Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௩௬

Qur'an Surah Al-Baqarah Verse 36

ஸூரத்துல் பகரா [௨]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاَزَلَّهُمَا الشَّيْطٰنُ عَنْهَا فَاَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيْهِ ۖ وَقُلْنَا اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۚ وَلَكُمْ فِى الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰى حِيْنٍ (البقرة : ٢)

fa-azallahumā
فَأَزَلَّهُمَا
Then made [both of] them slip
பிறழச் செய்தான்/அவ்விருவரை
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
the Shaitaan
ஷைத்தான்
ʿanhā
عَنْهَا
from it
அதிலிருந்து
fa-akhrajahumā
فَأَخْرَجَهُمَا
and he got [both of] them out
வெளியேற்றினான்/அவ்விருவரை
mimmā
مِمَّا
from what
எதிலிருந்து
kānā
كَانَا
they [both] were
இருவரும்இருந்தனர்
fīhi
فِيهِۖ
in [it]
அதில்
waqul'nā
وَقُلْنَا
And We said
இன்னும் கூறினோம்
ih'biṭū
ٱهْبِطُوا۟
"Go down (all of you)
இறங்குங்கள்
baʿḍukum
بَعْضُكُمْ
some of you
உங்களில் சிலர்
libaʿḍin
لِبَعْضٍ
to others
சிலருக்கு
ʿaduwwun
عَدُوٌّۖ
(as) enemy
எதிரி
walakum
وَلَكُمْ
and for you
இன்னும் உங்களுக்கு
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
mus'taqarrun
مُسْتَقَرٌّ
(is) a dwelling place
வசிக்குமிடம்
wamatāʿun
وَمَتَٰعٌ
and a provision
இன்னும் இன்பம்
ilā
إِلَىٰ
for
வரை
ḥīnin
حِينٍ
a period"
ஒரு காலம்

Transliteration:

Fa azallahumash Shaitaanu 'anhaa fa akhrajahumaa mimmaa kaanaa fee wa qulnah bitoo ba'dukum liba'din 'aduwwunw wa lakum fil ardi mustaqarrunw wa mataa'un ilaa heen (QS. al-Baq̈arah:36)

English Sahih International:

But Satan caused them to slip out of it and removed them from that [condition] in which they had been. And We said, "Go down, [all of you], as enemies to one another, and you will have upon the earth a place of settlement and provision for a time." (QS. Al-Baqarah, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

எனினும் (இப்லீஸாகிய) ஷைத்தான் அவ்விருவரையும் (தடுக்கப்பட்டிருந்த மரத்தை அணுகித்) தவறிழைக்கும்படிச் செய்து அச்சோலையை விட்டும், அவ்விருவரும் இருந்த (மேலான) நிலைமையிலிருந்தும் அவர்களை வெளியேறும்படி செய்து விட்டான். ஆகவே (அவர்களை நோக்கி) "உங்களில் சிலர் சிலருக்கு எதிரியாவர். (இச்சோலையிலிருந்து) நீங்கள் இறங்கிவிடுங்கள். உங்களுக்கு பூமியில்தான் வசிக்க இடமுண்டு. அதில் சிறிது காலம் வரையில் சுகமும் அனுபவிக்கலாம்" என நாம் கூறினோம். (ஸூரத்துல் பகரா, வசனம் ௩௬)

Jan Trust Foundation

இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஷைத்தான் அவ்விருவரை அதிலிருந்து பிறழச் செய்தான்; அவ்விருவர் இருந்ததிலிருந்து அவ்விருவரை வெளியேற்றினான். "நீங்கள் இறங்குங்கள் உங்களில் சிலர் சிலருக்கு எதிரியாவர். உங்களுக்குப் பூமியில் வசிக்குமிடமும் ஒரு காலம் வரை இன்பமும் உண்டு" எனக் கூறினோம்.