḥaythu
- حَيْثُ
- wherever
- விதத்தில்
- shi'tum
- شِئْتُمْ
- you wish[ed]
- நாடினீர்கள்
- raghadan
- رَغَدًا
- abundantly
- தாராளமாக
- wa-ud'khulū
- وَٱدْخُلُوا۟
- and enter
- இன்னும் நுழையுங்கள்
- l-bāba
- ٱلْبَابَ
- the gate
- வாசலில்
- sujjadan
- سُجَّدًا
- prostrating
- தலைகுனிந்தவர்களாக
- waqūlū
- وَقُولُوا۟
- And say
- இன்னும் கூறுங்கள்
- ḥiṭṭatun
- حِطَّةٌ
- "Repentance
- பாவச்சுமை நீங்குக!
- naghfir
- نَّغْفِرْ
- We will forgive
- மன்னிப்போம்
- lakum
- لَكُمْ
- for you
- உங்களுக்கு
- khaṭāyākum
- خَطَٰيَٰكُمْۚ
- your sins
- குற்றங்களை/உங்கள்
- wasanazīdu
- وَسَنَزِيدُ
- And We will increase
- இன்னும் அதிகப்படுத்துவோம்
- l-muḥ'sinīna
- ٱلْمُحْسِنِينَ
- the good-doers (in reward)"
- நல்லறம் புரிவோருக்கு
Transliteration:
Wa iz qulnad khuloo haazihil qaryata fakuloo minhaa haisu shi'tum raghadanw wadkhulul baaba sujjadanw wa qooloo hittatun naghfir lakum khataayaakum; wa sanazeedul muhsineen(QS. al-Baq̈arah:58)
English Sahih International:
And [recall] when We said, "Enter this city [i.e., Jerusalem] and eat from it wherever you will in [ease and] abundance, and enter the gate bowing humbly and say, 'Relieve us of our burdens [i.e., sins].' We will [then] forgive your sins for you, and We will increase the doers of good [in goodness and reward]." (QS. Al-Baqarah, Ayah ௫௮)
Abdul Hameed Baqavi:
அன்றி (உங்கள் மூதாதையர்களை நோக்கி) "நீங்கள் இந்த நகருக்கு சென்று அதில் உங்களுக்கு விருப்பமான இடத்தில் (விருப்ப மானவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள். அதன் வாயிலில் (நுழையும் பொழுது) தலைகுனிந்து செல்லுங்கள். "ஹித்ததுன்" (எங்கள் பாவச்சுமை நீங்குக!) எனவும் கூறுங்கள். உங்களுடைய குற்றங்களை நாம் மன்னித்துவிடுவோம். நன்மை செய்தவர்களுக்கு (அதன் கூலியை) அதிகப்படுத்தியும் கொடுப்போம்" எனக் கூறியிருந்தோம். (ஸூரத்துல் பகரா, வசனம் ௫௮)
Jan Trust Foundation
இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம் “ இந்த பட்டிணத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள் அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி “ஹித்ததுன்” (-“எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்”) என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
"நீங்கள் இந்த ஊரில் நுழையுங்கள்; அதில் நீங்கள் நாடிய விதத்தில் தாராளமாகப் புசியுங்கள்; (அதன்) வாசலில் தலைகுனிந்தவர்களாக நுழையுங்கள்; (எங்கள்) பாவச்சுமை நீங்குக! எனக் கூறுங்கள்; உங்கள் குற்றங்களை உங்களுக்கு மன்னிப்போம், நல்லறம் புரிவோருக்கு (நன்மையை மேலும்) அதிகப்படுத்துவோம்" என நாம் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்.