குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௩௫
Qur'an Surah Al-Baqarah Verse 35
ஸூரத்துல் பகரா [௨]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقُلْنَا يٰٓاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَاۖ وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِيْنَ (البقرة : ٢)
- waqul'nā
- وَقُلْنَا
- And We said
- இன்னும் கூறினோம்
- yāādamu
- يَٰٓـَٔادَمُ
- "O Adam!
- ஆதமே
- us'kun
- ٱسْكُنْ
- Dwell
- வசிப்பீராக
- anta
- أَنتَ
- you
- நீர்
- wazawjuka
- وَزَوْجُكَ
- and your spouse
- இன்னும் உம் மனைவி
- l-janata
- ٱلْجَنَّةَ
- (in) Paradise
- சொர்க்கத்தில்
- wakulā
- وَكُلَا
- and [you both] eat
- இன்னும் இருவரும் சாப்பிடுங்கள்
- min'hā
- مِنْهَا
- from it
- அதிலிருந்து
- raghadan
- رَغَدًا
- freely
- தாராளமாக
- ḥaythu shi'tumā
- حَيْثُ شِئْتُمَا
- (from) wherever you [both] wish
- விதத்தில்/இருவரும் நாடினீர்கள்
- walā taqrabā
- وَلَا تَقْرَبَا
- But do not [you two] approach
- இன்னும் இருவரும் நெருங்காதீர்கள்
- hādhihi
- هَٰذِهِ
- this
- இந்த
- l-shajarata
- ٱلشَّجَرَةَ
- [the] tree
- மரத்தை
- fatakūnā
- فَتَكُونَا
- lest you [both] be
- இருவரும் ஆகிவிடுவீர்கள்
- mina l-ẓālimīna
- مِنَ ٱلظَّٰلِمِينَ
- of the wrongdoers"
- அநியாயக்காரர்களில்
Transliteration:
Wa qulnaa yaaa Aadamus kun anta wa zawjukal jannata wa kulaa minhaa raghadan haisu shi'tumaa wa laa taqabaa haazihish shajarata fatakoonaa minaz zaalimeen(QS. al-Baq̈arah:35)
English Sahih International:
And We said, "O Adam, dwell, you and your wife, in Paradise and eat therefrom in [ease and] abundance from wherever you will. But do not approach this tree, lest you be among the wrongdoers." (QS. Al-Baqarah, Ayah ௩௫)
Abdul Hameed Baqavi:
பின்னர் நாம் (ஆதமுக்குத் துணையாக அவர் மனைவியைப் படைத்து ஆதமை நோக்கி) "ஆதமே! நீங்கள் உங்களுடைய மனைவியுடன் இச்சோலையில் வசித்திருங்கள். நீங்கள் இருவரும் இதில் விரும்பும் இடத்தில் (விரும்பியவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள். ஆனால் இந்த மரத்தை அணுகாதீர்கள். அணுகினால் நீங்கள் இருவரும் (உங்களுக்குத்) தீங்கிழைத்துக் கொண்டவர் களாவீர்கள்" என்று கூறினோம். (ஸூரத்துல் பகரா, வசனம் ௩௫)
Jan Trust Foundation
மேலும் நாம், “ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்” என்று சொன்னோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
"ஆதமே! நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் வசிப்பீராக! இருவரும் அதில் நாடிய விதத்தில் தாராளமாக சாப்பிடுங்கள். இந்த மரத்தை இருவரும் நெருங்காதீர்கள். (நெருங்கினால்) இருவரும் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்கள்" எனக் கூறினோம்.